Friday, August 14, 2015

விஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல் ஓப்பன் டாக் பேட்டி

செல்வந்தன் படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்து ஸ்ருதி ஹாசன் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
செல்வந்தன் படக் கதையைக் கேட்டவுடன் உங்கள் முதல் ரியாக்‌ஷன் என்ன?
கேட்ட உடனேயே தெரிஞ்சிடுச்சு இது சென்சிபிள் கதைன்னு.
மகேஷ் பாபு குறித்து உங்கள் பதில், மீண்டும் அவருடன் நடிப்பீர்களா?
கண்டிப்பாக, பெர்ஃபாமன்ஸ் படி அவர் திறமைசாலி. மீண்டும் ஒரு படம் பண்ணுவேன் என நம்புகிறேன். மிகவும் பணிவான குணமுடையவர்.
ஒரு விஷயம் நீங்கள் எப்போதும் மறக்காமல் வீட்டிலிருந்து எடுத்துச் செல்வது?
செல்போன்.. நீங்கள் எல்லாம் ட்விட்டர்ல இருக்கீங்களே
உங்களை பொருத்தமட்டில் ’நடிப்பு’?
உணர்வு..
கமல் சார் படத்தை பார்த்துவிட்டாரா? உங்கள் அப்பா உங்களுக்கு நடிப்புக் குறித்து கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்?
அவர் நாளைக்குத் தான் பார்க்கப்போகிறார். அப்பா எப்போதும் அட்வைஸ் செய்ய மாட்டார்.
கமலும் நீங்களும் அப்பா மகளாக எப்போது  நடிக்கப் போகிறீர்கள்?அப்பா இயக்கத்தில் படம் எப்போது?
கேரக்டர் பொறுத்து கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும். அப்பா இயக்கத்தில் நடிப்பது என் கனவு..
விஜய் அண்ணாவுடன் பாடிய அனுபவம் குறித்து சொல்லுங்களேன்?
ஆஸம் சிங்கர் விஜய்..
எத்தனை மொழிகளை நீங்கள் சரளமாக பேசுவீர்கள்?
எதுவுமில்லை :(
விஷால் கேள்வி: எப்போது மியூசிக் ஆல்பம் ரிலீஸ் செய்யப்போகிறீர்கள் ஸ்ருதி?
விரைவில்..விரைவில் ..விரைவில் ... வேலைகள் நடக்கின்றன. உங்களுக்கும் அதில் ஒரு வேலை இருக்கிறது
படம் இயக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?
நான் அதை நேசிக்கிறேன். ஆனால் அதில் பொறுப்புகள் அதிகம்.
உங்கள் அப்பா படங்களில் எந்தப் படத்தை நீங்கள் ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள்?
புஷ்பக் (பேசும் படம்)
ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் செய்வீர்களா?
கண்டிப்பாக
சல்மானுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா?
நான் அதை நேசிப்பேன்.
உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
சந்தோஷமாக இருப்பது.
லவ்வா அல்லது அரேஞ்ச் மேரேஜா, தமிழ் பையனா அல்லது தெலுங்கு பையனா, உங்களை விட வயதில் சிறியவரை திருமணம் செய்வது குறித்து?
அய்யோ...
தெலுங்கு சினிமா உலகில் சமகால நடிகைகளில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்?
தமன்னா...
உலகம் அழிய ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?
தூக்கம்...
நீங்கள் வருந்தும் வேளையில் உங்களை வழிநடத்தும் விஷயம்?
நம்பிக்கை...
நீங்கள் ஓய்வு நேரங்களில் செய்வது?
தூக்கம், டிவி, அல்லது சினிமா
உங்கள் முதல் ஆட்டோகிராப்பை எந்த வயதில் போட்டீர்கள் என நினைவிருக்கிறதா?
ஆம் , இருக்கிறது.. எனக்கு அப்போது 6 வயது
உங்கள் அப்பாவிற்கு நீங்கள் கொடுத்த முதல் கிஃப்ட்? உங்கள் அப்பாவால் அழைக்கப்படும் செல்லப்பெயர் என்ன?
போயம் மற்றும் பெயிண்டிங்.. செல்லப்பெயர் அது ரொம்ப சீக்ரெட்..
தொகுப்பாளினி டிடி குறித்து சில வார்த்தைகள்?
எனர்ஜிடிக்..
கமல் சார் பொண்ணா இல்லாமல் இருந்தால் நீங்கள் நடிகையாக ஆகியிருபீர்களா?
தெரியலை (சிரிப்பு)
மேலும் பிடித்த விஷயங்களாக
கலர் : பிங்க்
ஊறுகாய்: வெள்ளைப்பூண்டு ஊறுகாய்
பிடித்த ஹாலிவுட் படம் : பேட்மேன் சூப்பர் மேன்
காத்திருக்கும் ஹாலிவுட் படம் : பேட்மேன் Vs சூப்பர் மேன்
என பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன். இன்னும் பல கேள்விகள் #AskCharuseela என்ற டேக் இட்ட வார்த்தையில் கேட்கப்பட சிறிது நேரத்தில் ட்ரெண்டானது. சாருசீலா என்பது சமீபத்தில் செல்வந்தன் (தெலுங்கில் ஸ்ரீமந்துடு) படத்தில் ஸ்ருதி ஹாசன் ஏற்று நடித்த பாத்திரம்.
கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றிகள், மன்னிக்கவும்! எல்லோரது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. என விடைபெற்றவர். மதிய உணவு ஹைதராபாத்தில் என அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தொகுப்பு : ஷாலினி நியூட்டன் 

நன்றி - விகடன்

0 comments: