Wednesday, August 05, 2015

‘விசாரணை’ போலீஸ் டிபார்ட்மெண்ட்டை தாக்கும் படமா? - ஆடுகளம் இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணல்

‘விசாரணை’ படத்தில் ஒரு காட்சி | உள்படம்: இயக்குநர் வெற்றிமாறன்
‘விசாரணை’ படத்தில் ஒரு காட்சி | உள்படம்: இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
சர்வதேச திரைப்பட விழாக்கள் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டீர்களே?
சர்வதேச திரைப்பட விழா களம் மிகப் பெரிய சினிமா மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொடுக்கும் இடம். மரபார்ந்த படங்களுக்கான சந்தையாக அல்லாமல் கொஞ்சம் கலைநயத்தோடு எந்த சமரச மும் இல்லாமல் இருக்கும் படங் களுக்கு அங்கே மார்க்கெட் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்தபோது ‘ஆடுகளம்’ படத்தை காட்டினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘இதை ஏன் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவில்லை’ என்று கேட்டார். அப்போதைய அந்த சூழ் நிலையில் அனுப்ப முடியாமல் போனதை பகிர்ந்தேன். அதன்பிறகு சர்வதேச விழாக் களுக்கான தொடர்பு அதிகம் ஏற்பட்டது. இந்தப்படத்தை சர்வதேச படவிழாக் களுக்கு அனுப்பும் நோக்கத்துடன் தொடங்கவில்லை. படத்தை முடிக்கும் போது திரைப்பட விழாக்களுக்கு அனுப் பும் தன்மை இருந்தது. இப்படம் வெனிஸ் திரைப்படவிழாவுக்கு தேர்வானது பெரிய அளவில் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த திரைப்பட விழாவில் இதற்குமுன் இயக்குநர் மணிரத்னத்தின் படங்கள் கலந்துகொண்டிருக்கின்றன. அவருக்கு அங்கே வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுத்திருக்கிறார்கள். போட்டிப்பிரி வில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்பட மாக ‘விசாரணை’ தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனுஷ் போன்ற முன்னணி நாயகர்கள் உங்கள் படங்களில் நடிக்க தயாராக இருக் கும்போது இந்தப்படத்துக்கு நாயகனாக தினேஷை தேர்வு செய்தது ஏன்?
படத்தைப் பார்க்கும்போது உங்களுக் குத் தெரியும். இந்த ரோலுக்கு இவர்தான் சரி என்பது புரியும். படத்தில் நடித்த தினேஷ், ஆனந்தி, சமுத்திர கனி, கிஷோர், முருகதாஸ் உள்ளிட்ட ஒவ்வொருவரது கதாபாத்திரத்தையும் இன்னொருவர் மீது பொருத்திப் பார்க்க முடியாது. இவர் களைத் தவிற வேறு யாரும் இதைச் செய்ய முடியாது என்பது என் அபிப்ராயம்.
‘ஆடுகளம்’ படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டீர்கள்?
ஒரே ஒரு விஷயம்தான். ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு எனக்கு காலம் தேவைப்படுகிறது. அதேபோல அந்த படத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வரவும் காலம் தேவைப்படுகிறது. இதி லிருந்து வெளியே வந்து அடுத்ததாக புதிய விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் காலம் தேவைப்படுகிறது. இப்போது எடுத்திருக்கும் ‘விசாரணை’ திரைப்படம் சந்திரகுமார் என்பவரது வாழ்க்கையில் நடந்த விஷயம். அதை ‘லாக் - அப்’ என்ற பெயரில் நாவலாக அவர் எழுதியிருந் தார். நண்பர் தங்கவேல் மூலம் அறிந்து அந்த புத்தகத்தை படித்தேன். அடுத்து இதை தொடலாமே என்று அதன்மீது பாதிப்பு ஏற்பட்டதால் இந்தப்பட வேலை களை தொடங்கி முடித்திருக்கிறேன்.
திரைப்பட விழாக்களுக்கு மட்டுமாக எடுக்கப்பட்டு வணிகம் செய்யப்படும் திரைப்படங்கள் கேரளாவில் அதிகமாக உள்ளன. இங்கும் அப்படிப்பட்ட சூழல் வருவதற்கு வாய்ப்புண்டா?
அது இங்கே தேவையா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. என்னு டைய ஆசை ஒரு வெகுஜன சினிமாவை நல்ல தரத்தோடு எடுக்கவேண்டும் என்பது தான். அப்படி எடுக்க முடியும் என்பது என் நம்பிக்கை. வெகுஜன பார்வையாளர்களை தவிர்த்துவிட்டு ஒரு படத்தை எடுப்பது பற்றி யோசிப்பதற்கு தனி பக்குவம் வேண்டும். அது எனக்கு இன்னும் வரவில்லை. வந்ததும் பார்க்கலாம்.
உங்க நண்பர் தனுஷ் நடித்த ‘மாரி’ திரைப்படம் புறா பந்தயத்தை களமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததே. நீங்கள் 200-க்கும் மேலான புறாக்களை வளர்த்து வருகிறீர்கள். அந்தப் படத்துக்கு நீங்கள் ஆலோசனை கூறினீர்களா?
அவர் அந்தப்படத்தின் கதையை என் னிடம் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் ஒருமுறை புறாக்களை மையமாக வைத்து ஒரு லைனை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஏற்கனவே இந்தப் பின்னணியில் ஒரு கதையை ஒருவர் சொல்லியிருக்கிறார்’ என்று தனுஷ் கூறினார். ‘சரியாக இருந்தால் பண்ணுங்க’ என்று நானும் சொன்னேன். அவ்வளவுதான்.
இயக்குநர் அட்லி வசனத்தில், புதிய இயக்கு நர் இயக்க உங்கள் கதையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கப்போகிறாராமே? ஒரு இயக்குநரான நீங்கள் உங்கள் கதையை மற்றவர்கள் எழுத, இயக்க அனுமதித்தது ஏன்?
ஜி.வி.பிரகாஷ் எனக்கு பிடிக்கும். இதற்கு பதில் அவ்வளவுதான்.
சேனல் பிரச்சினை, புதுவித சேட்டிலைட் விற்பனை என்று சினிமாவில் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
எல்லாமே சரியாகும். ஒவ்வொரு சமயத்திலும் சினிமா புதிய வடிவம் எடுக்கும் அவ்வளவுதான். நெகடிவ் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்றார்கள். டிஜிட்டலில் இன்று எடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் எல்லாமும்.
‘விசாரணை’ எப்போது ரிலீஸ்?
அக்டோபர் மாதத்தில். அதற் கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்தது தனுஷ் படம்தானே?
ஆமாம். இரண்டு மாதத்தில் அந்தப் படத்துக்கான பணிகளை தொடங்க உள்ளோம்.


நன்றி - த இந்து


வெற்றி மாறன் வெற்றி வெற்றி வெற்றி என்று குவிபார் எனபதில் எள்ளளவும் மாற்று கருத்து இல்லை .....இவர் படங்கள் மிக அழுத்தமாக பார்பவர்கள் மனத்தில் பதிந்து விடுகிறது ....வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது......நமக்கு எல்லாம் பெருமையை தேடி கொடுத்து இருக்கிறார் ........டிவி பேட்டியில் மற்றும் சில பேட்டியில் (you tube ) இல் பார்த்ததில் அவர் மிக தெளிவாக நிதானமாக இருக்கிறார் .....என்ன செய்ய வேண்டும் ....அதற்கு கள மற்றும் கால சூழ்நிலை ஒத்து வந்தால் இதை இதை செய்யலாம் ....அல்லது அதற்கு வாய்ப்பு இல்லை என்று திடமாக .....தெளிவாக உள்ளார் .......பிடிவாதமாக இதை செய்ய வேண்டும் என்று இல்லாமல் ...யதார்த்த உலகுக்கு ஏற்றார் போல இருபது ....நிஜம் ஜெயிக்கும் என்று தெளிவாகுகிறது ..........உங்கள் வெற்றி தொடர வாழ்த்துகள் சார் ........சமுதாயத்தில் நடக்கும் பல விசயங்களை உங்கள் பாணியில் திரை படமாக கொடுத்தால் ......நன்றாக இருக்கும் .....எல்லாம் வல்ல சூட்சம சக்தி அதற்கு அருள் புரியும்

0 comments: