Saturday, August 08, 2015

விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடமான சூழல்.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் =எம் ஜி ஆர்
தமிழகத்தில் மதுவை வித்திட்ட இந்திர குபேரன் = கலைஞர்


===============


சென்னையில் இருக்கும் பொண்ணு  மழை வருதுனு FB ல ஸ்டேட்டஸ் போட்டா ஸ்ரீலங்காவில் இருக்கும் ரங்கா குடை வேணுமா?ங்கறார். அடேங்கப்பா


================


உன்னைப்பார்க்க நான் கும்பகோணம் வர்றேன்னு நெட்தமிழன் ஒரு பொண்ணு கிட்டே சொல்லும்போது என்னது? பொண்ணு கும்பகோணமா?னு லொக்கேஷன் கன்ஃபர்ம்பண்றான்


==================

நெட் தமிழன்  ஒரு பொண்ணுக்கு  சாதாரணமா குட் நைட் தான் சொன்னார். டக்னு ஒருவர் வந்து  மாப்பி, என் லைனை  கிராஸ்  பண்ணாதேங்கறார்.


=============


அடுக்கி வைத்த துணிகளை கலைக்காமல், புருசனிடம் அடிச்ச பணத்தைபீரோவின் சேலை மடிப்பில் ஒளிக்காத பெண்ணை கடவுள் இனி தான் படைக்க இருக்கிறார்!


===================

6  என்னமோ நாமெல்லாம் நாள் பூரா சும்மாவே இருப்பது மாதிரி  நெட் தமிழச்சி FB  ல வந்து நான் ரொம்ப பிசி அப்டின்னு ஸ்டேட்டஸ் போடுது==================
சரக்கு அடிக்கும் குடிகாரனுடன் தாம்பத்ய உறவு கூடாது என ஒவ்வொரு பெண்ணும் உறுதியாக இருந்தால் ஊர்ல ஒரு பய குடிக்க மாட்டான்
============
8 கலைஞரைத்தாக்கி ஒரு ஸ்டேட்டஸ் போட்டுட்டம்னா போதும் ,நெட் தமிழன் புத்திசாலினு நினைச்சுக்கிட்டு நீங்க அதிமுக வா?னு கேட்கறான்\\\
==============9 சரக்கு ,புகையிலை தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட சமூகவிரோதிகளே! சமுதாயத்துக்கு தீங்கு விளைவிப்பவர்கள்

===========10 நம்மை கிண்டல் பண்ண பொண்ணுங்க " உங்க நேர்மை எனக்குப்பிடிச்சிருக்கு"னு சொன்னா அப்போ என்னையும் பிடிச்சிருக்கனுமே?னு மடக்கிடனும்
===============11 இன்று முதல் தமிழகமெங்கும் ஜம்போ சர்க்கஸ் ,ஜெமினி சர்க்கஸ் கூடாரங்களில் புலி ட்ரெய்லர் காண்பிக்கப்படும்.குழந்தைகள் ,பெண்கள் ் கொண்டாட்டம்============
12 சிலரின் மனதை நோகடிக்காமல் இருக்கும் நம் பொய்யான புன்னகை கூட தவறில்லை"என நினைப்பதே மாபெரும் தவறுதான்.உள்ளத்தில் இருப்பதே உதட்டில் வரவேண்டும்
=========
13 நெருக்கடியான சமயங்களில் நீ காட்டும் நிதானமும் சமயோசித புத்தியும் தான் உன் தலைமைப்பண்பை தீர்மானிக்கும்.மேம்படுத்தும்============
14 நடு ஜாமத்துல  ஒரு பொண்ணு தூங்காம  என்ன ஸ்டேட்டஸ் போடலாம்னு யோசிக்கிறேன்  அப்டின்னே  ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ்போட்டிருக்கு # தமிழச்சிடா
==============15  மஞ்சள் நிலா , மஞ்சக்காட்டு மைனா டி எல்லில் இருக்கும் நேரமாப்பார்த்து நெட் தமிழன் மஞ்சள் முகமே வருக,னு வெல்கம் ட்வீட் விடுறார்
=================16  40 வயசுல நாய்க்குணம் வருமாம், ஆனா 40,000 ஃபாலோயர்ஸ் வந்தா  நன்றி தெரிவிக்கும் குணம் வந்துடுச்சு. அனைவருக்கும் நன்றி ;-) 40,000*===================


17 மகேஷ்பாபு  தமிழ் நாட்டுக்கு வந்துட்டார் என்பதற்காக இளைய தளபதி  ஆந்திரா போவார்  என எதிர்பார்ப்பது தவறு;-)


========================


18  மீனராசி அன்பர்களே! இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சியான தருணமாம். அனேகமா மச்சினி வரும்னு நினைக்கறேன்


======================


19  விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடமான சூழல். வாலு படத்தை  ஆதரிக்கவும் முடியாது(விஜய் உதவியில் ரிலீஸ்) , எதிர்க்கவும் முடியாது ( அஜித் புகழ்வசனம்)========


20 மீன ராசிக்கு  பலன்  சொன்னா நெட்  தமிழன் மீனம்மா ராசிக்கு என்ன பலன் அப்டினு கேட்கறார். அவங்க ராசி என்ன?னு எனக்கு எப்டி தெரியும் சோன்பப்டி?======================

1 comments:

Unknown said...

what problem to U @admin u always denote thalapathy........wat happend to ur brain...its anything problem....hmmm... mind ur words senthil infront of thalapthy fans..