Tuesday, August 18, 2015

ஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை - குஷ்பூ அதிரடி பேட்டி


கோப்புப் படம்
இளங்கோவன் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் தவறாக பேசக் கூடியவர் அல்ல. நாகரிமானவர் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாக பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினர் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, செய்தியாளர்களிடம் பேசினார்.
''இளங்கோவன் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் தவறாக பேசக் கூடியவர் அல்ல. அவர் மனைவி, மகன், பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர், நாகரிமானவர். அதிமுக அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பவே இளங்கோவனுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
அதிமுகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் இதுபோன்ற போராட்டங்களை நடத்துகின்றனர்'' என்று குஷ்பு கூறினார்.





ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம்: கே.பிச்சுமணி
ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம்: கே.பிச்சுமணி

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினர் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் யார் சென்னை வந்தாலும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால், மாநில பாஜகவோ ஆளும் அதிமுகவை எதிர்ப்பதுபோல் நடந்துகொள்கிறது.
இதைத்தான் நான் குறிப்பிட்டேன். இதில் என்ன அவதூறு இருப்பதாக அதிமுகவினர் கருதுகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. எனவே நான் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.
நான் கூறிய கருத்தில் உடன்பாடில்லை என்றால் ஜனநாயக ரீதியாக எதிர்க்க வேண்டும் அதை விடுத்து அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அதிமுகவினர் வன்முறை செய்தால் எங்களுக்கும் வன்முறையில் ஈடுபடத் தெரியும். மதுவிலக்கு போராட்டங்களை திசை திருப்பவே அதிமுகவினர் திட்டமிட்டு இத்தகைய வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதியளித்தால் அதிமுக - பாஜக தொடர்பு குறித்த விமர்சனத்தை திரும்பப் பெறுகிறேன்" என்றார் இளங்கோவன்.


முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 14-ம் தேதி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை அவதூறாகப் பேசினார்.
இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து உண்மைக்கு மாறாக, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவர் பேசியிருக்கிறார். அந்த அவதூறு பேச்சு முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் ஈவிகேஎஸ் இளங்கோவனைத் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

0 comments: