Monday, August 17, 2015

விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இந்தக்காலத்து மாடர்ன் பொண்ணுங்க ஹவுஸ் ஒயிபா வர நினைப்பதில்லை.நல்ல வசதியான பாரீன் ஒயிட் ஹவுஸ் ஒயிபா ஆக நினைக்கறாங்க============2 இந்தியாவில் நீங்க எந்த மூலைல இருந்தாலும் ரத்னா வை கல்யாணம் பண்ணிக்கிட்டா பாரத ரத்னா புகழ் னு ஜம்பமா பத்திரிக்கைல போட்டுக்கலாம்
=============3 தசரத சக்ரவர்த்தி மைன்ட் வாய்ஸ் = 60,000 பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுத்த நாமே கமுக்கமா இருக்கோம்.ஒரே ஒரு உதவி பண்ணிட்டு இவர் பண்ற அலப்பறை
==============
4 எதிரியிடம் நேருக்கு நேர் சவால் விடும்போதும் ,சபதம் எடுக்கும்போதும் நீ பசியில் இருக்கும் நேரமாக இருந்தால் உறுதியுடன் முடிப்பாய்!
=============
5 விக்ரமாதித்தன் =,என்ன கேள்வி வேணா கேளு.

வேதாளம் = விஜய் சிம்புக்கு அண்ணன் முறை.டி ஆர் க்கு விஜய் தம்பி முறை. அப்போ நயன் தாராக்கு TR யார்?

============

6 டி ஆர் ஒரு ஞானி.விஜய் சிம்புுக்கு உதவுவார் என தெரிந்துதான் பல வருடங்கள் முன்பே தன் பெயரை விஜய டி ராஜேந்தர். என மரியாதை செய்திருக்கிறார்

==========

7 பாத்திரம் கழுவி, சிங்க்க காலியா வச்சிருக்கும் போதும,புருசன் பர்சை காலி பண்ணும்போதும்் பொண்ணுங்க மகிழ்ச்சியா இருப்பாங்க போல # எகீ


========

8 காதலி I HATE U ன்னு சொன்னாக்கூட அசராம பார்ட்டியை பரோட்டா சாப்ட்ற மாதிரி ஆசையா பார்த்து I EAT U னு சொல்லிடனும்

=========

9 சொந்த முகத்தை DP வைக்கலாம் யோசிச்சிங் :))"னு ஒரு பொண்ணு அறிவிப்பு தந்தா நெட் தமிழன் டகார்னு ஓடி வந்து எனக்கு பர்ஸ்ட் காட்டுனு சொல்றார்


===========

10 நெட் தமிழன் சொந்த டிபி வைக்கும்போது எளிமையா சத்தம் இல்லாம வைக்கறான்.நெட் தமிழச்சி பர்ஸ்ட் லுக் போஸ்டர் னு பில்டப் கொடுத்துட்டு வைக்குது

===========

11 நிரோஷா மாதிரி ஷைனிங்கா ,கிளாமரா இருந்த பொண்ணுங்க எல்லாம் மேரேஜ் ஆனதும் அன்னை தெரேசா மாதிரி ஆகி விடுவது ஏனோ?

===========

12 வாழை இலையில் பரிமாறும் ஹோட்டல்களில் மட்டுமே சாப்பிடனும்னு எல்லோரும் உறுதியுடன் இருந்தா தட்டத்தில் பேப்பரில் பரிமாறுவது குறையும்

=============


13 வாழை இலையில் சாப்பிடு வது வீட்டுக்கு நாட்டுக்கு விவசாயிகள் வாழ்வுக்கு நம் உடல் நலனுக்கு நல்லது.


==========

14 காதலி லிப் கிஸ் குடுத்தா அது வாழை இலையில் புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.
கன்னத்தில் கொடுத்தா அது வெத்தலை ல வெரைட்டிமீல்ஸ் சாப்ட்ட மாதிரி


===========

15 மரவள்ளிக்கிழங்கு (கொங்குமணடல பாஷை)= குச்சிக்கிழங்கு (சென்னை) = கப்பைக்கிழங்கு (மதுரை,ராமநாதபுரம் ),ஏலேலக்கிழங்கு, விருதுநகர், சிவகாசி வட்டாரம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு(கொங்கு)= சீனிக்கிழங்கு(சென்னை)= சிந்தாமணிக்கிழங்கு(மதுரை ,தேனி)

=============

16 ஒரு கல்யாணத்துக்கு போகணும்னா பத்து நிமிசம் முன்னமே டிரெஸ், போட்டு ரெடி ஆகும் எளிமை ,துரிதம் ஆண்களுக்கேயானது

==============

17 அசின் லவ் டைரிக்குறிப்பு

1 சஞ்சய் ராமசாமி
2 சஞ்சய் தத்
4 Air voice MD
3 சல்மான்கான்
5 Micromax ஒனர்


=============

18 என்னைக்கலாய்க்க முயற்சிக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். சொந்தமாக யோசித்து புதுசாக எழுதவும். என் ட்வீட்டையே ரீமேக் செய்வது ஏனோ?;-)

===========

19 விகடன் விலை ரூ 10 இருந்தபோது ஒரு ஜோக்குக்கு சன்மானம் ரூ 100, இப்போ 25 ரூ பண்ணின பின்பும் அதே சன்மானம் ரூ 100 # என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா


===========

20
ஒரு பொண்ணு டிபி மாத்திடக்கூடாது.உடனே நெட் தமிழன் ஓடி வந்து டிபி பளிச்.துவைச்சீங்களா? சர்ப் ல நனைச்சீங்களா?னு ஒரே பாராட்டு மழை

==============

0 comments: