Saturday, August 22, 2015

நிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+

நடிகர் : சந்தோஷ்
நடிகை :சாரிகா
இயக்குனர் :ராஜதுரை
இசை :ஜெயம்ராஜ்
ஓளிப்பதிவு :சர்வன்
நன்றி - மாலைமலர்
மார்டன் பெண்களால் செய்யாத ஒரு குற்றத்திற்கு சிறை தண்டனையையும், தனது குடும்பத்தையும் இழந்த, கால் டாக்சி டிரைவர், தன்னுடைய கால் டாக்சியில் பயணம் செய்யும் மாடர்ன் பெண்களை கடத்திக் கொண்டு வந்து ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார். 

அதன்படி, ஒருநாள் நாயகி சாரிகா இவளது காரில் பயணம் செய்கிறாள். மாடர்ன் உடையில் இருக்கும் அவளை வழக்கம்போல் கடத்தி வந்து, ஒரு அறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கிறான். மற்றொரு நாள் வெளிநாட்டில் இருந்து வரும் நாயகன் சந்தோஸ், அந்த கால் டாக்சி டிரைவரிடம் ஏடாகூடமாக பேச, அவனையும் கடத்திக் கொண்டு வந்து, சாரிகாவை அடைத்து வைத்திருக்கும் அறையிலேயே நிர்வாணமாக அடைத்து வைக்கிறான். 

ஒரே அறைக்குள் நிர்வாணமாக இருக்கும் நாயகனும், நாயகியும் எப்படி அந்த அறையில் இருந்து தப்பித்தார்கள்? கால் டாக்சி டிரைவருக்கு ஏற்பட்ட கொடூரம் என்ன? என்பதே படத்தின் கதை. 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் எம்.பி.ராஜதுரை, அதிலிருந்து பெண்கள் தப்பிப்பதற்குண்டான வீரம் அவர்களிடமே இருக்கிறது என்பதை இப்படத்தில் சொல்ல நினைத்திருக்கிறார். 

ஆனால், அதை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்குண்டான காட்சிகள் இப்படத்தில் இல்லை. படத்தின் மொத்த நீளமே 1.30 மணி நேரம்தான். அந்த குறுகிய நேரம்கூட படத்தை ரசிக்க முடியாமல் எடுத்திருப்பது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 

படத்தில் குறைவான கதாபாத்திரங்கள்தான். அவர்களையே மிகச்சரியாக நடிக்க வைக்காமல் போன இயக்குனரை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

படத்தில் நாயகியான சாரிகா படம் முழுக்க அரைகுறை நடிப்புடன் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளாலாவது அரைகுறை ஆடையுடன் வந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார் என்று எதிர்பார்த்தால், அதுவும் ஏமாற்றம்தான்.

 நாயகன் சந்தோஷின் நடிப்பும் மெச்சும்படியாக இல்லை. கால்டாக்சி டிரைவராக வருபவர் வில்லன் கலந்த நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 

மொத்தத்தில் ‘நிராயுதம்’ வீண் செலவு.

0 comments: