Tuesday, August 25, 2015

ஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இருக்கும்?

1எதுக்கு எனக்கு மொட்டை அடிச்சு விட்டீங்க?புலி கட்டிங் தானே கேட்டேன்?


ஓ.சினிமா புலி கட்டிங்கா? தெளிவா சொல்லி இருக்கலாமில்ல?


============

2மன்னா! பகை கொண்ட மன்னன் போருக்கு வரும்போது ஏன் பதுங்கு குழியில் பதுங்குகிறீர்கள்?


பகை னு வந்துட்டா நான் பதுங்கும் புலினு சொன்னேனே?


===========

3மிஸ்! இண்ட்டர்வ்யூவ்ல கூட உங்க அட்ரசை சொல்லமாட்டேன்ட்டீங்களாமே.ஏன்?


நான் விஜய் ரசிகை.என் வாயால எப்டி "முகவரி"சொல்ல முடியும்?=========

4ஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இருக்கும்?


புல்வெளி புல்வெளி தன்னில் பனிப்புலி பனிப்புலி வந்து தூங்குது தூங்குது பாரம்மா===========

5 மயில் புலி அப்டினு ஒரு கேட்டகிரி இருக்கா?


ஆமா.லாங்க் ஹேர் கெட்டப் புலி தான் அது


==========

6 சார்.ட்ரெய்லர் ல இருந்து உங்க பட கதையை யூகிக்கவே முடியலை.சபாஷ்.


யோவ்.முழுப்படம் பார்த்தாலே யாராலும் கதை சொல்ல முடியாது


===========

7 சார்.இந்தப்படம் ஆக்சன் பிலிமா?காமெடி பிலிமா?


முதல் 20 நிமிசம் ஆக்சன் பிலிம்.ஹீரோ என்ட்ரி ஆனதும் காமெடி பிலிம்==============


8 மேடம்.லோன் டியூவை கேஷா கட்டுங்க.இல்ல போஸ்ட் டேட்டட் செக் கொடுங்க.ரொம்ப கம்ப்பெல் பண்ணா செக்ஸ் (CHEQUES),டார்ச்சர் பண்றதா புகார் தருவேன்

===============


9ப்ளூ க்ராஸ்ல இருந்து வர்றோம்.உங்க படத்தால விலங்குகளுக்கு ஏதாவது ஆபத்து இருக்கா ?


நோ சார்.படத்தைப்பார்க்கறவங்களுக்குத்தான் எல்லா ஆபத்தும்===========


10டியர்.லவ் பண்ண காலத்துல எல்லாம் மியாவ்மியாவ்னு என்னையே சுத்தி வருவீங்க.இப்போ உர்னு இருக்கீங்களே?
கரெக்ட் பண்றவரைக்கும்தான் நான் பூனை. கரெக்ட் பண்ணிட்டா நான் புலி


=================


11 ஜட்ஜ் = நீ திருடுனியா?
கைதி = நீங்க கேட்கறது வேடிக்கையா இருக்கு.திருடன் கிட்டே போய் திருடினியா?னு கேட்டா?உழைச்சா சம்பாதிப்போம்?


===========


12 ஜூவாலஜி மிஸ் ஜூலி = புலி எத்தனை வகைப்படும்?

மாண்புமிகு மாணவன் = 1 பாயும் புலி
2 வேங்கைப்புலி 3 வரிப்புலி
4 சிம்ப்ளிசிட்டி புலி

=============

13 ஜோசியர் = உங்களுக்கு  நாளை  ஒரு கண்டம்  காத்துட்டு இருக்கு.

ஆசியர் = அது என்ன எனக்கு அத்தை  பொண்ணா? எதுக்கு ஐ ஆம் வெய்ட்டிங்?குது?


====================

14 சார்.வோர்ல்டு போட்டோகிராபி டே வை கவுரவப்படுத்த உங்க பங்குக்கு என்ன செஞ்சீங்க?

எந்த போட்டோவும் எடுக்கலை.FBல அப்டேட்டலை.இதுவே போதாதா?

================

15 சார்.நம்ம படம் சரித்திர சப்ஜெக்ட்னு டி ஆர் கிட்டே சொல்லிடாதீங்க்
ஏன்?
அவர் பாட்டுக்கு எதுகைமோனையா எதுனா சொல்லி கலாய்ச்சுடப்போறாரு

============

16 சீரியல்டைரக்டருக்கும் , தளபதிக்கும் என்ன வித்தியாசம்?
 இவ்ங்க  எல்லாரையும் அழ வெச்சு வேடிக்கை பார்ப்பாங்க, அவரு வாழ வெச்சுபார்ப்பாரு


================\


17 இன்ஸ்பெக்டர், இவன் பக்கத்து வீட்டு பெட்ரூமை எட்டிப்பார்த்தான்.
ஏன்?
மத்தவங்க வாழ வெச்சுப்பார்க்க  ஆசை.வாழ்ந்துட்டு இருக்கும்போது பார்த்தேன்


==============


18 ட்ரெய்லர்  பார்த்த ஜனங்க  ஆடிப்போய்ட்டாங்களாம்

 கண்ணா , மெயின் பிக்சர் வரட்டும், இண்ட்டர்வல்லயே  தியேட்டரை விட்டு ஓடிப்போவாங்க


==================


19  புதுசா வந்திருக்கும்  க்ளியர்ஷாம்பூ  போட்டுத்தான்  தலைவர்  குளிப்பாராம்


ஓஹோ, நியூக்ளியர் ஸ்டார்னா அதான் அர்த்தமா?


======================


20  பாட்டி  வடை சுட்ட கதை  சொல்லு தாத்தா.

அதெல்லாம் ஓல்டு ஃபேஷன்மா, நெட் ல வடை சுட்டுட்டு இருக்கறவங்க கதைசொல்றேன் கேளு # 100 கோடி ஒருதரம்


====================


0 comments: