Friday, August 28, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28//8/ 2015 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1.தனி ஒருவன் ( ஜெயம் ரவி,நயன் தாரா)
2 அதிபர் ( ஜீவன்,வித்யா)
3 தாக்க தாக்க

3 NO ESCAPE (Lake Bell, Pierce Brosnan,) # 28/8/2015 அதிபர்

யுனிவர்சிட்டி', ‘திருட்டுப்பயலே', ‘நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜீவன்.

இவர் நடிப்பில் கடைசியாக ‘நான் அவன் இல்லை-2' படம் வெளிவந்தது. இந்த படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து, தனது சொந்த தொழிலை கவனித்துக் கொள்வதற்காக வெளிநாடு போய்விட்ட, ஜீவன் தற்போது மீண்டும் திரும்பி வந்து தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ‘மாயி', ‘திவான்', ‘மாணிக்கம்' ஆகிய படங்களை இயக்கிய சூரிய பிரகாஷ் இயக்கும் புதிய படத்தில் ஜீவன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு அதிபர் என்று தலைப்பிட்டுள்ளனர். இவருடன் சமத்திரக்கனி, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா, சிங்கமுத்து, ராஜ்கபூர், கோவை சரளா, மதன்பாப், வையாபுரி, சம்பத்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். ‘செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் ‘சிவா' என்ற கதாபாத்திரத்தில் ஜீவன் நடிக்கிறார். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ‘ஈஸ்வரன்' கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைக்கிறார். பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.2 தனி ஒருவன் கடைசியில் தனி ஒருவனுக்கு தேதி குறித்துவிட்டார்கள். ஆக.28 படம் திரைக்கு வருகிறது.
ரீமேக் படங்கள் மட்டும் இயக்கி வந்த ராஜா, முதல்முதலாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம், வேலாயுதம். தொடர் தோல்விகளில் இருந்த விஜய்க்கு அப்படம் சுமார் வெற்றியாக அமைந்தது. அதன் பிறகு அவர் இயக்கியிருக்கும் படம்தான், தனி ஒருவன்.
ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஆனால், தனி ஒருவனின் விசேஷம், அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருப்பது.
தமிழில் சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வந்தவர் தனி ஒருவனில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். தனி ஒருவன் மீதான எதிர்பார்ப்பை இதுதான் அதிகப்படுத்துகிறது.


தலை எழுத்தைத்தீர்மானிப்பது 

3  NO ESCAPE

  • In their new overseas home, an American family soon finds themselves caught in the middle of a coup, and they frantically look for a safe escape in an environment where foreigners are being immediately executed.


விக்ராந்த் நாயகனாக நடித்திருக்கும் 'தாக்க தாக்க' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்த், அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், அபிநயா, லீமா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தாக்க தாக்க'. பிஜாய் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுஜித் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெர்சடைல் ஸ்டூடியோ தயாரித்திருக்கும் இப்படத்தை தாணு வெளியிடுகிறார். இப்படம் நாளை (ஆகஸ்ட் 28) வெளியாக இருக்கிறது.
இப்படத்தை விஜய்க்கு திரையிட்டு காட்டினார்கள். "படத்தின் முதல் பாதி கதை சார்ந்து மிக அருமையாக இருந்தது. நான் இரண்டாம் பாதியை மிகவும் ரசித்தேன். அதிலும் கடைசி 40 நிமிட காட்சிகள் அருமை. விக்ராந்த் இரண்டாம் பாதியில் மிக நன்றாக நடித்திருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. அவர் கண்டிப்பாக ஜெயிப்பார்." என்று தெரிவித்திருக்கிறார் விஜய். விக்ராந்த் விஜய்யின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் தங்கள் நண்பன் விக்ராந்துக்காக விஷால், ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் ஒரு பாடலுக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.


நன்றி - த இந்து  , தினமணி , மாலை மலர் , வெப் துனியா, ஆல் சினி வெப்சைட்

0 comments: