Tuesday, August 11, 2015

இவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா?

புலி படத்தில் நான் நடித்துள்ள வேடத்தில் இதுவரை எந்த நடிகரும் நடித்ததில்லை - ரோபோ சங்கர்  # மாரி  படத்துல ஹீரோவை டாமினேட் பண்ணின மாதிரி?==============பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை---குஷ்பூ

#,அம்மா லீவ்ல இருக்கும்போது இவங்கதான் ஆக்டிங் சி எம் போல

===========

3 கலாமிற்கு ஜெ. அஞ்சலி செலுத்தாதது அவமானம்: # உங்க மகன் புகையிலைக்கம்பெனி நடத்துவது அதை விட அவமானம்

==========

4 பேன் பார்க்கும்படியும் ஜடை பின்னி விட கூறி மாணவிகளை கொடுமைபடுத்தும் ஆசிரியை .பெற்றோர் புகார் # டார்ச்சர் பன்றதுதான் டீச்சர் குணம் போல

===========

5 டைவர்ஸ்க்குகோர்ட் படி ஏறுவதைவிட திருமணத்துக்கு முன்பே பிரிவது நல்லது: திரிஷா# திருமணத்துக்கு முன்பே சேர்ந்துட்டாலும் அப்டிப் பிரிஞ்சிடலாமா?


=============

6 அ.தி.மு.க–தி.மு.க.வுக்கு மாற்று அணி பா.ம.க.:-GK மணி# கட்சில ஜி கே வை வளர்த்தனும்.(ஜெனரல் நாலெட்ஜ்),ஜிகே மணி மட்டும் வளர்ந்தா போதாது

===========

7 அடக்குமுறையை கைவிடவேண்டும் அதிமுகவுக்கு கருணாநிதி எச்சரிக்கை..# ஜெ = கை விடலைன்னா?
மு க = கை விடுங்கன்னு மீண்டும் கடிதம் எழுதுவேன்

=========


8 நான் முதல்வரானால் தமிழகம் சாராயம் இல்லாத மாநிலமாகும்- சொல்கிறார் அன்புமணி # தோராயமா இப்போ 6 தலைவர்கள் அப்டிதான் சொல்றாங்க========9 தூய்மை இந்தியா’ திட்ட வரிசைப்படுத்தலின் 476 நகரங்களில் மைசூருக்கு 1ம் இடம், திருச்சி 2ம் இடம் # தமிழ்நாட்டின் தலைநகரா திருச்சியை ஆக்கிடுங்க 
===================10  மோடி-ஜெயலலிதா சந்திப்பை அரசியலாக்கக்கூடாது.-தமிழிசை# சமையல் ரூம்ல யாரும் சோறாக்கக்கூடாதுன்னு சொல்ற மாதிரி இருக்கேம்மா மின்னல்=


=================


11 அஜித்துக்கு நான் ரசிகன் ; விஜய்க்கு நான் தம்பி-சிம்பு# நயன் தாராவுக்கு முன்னாள் காதலன். ஹன்சிகா வுக்கு இந்நாள் ஊடல் காதலன்


============12 மோடிக்கு வர முடியுது மாமனிதர் கலாமுக்கு முடியாதா..? - வைகோ கேள்வி # ஆதாயம் இருந்தாத்தான் அரசியல்வாதி ஆத்தோட போவான்==========13 டாஸ்மாக் மதுவால் கடந்த 13 ஆண்டுகளில் 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் மரணம் # டெய்லி நைட் படுக்கும்போது 10 பாட்டில்ல இருந்து 90 கட்டிங் அடிச்சா?=========14 தமிழ் படத்தில் நடிக்க விரும்புகிறேன்:- மகேஷ்பாபு  # இதுக்குப்போட்டியா எங்க தளபதி  தெலுங்குப்படத்தில்  தோன்றுவார்==============15 இந்தியாவில் 1,866 அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷன் தகவல்   90% கட்சிங்களுக்கு  தொண்டர்களே  இல்லை
=================
16 யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்-தமிழிசை # மனசுக்குள்ள பெரிய ராம்தாஸ்னு நினைப்பு
================
17 தி.மு.க.வில் இருந்து ராஜினமா செய்த காரணம் எனக்கும் கருணாநிதிக்கும் மட்டும் தெரியும்: நடிகை குஷ்பு # அப்போ சுந்தர் சி க்கு கூட தெரியாதா?


==============

18 திருமணத்துக்கு தயாராகும் அசின்... மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார # அது எப்டிங்க கரெக்டா தொழில் அதிபரா வளைச்சு போட்றீங்க?


=============

19 நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு சரத்துக்கா, விஷாலுக்கா?: குஷ்பு பதில் # சத்தியமா விஷாலுக்கு தான்.

=============

20 வனத்துறை அமைச்சராக பதவியேற்றார் ஆனந்தன்: ஜெ. பங்கேற்பு # இவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா?

=============


0 comments: