Tuesday, August 04, 2015

சாதா பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி ஆக்குவது எப்படி? கொல்லிமலை சித்தர் ஆன்மீக அருளுரை

வன்முறை எதுவும் இல்லாமல் ஒரு தலைவரின் மரணம் எப்படி எதிர்கொள்ளப்படவேண்டும் என்பதை திராவிடக்கட்சிகள் கூனிக்குறுகி கற்றுக்கொள்ளவேண்டும்


===========

2 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க பூனைக்குட்டி ,நாய்க்குட்டி வளர்ப்பாங்க.இப்போவெல்லாம் திமிர் வளர்த்திக்கனும்னு சொல்லிக்கறாங்க==========3 பரவை முனியம்மா வின் மருத்துவச்செலவுக்கு நிதி உதவி அளித்த தனுஷ், விஷால் க்கு நன்றியும்  வாழ்த்தும், சக மனிதனுக்கு உதவுவதே புண்ணியம்
==============
சாதா தமிழச்சி சத்தமில்லாம காதலனை சந்திச்ட்டு வந்துடுது, நெட் தமிழச்சி FB ல “என் ஆளை பாக்க போறேன்.. இன்றைக்கு நைட் ட்ரைன் ஏற போறேன்.”குது
=================

புலி படத்துல விஜய் இளவரசரா வரும்  காட்சியில்  இப்டி ஒரு ரீ மிக்ஸ் பாட்டு போட்டா என்ன?
 ஜில்லா  உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ  எல்லாம்5

====================6 ராகுல் , மோடி நேரில் சந்தித்தபோது பரஸ்பரம் வணக்கம் வைச்சுக்கிட்டாங்க. அது போல் கலைஞரும் , ஜெ வும் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிச்சா என்ன?
===============வாட்சப்ல குஜால்மா-ன்னு ஒரு குரூப்  கிளம்பி இருக்கு, அந்த  மா -வை  கட் பண்ணுங்கய்யா. குஜால் போதும்#  என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா
==============நான்  மொட்டை மாடியில்  இருந்த போது , பால்கனில நின்னபோது  இப்டி  அப்பப்ப ஸ்டேட்டஸ் போட்டு  நாம  மாடி வீடுன்னு  காட்டிக்கனும் போல
================9  இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் வீட்ல புருசனை,மகளை அதிகாரம் பண்ணிட்டு இங்கன வந்த மகளதிகாரம் போட்டுட்டு இருக்காங்க
=============
10 சினிமாஅரசியல் விஐபி ங்க ட்விட்டர் அக்கவுன்ட் ஆபரேட் பண்றது அவங்க மேனேஜர்னு நான் சொன்னப்ப என்னைத்திட்னாங்க.அவங்களே ஒத்துக்கிட்டபின் இப்போ?
============11 1000ரூபா பணம் கட்டுனா 500 பாலோயர்ஸ் தர்றோம்னு ஒரு AD.

டேய்.என் கிட்டே 39000+ இருக்கு.எல்லாரையும் வெச்சுக்கிட்டு 78,000 ரூபா குடுங்க


===========


12 பௌர்ணமி அன்று
உன்அருகாமையில் குடி இருக்கும் சித்ராங்கி ,சித்திரம் ,சித்ரா, சித்ராங்கதா னு யாரையாவது அழைத்துச்சென்று சாதா பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி ஆக்கி கொண்டாடவும்


==============


13 பொண்ணுங்க யாராவது உங்களை அங்க்கிள் னு கூப்ட்டா அதிர்ச்சி ஆகாதீங்க.அதுக்கும் முன்னால யாரையாவது அக்கான்னு கூப்ட்டாங்களா பாருங்க


=============


14 ஸ்ரீ வில்லிப்புத்தூூர் ல கதிரவன் சைவ ஹோட்டல்ல சாப்பாடு 75 ரூபா.சூப்பர் லஞ்ச். காஸ்ட்லி ஊர் போல.ஈரோட்ல எல்லாம் 50 டூ 60 ரூ தான்


=============


15 31/7/2015 ரிலீஸ் ரிசல்ட்
1 ஆரஞ்சு மிட்டாய் = சுமார்
2 இது என்ன மாயம் = ரொம்ப சுமார்
3 சகலககலாவல்லவன் அபாடக்கர் = மரண மொக்கை

============

16 தியேட்டர் ல இடைவேளைல அப்துல்கலாம் பத்தின 10 நொடி படம் போடறப்ப என்னா கை தட்டல்!!!தமிழர்கள் என்றும் எளிமைக்கு ,திறமைக்கு மரியாதை செய்பவர்கள்


=========


17 உடன்பிறப்பே! மீண்டும் ஆட்சிக்கு வர என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்வேன்.ஆனால் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன்.என் குடும்பம் (மட்டும் எப்போதும் )வாழ்க!

==============

18 அனைவரும் கலாய்ப்பதற்கு வசதியாக விடுமுறை தினத்தில் ஆடியோ ரிலீஸ் செய்யும் இளையதளபதிக்கு நன்றி!ரெஸ்ட் எடுத்துட்டே ரோஸ்ட் போடுவோர் சங்கம்

============

19 அமலாபால் வசீகரன் இயக்குநர் விஜய் -ன் இது என்ன மாயம் எந்த ஹாலிவுட் படத்தின் கட்டிப்பிடித்தல்?(தழுவல்)

cyrano agency   கொரியன் மூவி


==================

20 தன் கிட்டே 444  ஃபாலோயர்ஸ் இருந்தாலும் ஹேப்பி ஃபிரண்ட்ஷிப் டேன்னு  கரெக்ட்டா பொண்ணுக்கு மென்சன் போட்டு சொல்பவன் தான் நெட் தமிழன்


----------------------

0 comments: