Friday, August 21, 2015

ஜிகினா - சினிமா விமர்சனம்


நன்றி - மாலைமலர் 
தாய் தந்தையை இழந்த நாயகன் விஜய் வசந்த் குடிசைமாற்றுப் பகுதியில் தனிமையாக வாழந்து வருகிறார். அங்கிருந்தபடி கால் டாக்சி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

கால் டாக்கி ஓட்டுவதன் மூலம் ஐ.டி. கம்பெனியில் வேலைப்பார்க்கும் கும்கி அஸ்வின், டவுட் செந்தில் உள்பட நான்கு பேர் நண்பராகிறார்கள். இவர்களுடன் பெண்கள் சகஜமாக பழகுவதை பார்க்கும் விஜய் வசந்த், தானும் இதைபோல் பெண்களிடம் பேசி பழக வேண்டும் என்று கேட்கிறார்.

இதற்கு நண்பர்களும் சம்மதித்து முதலில் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்கிறார்கள். தன்னுடைய பாவாடைச் சாமி பெயரும், கறுப்பான கலரும் விஜய் வசந்த்தை உறுத்தியதாகல், கிஷோர் என்ற பெயரில் அழகான ஒரு படத்துடன் அக்கவுண்ட் ஓபன் செய்யப்படுகிறது.

இந்த அக்கவுண்ட்டில் ஏஞ்சல் என்ற பெயரில் ஒரு பெண் அறிமுகமாகிறார். அந்த பெண்ணுடன் வாய்ஸ் சாட் மூலம் விஜய் வசந்த் பேசி காதல் வளர்த்து வருகிறார்.

இதற்கிடையே ஒருநாள் அந்த பெண் இவரது டாக்சியில் பயணம் செய்ய வருகிறார். அவரைப் பார்த்து பேஸ்புக்கில் பேசிப் பழகும் பெண்ணை நேரில் கண்டதுடன் விஜய் வசந்த் சந்தோஷப்படுகிறார். இருவரும் காரில் பயணம் செய்யும்போது ஏஞ்சல் துணைப் பாடகி என்பதை அறிந்த விஜய், நான் நன்றாக கானா பாடல் பாடுவேன் என்று அறிமுகமாகிறார். இதன்பின் இருவருக்குமிடையே நட்பு ஏற்படுகிறது.

அப்போது பேஸ்புக்கில் கிஷோர் என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளது நான்தான் என்று சொல்ல முற்படுகிறார். அந்த வேளையில்தான் பேஸ்புக்கில் ஏஞ்சல் அக்கவுண்ட் வைக்கவில்லை. அவரது வீட்டில் வேலைப்பார்க்கும் பெண்ணின் மகள்தான் ஏஞ்சல் படத்தை வைத்து தன்னுடன் பழகி வருவது தெரிய வருகிறது.

இந்த குழப்பத்திற்கு மத்தியில், விஜய் ஆனந்த் யாருடன் சேர்ந்தார் என்பதே மீதிக்கதை.

விஜய் வசந்த் எந்தவித நாயகனும் ஏற்று நடிக்க முடியாத கதாபத்திரத்தை (பாவாடைச் சாமி) துணிவோடு ஏற்று நடித்திருக்கிறார். நாயகி சானியா தாரா ஏஞ்சல் என்ற கதாபாத்திரித்திற்கேற்ப ஏஞ்சல் போல் அழகாய் வந்து செல்கிறார். சிங்கம் புலி, ரவி மரியா மற்றும் நண்பர்கள் நான்கு பேர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

நாயகிக்கு அடுத்தப்படியாக கருகுமணி என்ற கதாபத்திரத்தில் வரும் ஸ்ரீதேவிக்கு, பிற்பகுதியில் கதாநாயகிக்கு இணையாக காட்சிகள் கொடுத்திருக்கிறார்கள். அதை அவர் சரியாக செய்து பாராட்டு பெறுகிறார்.

இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி, இன்றைய காலக்கட்டத்தில் வலைத்தளங்களில் போலியாக அக்கவுண்ட் ஓபன் செய்து, உண்மையான முகத்தை காட்டாமல், காதலிக்கும் இளைய தலைமுறைக்கு ஏற்படும் விளைவுகளை எதார்த்த கதையாக சொல்லியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியை வித்தியாசமாக முடித்திருந்தாலும், கதை ஓட்டம் மற்றும் காட்சிகள் படத்திற்கு சற்று தொய்வை கொடுக்கிறது.

பாடல்கள் கேட்கும் ரகம். ஒளிப்பதிவு பரவாயில்லை.

மொத்தத்தில் ஜிகினா ‘புதுமை’

0 comments: