Friday, March 25, 2016

டாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்போது....

1  எவ்வளவு வயதானாலும் வீட்டில்
எலி குறுக்கே நெடுக்கு ஓடினால் பயம் வருது :(

 மேடம், அதுதான் MOUSE சோட மவுசு

==============


டாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்போது தூக்கம் கலைஞ்சிடுது


ஆப் த ரெகார்டா சொல்றேன்.பெட் ரூம் போகும்போதே ஆப் பண்ணிடுங்க===========

3 தலைவரே! பிரதமராவேதே என் கனவுன்னு எந்த நம்பிக்கைல சொல்றீங்க?


அவநம்பிக்கைல தான்============

4 நான் முதல்வர் ஆனால் கட்டுரை பிரமாதம்.ஆனா எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?


டீச்சர். பாமக மாநாட்ல இருந்து சுட்டதுதான்


============


5 திருடுனவன் மோடியோட தீவிர ரசிகன்னு எப்டி யூகிக்கறீங்க?


பேங்க்ல 10 கோடி கொள்ளை அடிச்ட்டு 10% டாக்ஸ் கட்டிட்டுப்போய் இருக்கான்===============


6 சார், பிரமாதமான படமான THE WALK படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது தரலை?
சாரி, அது அஜித் நடிச்ச தமிழ்ப்படம்னு நினைச்ட்டோம்

=====================

7 டைரக்டர் சார், சாரி, நான் நகைக்கடை ஸ்ட்ரைக்குக்கு ஆதரவு தெரிவிச்சு 3 நாள் கவர்ச்சி காட்டமாட்டேன்.ஓஹோ, அப்போ சம்பளத்தை அங்கேயே வாங்கிக்குங்க
============

8 தலைவரே! இந்த வயசான காலத்திலும் மக்களுக்கு சேவை ஆற்ற துடிப்பது ஏன்?ஓய்வு எடுக்கலாமில்ல?
என்னைத்தவிர யார் சம்பாதிச்சாலும் எனக்கு பிடிக்காது================
9 சார் , ஜோக் சொல்லிட்டே எதுக்கு என் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டீங்க?
கோபம் வர்ற மாதிரி காமெடின்னா இதான். நீங்க தானே கேட்டீங்க?
==============
10 தலைவரே! 60 வருசமா உங்க கூடவே உழைப்பவருக்கு ஒரு வாய்ப்பு தரலாமில்ல?என் சொந்தப்பையனுக்கு என் பதவியை விட்டுத்தரவே மனசு வரமாட்டேங்குது
===============11 என்ன சார்? உங்க பொண்ணுக்கு சப்ஸ்ட்ராக்சன் (-)யுக்தான்னு பேர் வெச்சிருக்கீங்க?
ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு சம்(SUM)யுக்தான்னு வெச்சுட்டனே?
===============12 தலைவரே! FBல யாரோட பதிவையும் ஷேர் செய்ய மாட்டேங்கறீங்களே ,ஏன்?


எல்லா ஷேரும் எனக்கே.எல்லா பதவி CHAIRம் எனக்கே

=============

13

நம்ம ஜனநாயகம் குப்புற.விழுந்து கிடக்கு
எப்டி சொல்றீங்க?
ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் MLA,MP எல்லோரும் குப்புற விழுந்துதானே கிடக்காக?


===============

14 தலைவரே! வேற ஒரு கட்சியோட தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கறீங்களாமே?

ஸ்கூல் ல எக்சாம் ஹால் ல காபி அடிக்காதோர் மட்டும் என் மீது கல் வீசவும்


============


15 தலைவரே! தொகுதி மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா என்ன செய்வீங்க?


டெல்லிக்கு கடிதம் எழுதுவேன்


உங்க மகள் ஊழல் வழக்கில் சிக்கினா?

உடனே டெல்லி போய்டுவேன்

=============


16 தலைவரே!வெட்கமே இல்லாம என்னை கூட்டணிக்கு கூப்பிடறாங்கன்னு சொன்னவர் கூட ஏன் கூட்டணி வெச்சுக்கிட்டீங்க?

தேர்தல் முடியட்டும்.துரத்திடறோம்


=============

17 தலைவரே! ஸ்மிருதி இரானிக்கு எதிர்ப்பு தெரிவிச்சீங்களாமே?

ஆமா ! ராணி க்கு 3,சுழி ண.தான் வரனும்.கடும் கண்டனங்கள்

============

18 உங்க கட்சி ஆளுங்க எல்லாம் எதுக்கு இப்டி பச்சை குத்திக்கறாங்க?
அவங்க தான் பச்சைத்தமிழர்கள். பசுமைத்தமிழகம் அமையப்பாடுபடுவோம்னேனே?


==============

19 தலைவரே! தேர்தல் கமிஷனுக்கு என்ன மனு குடுக்கறீங்க?
நாங்கள் இலவசத்திட்டம் அறிவித்த பின்பு எங்களை கலந்தாலோசித்த பின்பே தேர்தல் தேதி சொல்லனும்


=============

20 தலைவரே! கேப்டன் கூட நாம கூட்டணி வைக்கறமே , ஆளுங்கட்சிக்கு டஃப் ஃபைட் குடுப்பமா?
அவரு நம்ம கட்சி ஆளுங்களோட ஃபைட் போடாம இருந்தா சரி

==============

0 comments: