Friday, August 07, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 7/8/ 2015 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

1 சண்டி வீரன்
2 குரங்கு கைல பூமாலை
3 வந்தா மல
4 அழகே இல்லாத அழகான கதை
5 செல்வந்தன் ( தெலுங்கு டப்)
6 SRI MANDHUDU ( TELUGU)
7  கலை வேந்தன்  ( தெலுங்கு டப்)
8  MISSION IMPOSSIBLE ROGUE NATION
இயக்குனர் சற்குணம்
1 சண்டி வீரன்

சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆனந்தி முதன்முறையாக இணைந்துள்ள படம் இது. நைய்யாண்டி படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் இயக்குனர். இவர்களின் கூட்டணியில் வந்துள்ள சண்டி வீரன் எப்படி இருக்கிறான் என்பதை  விரைவில் பார்ப்போம்….
நடிகர்கள் : அதர்வா, ஆனந்தி, லால், அஸ்வின் ராஜா மற்றும் பலர்
இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இயக்கம் : சற்குணம்
தயாரிப்பாளர் : இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’

பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணத்தின் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது சண்டி வீரன். படம் முடியும் முன்பே நல்ல லாபத்துக்கு விலை போனது. அதர்வாவுக்கு இது வெற்றி பெற்றேயாக வேண்டிய படம். கயல் ஆனந்தி நாயகி. படம் ஆகஸ்ட் 7 வெளியாகவிருக்கும் நிலையில், படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. 

சண்டி வீரன் என்ன மாதிரியான படம்?
அனைவரும் ரசிக்கும் பொழுதுபோக்கு படமாக இதனை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய களவாணி, வாகைச்சூடவா படங்களின் வரிசையில் சண்டி வீரனும் இருக்கும்.
பாலா படத்தை தயாரித்தது எப்படி?
முதலில் நான் பாலாவிடம் சண்டி வீரன் கதையைச் சொன்னேன். கதையை கேட்டுவிட்டு, நல்லாயிருக்கு என்றார். பிறகு படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார்.
அதர்வாவை யார் தேர்வு செய்தது. நீங்களா பாலாவா?
கதையை சொன்ன பிறகு, நாயகனாக அதர்வாவை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன் என பாலாவிடம் சொன்னேன். அவர் சரி என்றார்.
படத்தில் மலையாள நடிகர் லால் நடித்திருக்கிறாரே?
வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். சண்டக்கோழி படத்துக்குப் பிறகு அவருக்கு பெயர் சொல்கிற படமாக இது இருக்கும்.
ஆனந்தியை தேர்வு செய்தது எப்படி?
கயல் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து அவரை தேர்வு செய்தேன்.
நாயகன் அதர்வா
இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
எனக்கு இயக்குனர் பாலா போன் செய்து, உடனே பார்க்க வேண்டும் என்றார். நான் உடனே சென்று அவரை சந்தித்தேன். ஒரு கதை கேட்டேன், அதில் நீ நடிக்கணும் என்றார். சரி என்றேன்.
கதை கேட்காமலா?
அவர் நடிக்க வேண்டும் என்றதும் கதை கேட்காமலே சரி என்றேன். அதன் பிறகுதான் சற்குணம் படத்தை இயக்கப் போகிறார் என்பது தெரியும்.
படத்தில் உங்களின் வேடம்...?
இதில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன்.  கிராமியப் பின்னணியில் நல்ல கமர்ஷியல் படமாக இது உருவாகியிருக்கிறது.
சற்குணத்தின் இயக்கத்தில் நடித்தது எப்படியிருந்தது?
களவாணி படத்தைப் பார்த்து, சற்குணம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது.
நாயகி ஆனந்தி
A rhythmic village love story with action by kalavaani sarkunam

படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?
நான் இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது.


Comedy screenplay for b ,c centre audience
2 குரங்கு கைல பூமாலை

ஒரு ஹீரோயின் வித்தியாசமான குணம் கொண்ட நான்கு பேரிடம் சிக்குவதை மையமாக கொண்டது தான் குரங்கு கைல பூமாலை படம்.
ஜெகதீஷ், கௌதம் கிருஷ்ணா ஆகியோரை ஹீரோக்களாக வைத்து ஜி. கிருஷ்ணன் எடுத்துள்ள படம் தான் குரங்கு கைல பூமாலை. படத்தில் சாந்தினி ஹீரோயினாகவும், நிஷா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சரவண சுப்பையா, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் அமீர்ஜான் தயாரித்துள்ளார்.
படத்திற்கு சாய் குருநாத் இசைப்பணியை கவனிக்கிறார்
B,c centre comedy film

3 வந்தா மல

ஆர்யாவை வைத்து ’கலாபக் காதலன்’ படத்தை இயக்கிய இகோர் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் ’வந்தா மல’. ’இந்த காலத்து இளைஞர்களில் வாழ்க்கை எதை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது. இவர்களின் சமூக அக்கரை எந்த அளவுக்கு இருக்கிறது..? என்ற கேள்விகளுக்கான விடைதான் இப்படம்.


நான்கு புதுமுகங்களை வைத்து ஜனரஞ்சகமாக எடுத்திருக்கிறேன்’. குடிசைப் பகுதிதான் கதைகளம் என்பதால் நான்கு ஹீரோக்களையும் குடிசையில் வசிக்கும் மக்களோடு பழகவிட்டு அதன்பிறகுதான் படத்தை தொடங்கினேன்’ என்கிறார் இயக்குனர். இதன் இசை வெளியீட்டு விழா, சூரியன் பண்பலை அரங்கில் நேற்று காலை நடந்தது.

இதில் இயக்குனர் இகோர், இசையமைப்பாளர் சாம் டி. ராஜ், ஒளிப்பதிவாளர் மாரி வெங்கடாசலம் மற்றும் படத்தின் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

A love story for c centre audience
4 அழகே இல்லாத அழகான கதை
Andhra vijay film
5 செல்வந்தன் ( தெலுங்கு டப்)




ஆக.06 (டி.என்.எஸ்) தெலுங்கு திரைப்படமான 'பாகுபலி' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து மேலும் சில தெலுங்குப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யபப்ட்டு வெளியிடப்படுகிறது.
அந்த வரிசையில், தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபு, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள 'ஸ்ரிமந்தடு' படம் தமிழில் 'செல்வந்தன்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நாளை (ஆக.7) முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழில் இப்படத்தினை  பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் மகேஷ் பாபு, நடிகர் ஜகபதி பாபு, ஒளிப்பதிவாளர் மதி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர் பத்ரகாளி, ஏ.ஆர்.கே.ராஜராஜா, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு, தயாரிப்பாளர்கள் சிவா, பி.எல்.தேனப்பன், கதிரேசன், ஞானவேல்ராஜா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள். 
இந்த நிகழ்ச்சியில் பேசிய நாயகன் மகேஷ் பாபு, "என்னுடைய படங்கள் பல தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தாலும், இந்த படம் தான் முதல் முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் என ஒரே நேரத்தில் வெளியாகிறது. மக்களுக்கு பிடித்த வகையில் படம் கமர்ஷியலாக வந்துள்ளது. இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இப்படத்தை தொடர்ந்து எனது அனைத்துப் படங்களின் இனி ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும்." என்று தெரிவித்தார்.
செல்வந்தன் படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாக நடித்துள்ள ஜகபதி பாபு பேசுகையில், "எனக்கும் மகேஷ் பாபுவுக்கும் தமிழகம் ரொம்ப நெருக்கம், காரணம் நாங்கள் இருவரும் இங்கே தான் படித்து வளர்ந்தோம். தமிழகத்தை பொருத்தவரை நல்ல படங்களாக இருந்தால் அது வெற்றி பெறும். சிறு பட்ஜெட் படமோ, அறிமுக நடிகர்கள் என்று எதையும் பார்க்க மாட்டார்கள், படம் தரமாக இருந்தால் வெற்றியடை செய்வார்கள். அந்த வகையில் 'செல்வந்தன்' படமும் தமிழக ரசிகர்களை கவரும்." என்று தெரிவித்தார்

Telugu film by mahesh babu

6 SRI MANDHUDU ( TELUGU)


7  கலை வேந்தன்  ( தெலுங்கு டப்)

அஜய் – சனம் ஷெட்டி நடிக்கும் “கலை வேந்தன் ” ஆர்.கே.பரசுராம் இயக்குகிறார். எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படத்திற்கு “கலைவேந்தன் “ என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். இவர் “அக்கு “என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். அந்த படம் பரபரப்பான படமாக பேசப்பட்டு பெரிய வெற்றியும் பெற்றது.
கதாநாயகியாக சனம்ஷெட்டி நடிக்கிறார். இவர் அம்புலி 3 D படத்தில் நடித்தவர்.மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார்,ஆர்த்தி, சம்பத், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், விஜய் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் இரண்டு கால்களுமே இல்லாத ஒரு பத்து வயது சிறுவன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறான். ஒளிப்பதிவு – எஸ்.கார்த்திக் / பாடல்கள் – சினேகன் / இசை – ஸ்ரீகாந்த் தேவா எடிட்டிங் – G. சசிகுமார் / ஸ்டன்ட் – சையத், நாக்கவுட் நந்தா நடனம் – சாந்திகுமார் / தயாரிப்பு நிர்வாகம் – இளையராஜா, மாரியப்பன் ,செல்வம்
தயாரிப்பு – எஸ்.கமலகண்ணன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.கே.பரசுராம். இவர் திரைப்பட கலூரியில் பயிற்சி பெற்றதுடன் கனடாவிலும் இயக்குனர் பயிற்சிப்பெற்றிருக்கிறார்.
Kalaivanan (30)படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…. ஓவினாம் என்ற தற்காப்பு கலையின் மாஸ்டராக பணிபுரியும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஏற்பட்ட காதலில் ஒரு பிரச்னை வருகிறது. இது கதாநாயகியின் பெற்றோருக்கு தெரியவர பிரச்சனை பெரிதாகிறது. இதற்கு இடையில் காதலர்களுக்கு நடுவில் வில்லனால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது . இடையில் கதாநாயகி கொல்லப்படுகிறார்.கொலை செய்தது யார் ? என்ற வினாவுக்கு விடை பரபரப்பான திரைக்கதையின் மூலம் வெள்ளித்திரையில் வெளிச்சமாகும். ஓவினாம் தற்காப்பு கலை என்பது ஜூடோ, குங் பூ, கராத்தே இந்த மூன்றின் கலவைக்கு பெயர்தான் ஓவினாம். இந்த கலையை பயன்படுத்தி வரும் முதல் திரைப்படம் “ கலை வேந்தன் “ தான். இந்த ஓவினாம் பயிற்சி பெற்ற நூறு கலைஞர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது கலை வேந்தன் என்றார் இயக்குனர் ஆர்.கே.பரசுராம்
Violence story for c centre audience
8  MISSION IMPOSSIBLE ROGUE NATION
Wonderful action film
டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் ஐந்தாவது பாகம், மிஷன் இம்பாஸிபிள் - ரோக் நேஷன் சென்ற வாரம் யுஎஸ்ஸில் வெளியானது.


முதல் மூன்று தினங்களில் - வியாழன் ப்ரிவியூ காட்சிகளையும் சேர்த்து - 56 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. 
ப்யூரிஸ் 7, ஜுராஸிக் வேர்ல்ட் போன்ற படங்கள் முதல் மூன்று தினங்களில் 200 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வசூலிக்கையில், டாம் க்ரூஸின் படம் 56 மில்லியன் டாலர்களில் சிக்கிக் கொண்டுள்ளது. என்றாலும், இது நல்ல வசூலில் என்கிறார்கள் ஹாலிவுட் விமர்சகர்கள். 150 மில்லியன் டாலர்களில் தயாரானப் படத்துக்கு இது சிறந்த ஓபனிங் என்பது அவர்களின் கணிப்பு.
மிஷன் இம்பாஸிபிள் - ரோக் நேஷன் வரும் 7-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. தமிழில் மிஷன் இம்பாஸிபிள் - முரட்டு தேசம் என்ற பெயரில் வெளியிடுகின்றனர். 
படத்தின் சண்டைக் காட்சிகளை டர்ம் க்ரூஸ் அதிகம் டூப் போடாமல் செய்துள்ளார். சாகசக் காட்சிகள் நன்றாக உள்ளதாக விமர்சகர்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளதால் முரட்டு தேசம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி -தினமணி, மாலைமலர் , வெப்துனியா , ஆல் சினி வெப்சைட்

0 comments: