Monday, August 17, 2015

மீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்கும் பொடுகு போய்டுமா?

அசின்–தொழில் அதிபர் ராகுல் சர்மா காதல் மலர்ந்தது எப்படி?


பேங்க் பேலன்சைப்பார்த்ததும் மனசு பேலன்ஸ் தவறி காதல்ல விழுந்துடுச்சாம்


==============

2 டாக்டர்

பொன்னி அரிசி சாப்பிட்டா எனக்கு சுகர் வருமா?
பொன்னிக்குத்தான் சுகர் வரும்.உங்களுக்கு எப்டி வரும்?===============


3 டாக்டர்.எனக்கு் மேரேஜ் ஆகிடுச்சு.இனி கீரை வகை எல்லாம் சாப்பிடலாமா?


ஒய் நாட் மேடம்?
பொன்னாங்"கன்னி"க்கீரை கன்னிப்பொண்ணுங்கதானே சாப்பிடனும்?==============

4 சார்.உங்க பேங்க்ல ஒரு லோன் வேணும்.


ம்ம் என்ன பிஸ்னெஸ்?
லோன் தர சின்னதா ஒரு பேங்க் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்


===============

5 புலியோட தலை மேல எதுக்கு பேரீச்சம்பழம் வெச்சு போட்டோ எடுக்கறீங்க?


புலி அப்டேட்ஸ் வேணும்னு ரசிகர்கள் ஆசைப்பட்டாக


========

6 சாருமதி ,பானுமதி,சந்த்ரமதி, இவங்க எல்லாம் மேரேஜ்க்குப்பின் புருசனை மதிக்கலைன்னா ஹப்பி எப்டி கூப்பிடுவார்?


சாரு"மதிக்கலை"
பானு"மதிக்்கலை"==============

7 டாடி.எனக்கு இது கவுரவப்பிரச்னை.ராஜ்மவுலி கூட படம் பண்ணனும்.


அது டவுட்.மழலைப்பட்டாளம் மவுலி கூட வேணா ஒரு படம் பண்ணலாம்


=============

8 மிஸ்! உங்க வீட்ல இன்னைக்கு சமையல் கொள்ளு ரசமா?


ஆமா எப்டி தெரியும்?
குதிரை வால் ஹேர் ஸ்டைல் ல வந்திருக்கீங்க்ளே?ஒரு யூகம்தான்===============

9 DR!மீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்கும் பொடுகு போய்டுமா?


யோவ்.லூசாய்யா நீ?மீரா குளிச்சா மீரா கூந்தல்தானே க்ளியர் ஆகும்?


============

10 மிஸ்! உங்களுது என்ன ராசி?


ஜோசியரே! டூயல் "சிம்"ம ராசி.===============

11 ஜனாதிபதி என் கருணை மனுவை நிராகரிச்ட்டார்.எனக்கு கருணை கிடைக்க என்ன வழி?


கருணை மலரோட அம்மா அப்பா கிட்டே போய் முறைப்படி பொண்ணு கேளுங்க


================

12 சிம்பு ரசிகன்(காதலன்)் = வாலு FDFSவர்றியா?
விஜய் ரசிகை(காதலி) = உன் வாலை சுருட்டிக்கிட்டு சமர்த்தா படம் மட்டும் பார்க்கறதா இருந்தா வர்றேன்


=========


13 பொண்ணுக்கு சமைக்கறதுனா ரொம்ப பிடிக்கும்னு சொன்னீங்களே மாமா?


பிடிக்கும்னுதான் சொன்னேன்.சமைக்கத்தெரியும்னா சொன்னேன்?=========

14 மேடம்.உங்க வீட்ல இருந்த பெரிய உண்டியலை கடாசிட்டு சின்ன உண்டியல் வெச்சிருக்கீங்களே.ஏன்?
டாக்டர்.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகுனு சொன்னாக


============

15 டாக்டர்.வெட்கப்படும்போது கன்னம் சிவக்கனும்னா நான் என்ன செய்யனும்?


மிஸ்! வெட்கப்படனும்.சிம்ப்பிள்


===========

16 டியர்.தாலிக்கயிறை மஞ்சள் ல அணிஞ்சா அழகா? தங்கச்செயினா அணிஞ்சா அழகா?

2 மே அழகுதான்.ஆனா கழுத்துலயே  இருக்கனும்.கழட்டி பீரோல வைக்கக்கூடாது


===================


17 சார்.கல் வெச்ச நெக்லஸ் கம்மி விலைல கிடைக்குமா?

மேடம்.கம்மி விலைல வேணும்னா மண் வெச்ச நெக்லஸ்.தான் செய்யனும்


===========


18 மிஸ்! 10 எண்றதுக்குள்ளே என் லவ் க்கு ஓக்கே சொல்லிடுங்க

விக்ரம் ரசிகை =இல்லைன்னா?
11 டூ 20 வரை எண்ணுவேன்

============

19 கோவில் சிலைகளை திருடி விற்பவர்களுக்கு சாமி என்ன தண்டனை கொடுப்பார்?"

தெய்வீகத்திருட்டு னு பாராட்டுப்பத்திரம் தான்

============

20 ஜட்ஜ் = கோயில் சிலையை எதுக்கு திருடுனே?

கைதி =,சிலை திருடுவதுன்னு முடிவானா கோயில்ல தானே திருடனும் யுவர் ஆனர்.?வேற.ஆப்சன் இருக்கா?

=================

0 comments: