Saturday, August 08, 2015

போர்ன்விட்டா பாக்கெட்டுக்கு தடையா?

1டாக்டர்.தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்குமாமே?நிஜமா?
ஆமா.உங்களுக்கு குளிர்ச்சி.புருசனுக்கு எரிச்சல்.


============


2 மிஸ்!எங்க ரசிகர் மன்றத்தோட கொள்கைப்படி உங்களை வாழ வைக்கலாம்னு இருக்கேன்.
கொன்றுவேன்.ஆல்ரெடி என் புருசன் வாழ வெச்சுட்டுதான் இருக்காரு


============


3 சார்.முத பாகமே ஊத்திக்குச்சே.எதுக்கு 2 வது பாகம்?
சீட்டாட்டம் சினிமா 2லயும் விட்ட இடத்துலதான் காசை எடுக்கனும்#மாரி 2


============

4 கற்பனை பேட்டி
மதுக்கடைகளை ஒழிக்க ஏன் தயங்கறீங்க,? மக்கள் தொகையைக்குறைக்க என்னாலான உதவி.


=============


5 பேமிலி ரூம்ல சாப்ட்டா 120 ரூபா.ஏசி ரூம் னா 130ரூபா ,ஹால்ல ன்னா110 ரூபா.
ஓஹோ.ஹோட்டல் வாசல்ல சேர் போட்டு சாப்டுக்கறேன்.இந்தாங்க 100 ரூபா

================

6 மேடம்.இது தான் உங்க 16 வது பிறந்தநாள் விழாவா?நம்பவே முடியல?
5 வருசத்துக்கு ஒரு தபா தான் கொண்டாடுவேன்


===============

7 வாசக பனியன் ஆம்பளைக்கு நல்லாருக்குமா? பொண்ணுக்கா?


ஆம்பளை போட்டா கடுப்பா இருக்கும், பொண்ணுங்க போட்டா எடுப்பா இருக்கும்


=================

ஏதோ ஆசை வார்த்தை ஆசை வார்த்தை ன்னு சொல்றாங்களே அப்படிபட்ட வார்த்த என்ன"?
ஆசை படத்துல ஹீரோ ஹீரோயின் கிட்டே பேசும் ரொமான்டிக் டயலாக்ஸ்

============

9 நம்ம ஆபீஸ் ரிசப்சனிஷ்ட் வீட்டுக்கு நேத்து சாயங்காலம் போனீங்களாமே?எதுக்கு?
சார்.ட்யூட்டி டைம் ல பொண்ணுங்க கூட பேசக்கூடாதுனு சொன்னீங்களே?


==============

10 டேமேஜர் - உங்க ஹவுஸ் ஓனர் நேத்து என் வீட்டுக்கு வந்தாரே? எதுக்கு?
2 மாசமா வீட்டு வாடகை ஏன் தர்லைன்னாரு?சம்பளம் பென்டிங்னேன்.அடுத்து மளிகைக்கடைக்காரர் வந்தாலும் உங்க வீட்டுக்கே அனுப்பிடறேன்,சமாளிச்சு பதில்சொலிடுங்க

==================

11 சார் மஞ்சள் நிலா (MANJAL NILA) (MANJALL NILA) எது சரி?
லைட் மஞ்சள் நிலான்னா ஒரு எல் ,டார்க் மஞ்சள் னா 2,எல்


==============


12 நீங்க எழுதுவது எல்லாம் கவிதையா?காமெடியா?கருத்தா? சத்தியமா புரியல தலைவரே !!


"நம்முளுது எல்லாமே மொக்கை கேட்டகிரி ல தான் வரும்


===============


13 டியர்.சூடா ஹார்ல்க்ஸ் போட்டுக்குடுத்து 10 நிமிசம் ஆகுது.ஆறுது.
யாருதா? நீதானே போட்டே?உன்னுதுதான்


=================

14 என்னடா தலைல ஈரம்"?
எங்க அம்மா அப்பா எனக்கு தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க? ஓஹோ.அதான் இப்டி மரமண்டையா இருக்கியா?

=============

15 காதலிப்பது ,காதலிக்கப்படுவது எது டாப்?
காத"லிப்" பது ,காதலி மேல் அப்பப்ப வேணும்னே படுவது இதான் டாப்


=============

16 இன்ட்டர்வ்யூவில்
இதுக்கு முன்னால என்ன செஞ்சிட்டிருந்தீங்க? உங்களுக்குப்பின்னால நிக்குதே ஒரு பிகரு அதை 4 வருசமா லவ் பண்ணிட்டு இருந்தேன்


==============


17 மேடம், உங்க கட்சில  இருந்த  மதுசூதனன் பேரை ஏன் சூதனன்னு கெஜட்ல மாத்தச்சொன்னீங்க?

மதுவை ஒழிப்பேன்னு சொன்னெனே?


=====================


18  டாக்டர்! இள நரை விழுது. என்ன செய்யனும்?

விழுந்தா அப்பவே வீட்டை விளக்குமற்றால் பெருக்கனும், சாப்பட்ல விழுந்தா ஆபத்து

==================19  ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல  போர்ன்விட்டா பாக்கெட்டைப்பார்க்கக்கூட அனுமதி  இல்லையே?ஏன்?


போர்ன் சைட்ஸ் எல்லாம் தடை பண்ணிட்டாங்களே?


==================


20   தலைவரே! , உங்க பேரன் பாண்டிச்சேரில சரக்குஅடிச்ச ஃபோட்டோ  ரிலீஸ் ஆகி இருக்கே?


 அப்போக்கூட அவன் தமிழ் நாட்டில் அடிக்கலை பார்த்தீங்களா?


================

0 comments: