Monday, August 10, 2015

பர்ப்யூம் போட்டா பொண்ணுங்களுக்குப்பிடிக்குமாமே?நிஜமா?

சர்வர்! தோசை என்ன இவ்ளவ் சின்னதா இட்லியை விட சிறுசா இருக்கு?


நீங்க தானே பொடி தோசை கேட்டீங்க?============


2 தலைவரே! க்ரீன் டீ குடிக்கறதை ஏன் நிறுத்தீட்டீங்க?


பச்சை பச்சையா வார்த்தை வந்துடுது.


============

3 சாப்பாடு 90 ரூபா.தயிர் ஒரு கப் 10 ரூபா.மோர் எவ்ளவ் வேனாலும் வாங்கிக்குங்க.


ஓஹோ.சரி.இந்த வாட்டர் கேன் ல மோர் பில்லப் பண்ணி குடுங்க


============


4 சார்.பேமிலி ரூம் ல தனி ஆளுக்கு அனுமதி இல்லை.ஹால் ல யே சாப்ட்டுக்குங்க.
ஓஹோ! தனி யா உட்கார்ந்திருக்கும் அந்தப்பொண்ணைக்கூட்டிட்டு வரேன் இருங்க


==============


5 ஆண்கள் தன்  அழகு மீது நம்பிக்கை இல்லாம   கூலிங்க் கிளாஸ் போட்டுக்கறாங்க.


 ஹலோ ! டாஸ்மாக்ல போய் கிளாஸ் போட்டாதான் தப்பு,இது ஸ்டைலுமா!


----------------------------


6  டாக்டர்! சாராயம் (ஆல்கஹால்) ஜீரணிக்காது!! நேரடியாக இரத்தத்தில் கலந்துவிடும்!!னு சொல்றாங்களே உண்மையா?

ஆமா! ரத்தத்தின் ரத்தமேனு கூப்பிடலாம்


======================


7  சினிமாக்குப்போலாம் வர்றியா டியர்


என்ன படம்?
மிஷின் இம்பாசிபிள்
ம்ஹூம். ஏன்?
மிஸ் இன். இம்பாசிபிள்

=============


8 மிஸ்! உங்க பேரு என்ன?


NIKITHA
என்னது?நிக்கிதாவா?அப்போ உங்க தங்கச்சி பேரு உக்கார்ந்திருக்குதா வா?


============

9 கார்ல 6 பேர் போகக்கூடாதா?ஏன்?


டிராபிக் S.I = டூ வீலர் ல ட்ரிபிள்ஸ் போகக்கூடாதுன்னா போர் வீலர்ல 6 பேர் போகக்கூடாதில்ல?=========


10 சார்.மகேஷ் பாபுவோட செல்வந்தன் ஹிட்டாம்.ரீமேக்கிடுவோமா?


டைட்டில் குபே"ரன்"னு வைப்போம்.செம ஓட்டம் ஓடும்.100 கோடி கன்பர்ம்===========

11 சார்.புஷ்பா ங்கற பேரே மாடர்னாத்தானே இருக்கு?அதை இன்னும் மாடர்னா மாத்தப்போறீங்களாமே?எப்டி?


ஒபாமாபா


============

12 அதர்வா வுக்கும் கலாநிதி மாறன் க்கும் என்ன வித்தியாசம்?


அவரு சண்டி வீரன்
இவரு சன் டிவி வீரன்=======13 உளுந்து வடை செய்யும் போது கொஞ்சம் தண்ணியா ஆயிடுச்சுன்னா என்ன பண்ணனும்?
அதை தண்ணில விழுந்த வடை னு சொல்லி சாப்ட்ரனும்


=========14 அஞ்சு அரியர் வச்சுருந்தா க்ரூப் 1 எக்ஸாம் எழுதலாமா..?!"
அஞ்சு நல்லா படிச்சிருந்தா எழுதலாம்


=============


15 டியர்.நீங்க எப்ப டபுள் மீனிங்ல பேசறீங்க?எப்போ சிங்கிள் மீனிங்னே புரிய மாட்டேங்குது.
சிம்ப்பிள்.நீ ஒத்தை ஜடை போட்டிருந்தா சிங்கிள் மீனிங்

=============


16 டியர், கால்ல இருந்து  கொலுசு நழுவுது அடிக்கடி.இதுக்கு என்ன அர்த்தம்?


தத்தி கணவன் = நீ திருகாணியை லூசாப்போட்டிருக்கேனு அர்த்தம்


================


17  ஹைட்டா இருக்குற பொண்ணுங்களும் ஹைஹீல்ஸை போட்டுக் கொள்ளும் உளவியல்  என்ன?


 ஹை லைட்டா ஹைஹீல்சாவது இருக்கட்டும்னுதான்

==============
18 வாலு படம் பயங்கரமா ஓடி ஹிட்டாயிடுச்சுனா என்ன பண்ணுவாங்க?


எல்லாருமே அவங்கவங்க படத்தை வேணும்னே லேட்டா ரிலீஸ் பண்ணுவாங்க # செண்ட்டிமெண்ட்ஸ்


==============


19 பர்ப்யூம் போட்டா பொண்ணுங்களுக்குப்பிடிக்குமாமே?நிஜமா?

நோ.ராங்க் "சென்ட்"டிமெண்ட்ஸ்


============


20 ஒரு ஆண் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்போ?

ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுும் வரை மட்டுமே.

============


0 comments: