Monday, August 17, 2015

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம்:

ஆண்களின் நட்பு திருமணத்துக்குப் பிறகும் தொடர்வது சாத்தியமா? நட்புக்கும் திருமண / காதல் வாழ்க் கைக்கும் இருக்கும் முரண்களைத் தீர்க்கவே முடியாதா? இந்தக் கேள்விக் கான பதில்தான் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’.
வாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) பால்யம் முதலே நண்பர்கள். இருவரில் வாசுவுக்குக் கல்யாணம் நடக்கிறது. சரவணன் செய்யும் முட்டாள் தனமான குறும்புகளால் வாசுவின் மனைவி செல்லம்மா (பானு) எரிச்சல் அடைகிறாள். சரவணனுடனான நட்பை வெட்டிவிட்டு வந்தால்தான் தாம்பத்திய வாழ்க்கை என்கிறாள் செல்லம்மா. சரவணனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது வாசுவின் கணக்கு.
சரவணன் ஐஸ்வர்யாவைக் (தமன்னா) கண்டதுமே காதலில் விழுகிறான். ஆனால் ஐஸ்வர்யா, சரவணனைப் பிடிக்க வில்லை என்று விலகிச் செல்கிறாள். ஏகப்பட்ட துரத்தல்களுக்குப் பிறகு காதல் கைகூடும்போது வாசுவால் பிரச் சினை முளைக்கிறது.
திருமண / காதல் உறவால் நட்புக்கு வரும் சோதனை என்ன ஆயிற்று?
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச் சவங்க; ஒண்ணாவே குடிச்சவங்க என்று முதல் காட்சியில் தொடங்கும் டாஸ் மாக் விளம்பரம் படம் நெடுகத் தொடர் கிறது. குடியே வாழ்வு என்றிருக்கும் நண்பர்களுக்கு நட்பின் எல்லை எது என்று தெரிவதில்லை. முதலிரவன்று படுக்கை அறைக்குள் விபரீதக் குறும்பு செய்யும் அளவுக்கு ஒரு நட்பு இருந்தால் அதை எந்த மனைவியால் ஏற்க முடியும்? படத்தின் தொடக்கமே இப்படி இருக்கிறது. தன்னை உதாசீனப்படுத்தும் தமன்னாவை வெறுப்பேற்றிப் பொறாமை கொள்ளவைக்க வேண்டும் என்பதற்காக அவளது தோழி வித்யூ ராமனை நண்பர்கள் கறிவேப் பிலையாகப் பயன்படுத்துவதும் அவரது உடல்பருமனையும் அவரது குடும்பத் தினரையும் கேவலப்படுத்துவதும் இழிவான நகைச்சுவை.
அசட்டுத்தனமாக நடந்துகொள்வது பற்றிய சொரணையே இல்லாத நண்பர் கள் தங்களைத் தூக்கியெறிந்த மனைவி, காதலி இருவரையும் பணியவைக்க சங்கம் ஆரம்பித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அங்கே ஷகிலா வரு கிறார். ஊடகங்களும் ஓடோடி வரு கின்றன. நகைச்சுவை என்ற பெயரால் ராஜேஷ் அரங்கேற்றும் அபத்தங்களுக்கு எல்லையே கிடையாதா?
ஒரு பெண்ணைக் கவர்வது எப்படி என்பதுதான் பெரும்பாலான படங் களின் தலையாய பிரச்சினை. அதை வைத்துத்தான் ராஜேஷ் படத்தை ஓட்டு கிறார். ஆனால் அதற்கான காட்சிகளில் துளியாவது புதுமை இருக்க வேண் டாமா? நட்பால் காதலுக்கும் குடும்ப வாழ்வுக்கும் வரும் பிரச்சினையைச் சொல்லும் காட்சிகளும் மனதைக் கவரும் வகையில் இல்லை.
போதாக்குறைக்கு ஆபாச இரட்டை அர்த்த வசனங்களும் நகைச்சுவை போர்வை போர்த்திக்கொண்டு ஆங் காங்கே எட்டிப் பார்க்கின்றன.
சரவணனாக ஆர்யாவும் வாசுவாக சந்தானமும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். சந்தானத் தின் நகைச்சுவையைவிட, அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. ஐஸ்வர் யாவாக நடித்திருக்கும் தமன்னா, செல்லம்மாவாக நடித்திருக்கும் பானு ஆகியோரின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. ஒரு காட்சியே வந்தாலும் விஷால் கவர்கிறார். ஆனால் அந்தக் காட்சியும் டாஸ்மாக் விளம்பரம்தான்.
இமானின் இசையில் பாடல்கள் இளைஞர்களைத் தாளம் போடவைக் கின்றன. ராஜேஷ் இந்தப் படத்தில் எடுத்துக்கொண்ட விஷயம் முக்கிய மானது. ஆண்களின் நட்பு அவர்கள் திருமண வாழ்க்கையை எப்படிப் பாதிக் கிறது என்பது தீவிரமாக விவாதிக்க வேண்டிய கேள்வி. இதை வைத்து நகைச்சுவைப் படம் எடுக்க அவர் விரும்பியதில் தவறில்லை. ஆனால் குடும்பம் - நட்பு என்னும் முரணைக் காட்டுவதற்கான காட்சிகளில் கற்பனை வறட்சி தெரிவதுதான் பிரச்சினை. திரும்பத் திரும்ப மதுக் கோப்பையை உயர்த்துவதும் கலாய்த்தல் என்னும் பெயரால் யாரையாவது கேவலப் படுத்துவதும்தான் நகைச்சுவை என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பார் போலி ருக்கிறது. சந்தானத்தின் சீரிய துணை யுடன் இந்தக் காரியத்தை அவர் படம் முழுவதும் செய்கிறார். குண்டாக இருக்கும் பெண்களைக் கேவலப் படுத்துகிறார். அப்பாவிக் குடும்பத்தைக் கேவலப்படுத்துகிறார். அப்படிக் கேவலப் படும் குடும்பத்தின் ஜாதி அடை யாளத்தையும் வெளிப்படையாகவே காட்டுகிறார். இளம் ரசிகர்களைக் கிச்சு கிச்சு மூட்டினால் போதும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.
நகைச்சுவைக்கான கற்பனைப் பஞ்சத்தைக் காட்டும் படமாக இதைச் சொல்லலாம்.


thanx - the hindu

 • Pasupathyk  
  parallel lines of life
  about 10 hours ago
   (0) ·  (0)
   
  • பாலு  
   தம்பி ராசேசு, எப்ப திரைப்படம் எடுக்கப் போறீங்க ???
   about 11 hours ago
    (0) ·  (0)
    
   • RRr  
    இந்த மாதிரி குப்பை படத்தை எப்படித்தான் சென்சர் அனுமதி குடுகிரர்களோ??
    about 12 hours ago
     (1) ·  (0)
     
    Vijay Up Voted
    • KKilikkaadu  
     வாசுவும் சரவணனும் ஒண்ணா VSOP குடிச்சவங்கன்னு தலைப்பு இருந்திருக்கலாம்..கண்றாவி படம்..மதுவிலக்குக்கு எதிரா போராடுறவங்க,பெண்களை இழிவா சித்திரித்தால் போராடும் பெண்கள் அமைப்பு என யாருமே இந்த படத்துக்கு எதிரா தொடப்பத்த தூக்காதது வருத்த மளிக்கிறது..
     Points
     3115
     about 13 hours ago
      (1) ·  (0)
      
     Vijay Up Voted
     • MMohamed  
      சந்தானத்தின் எல்ல படங்களிலும் சாராயத்தை அல்லது குடிப்பதை ஊக்குவிப்பது போன்ற வசனங்கள் நிச்சயம் உண்டாகும். இது போன்ற வாசனைகளை சென்சார் போர்ட் தடை செய்ய வேண்டும். இப்படி வசனங்கள் உள்ள சினிமாக்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும்.
      Points
      22945
      about 15 hours ago
       (1) ·  (0)
       
      Vijaya Up Voted
      • RRamaswamy  
       தந்தை ( ஸ்டாலின் ) மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தும்போது மகன் ( உதயநிதி ) மது விளம்பரம் செய்து படம் ( VSOP ) வெளியிடுகிறார். நல்ல காமடி போங்கள்.
       Points
       3075
       about 17 hours ago
        (2) ·  (0)
        
       Vijaya · Vijay Up Voted
       • NNarayanan  
        இதுக்கு வாலு எத்தணை புள்ளி?
        about 18 hours ago
         (0) ·  (0)
         
        • அந்நியன்  
         sorry friend (Narayanan). இதுக்கு "வாலு" எவ்வளவோ மேல்...
         about 16 hours ago
          (0) ·  (0)
          
        • RRajkumar  
         இங்க கமெண்ட்ஸ் போட்ருக்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கனு நினைகிறன்,குடிக்கிற சீன படத்துல வந்த அந்த படம் கெட்ட படமா???இந்த படம் ஒரு காமெடி படம், அது எல்லாருக்குமே தெரியும் சோ ஒரு காமெடி படம் எப்படி ரசிக்கும்படி இருக்குமோ அது இருந்த போதும், இது இந்த படத்துல நல்லாவே இருக்கு,2.5 மணி நேரம் போறது தெரியல,இப்போ தமிழ் படத்துல நிறைய படம் குடிக்காத மாதிரியும் வந்திருக்கு அத பாத்து யாராவது நல்லவனா திருந்தி இருக்காங்களா????,அதனால படத்துல குடிக்ரத காட்ரதுனால தான் எல்லாரும் கெட்டு போறங்கனு சொல்ல முடியாது,படம் பாக்க போகும்போது இது ஒரு படம் அப்டின்னு நினச்சிட்டு போங்க, அங்க போயிடு ஆராய்ச்சி பண்ண தேவ இல்ல,இந்த படத்த பொருத்தவரைக்கும் காமெடிக்கு பஞ்சம் இல்ல,ஒரு காமெடி படத்துக்கு இத விட வேற எதுவும் தேவ இல்ல,,இந்த படத்துக்கு கண்டிப்பா 5 மார்க் தரலாம்..
         about 19 hours ago
          (0) ·  (2)
          
         Ben · SAM Down Voted
         • R.M.Manoharan Manoharan  
          விமர்சனமே கண்ணராவியா இருக்கு. சென்சார் போர்டை சுத்தமாக ட்ரை-க்லீனிங் செய்யவேண்டும். சந்தானம்,ஆர்யா இவர்கள் இருவரையும் ஒதுக்கினால்தான் தமிழ் திரைப்படம் உருப்படும்.
          Points
          13950
          about 20 hours ago
           (3) ·  (1)
           
          ahmad Down Voted
          • அந்நியன்  
           இதுக்கு வாலு... எவ்வளவோ மேல்...
           Points
           125
           about 20 hours ago
            (0) ·  (0)
            
           • Aashok  
            எப்பிடித் தான் சென்சார் போர்ட் அதிகாரிகள் இந்தப் படத்தை பார்த்தார்களோ ??ரொம்ப நல்லவங்க தான்..குடிகலசாரம் வளர்க்கும் இது போன்ற படங்களை அனுமதிக்கவும் செய்கிறார்கள்??
            Points
            3155
            about 21 hours ago
             (2) ·  (0)
             
            • Ssrini  
             குப்பை படம்
             Points
             125
             about 21 hours ago
              (0) ·  (0)
              
             • Ssrini  
              Kuppai
              Points
              125
              about 21 hours ago
               (0) ·  (0)
               
              • Ssakthikumar  
               இந்த கேடுகெட்ட படத்துக்கு 1 மார்க் போடுறதே பெருசு, பூஜ்ஜியம் option இருந்தா வைங்கப்பா
               Points
               760
               about 22 hours ago
                (6) ·  (0)
                
               ashok · அந்நியன் · Raj · Vijay Up Voted
               • Aansar  
                சுமார்
                about 22 hours ago
                 (0) ·  (0)
                 
                • Johnson Ponraj  
                 நல்ல விமர்சனம்.
                 Points
                 6910
                 about 22 hours ago
                  (0) ·  (0)
                  
                 • PPSMURUGESAN  
                  Good

                 0 comments: