Wednesday, August 05, 2015

புலி நேமாலஜிப்படி விஜய்க்கு கை கொடுக்குமா? - ஒரு ஜோதிட ஆராய்ச்சி

1  புலி போஸ்டரில்  யாராலும் கணிக்கவே முடியாத கேள்வி

பௌடர்ஸ்டார் யார்?

1 விஜய்
2 ஸ்ரீதேவி
3 ஹன்சிகா
4 ஸ்ருதி


===================

பொண்ணுங்க புது டிபி யோட எண்ட்ரி கொடுக்கும்போது நெட் தமிழன் புத்திசாலித்தனமா “டிபி நல்லாருக்குன்னு டிஎம் பண்ணலாமா?”னு டி எல் லயே ட்வீட்


=================


ஏண்டி ஏண்டி  பாட்டு  செம ஹிட் ஆகும், மன்னவனே  பாட்டு படம் ரிலீஸ் ஆனபின் ஹிட் ஆகும், மற்ற பாட்டேல்லாம் ok ரகம் தான் என மக்கள் சொல்றாக ==============


எப்போதும்  பட்டுச்சேலையில் மங்களகரமா, லட்சுமிகரமா இருக்கும் பெண் சுடிதார் போட்டால்  ஹேய்  லட்”சுடி” னு கூப்பிடலாம்


===============


தன் அபிமான அரசியல் தலைவரோ, சினிமா ஹீரோவோ கலாய்க்கப்பட்டால் அதுக்கு பதில் சொல்லாம ஃபேமிலியை சம்பந்தம் இல்லாம இழுப்பான் நெட் தமிழன்


==================


6  விஷால் க்கும் ஆர்யாக்கும் ஏதோ சண்டை போல .லட்சுமிமேணன் ,வர லட்சுமி யாராவது வந்து பைசல் பண்ணுங்க.


============

7 இன்று உலக நண்பர்கள் தினம்.உங்கள் காதலியையோ கள்ளக்காதலியையோ சந்திக்காதீர்.இனி நண்பர்களாய் இருப்போம் என அல்வா கொடுக்க வாய்ப்பு இருக்கு (2/8/15)

==========


8 சாதா தமிழன் ஆடியோ சிடி வாங்குனமா பாட்டைக்கேட்டோமானு கம்முனு இருக்கான்.நெட் தமிழன் பில் லை அப்டேட்டி ஆதாரம் இதோ ங்கறான்


=============


9 புலி பாட்டு அவுட் ஆகிடுச்சுன்னு விஜய் ரசிகர் சொன்னா ஒரு அர்த்தம் ,(ரிலீஸ்டு)
பொது ரசிகர் சொன்னா ஒரு அர்த்தம் (புட்டுக்கிச்சு)


=============


10 ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா பொண்ணுங்க வீட்டு வேலை செய்யும்போது கூட 10 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி கண்ணாடியைப்பாத்துக்குவாங்க போல


================


11 நல்லதுக்கு எப்பவும் காலம் இல்லை.
நல்லா இருந்த கலாம் இப்ப இல்லை.


==============


12 ஏன் திரிஷாவை கல்யாணம் பண்ணிக்கக்கூடாது.?
சிம்பு = நான் ஒரு பிகரை ஒரு டைம் கரெக்ட் பண்ணிட்டேன்னா நானே திரும்ப திரும்பிக்கூடப்பார்க்க மாட்டேன்


==============


13 சச்சின் ,வில்லு வரிசையில் புலி ஹாட்ரிக் ஹிட் னு விஜய் ரசிகர்களே சொல்லிக்கறாங்க.அர்த்தம் புரிஞ்சுதான் கலாய்ச்சுக்கறாங்களா?

=============


14 புலி நேமாலஜிப்படி விஜய்க்கு கை கொடுக்குமா?
இதுக்கு முந்தைய விஜய் ன்.2,எழுத்துப்படங்கள்
1 யூத் 2 சுறா 3,ஆதி 4 குஷி
இதுல 4 க்கு 1 தான் ஹிட்டு


==============

15 ஆடுபுலிஆட்டம்-ஹிட்
புலி வருது-பிளாப்
குட்டிப்புலி-சி சென்ட்டர் ஹிட்
சிங்கம்புலி - பிளாப்
அம்புலி -ஹிட்
புலிப்பார்வை -மீடியம
பாயும் புலி-ஹிட்
புலி=?

===============


16 பொண்ணுப்பார்க்கப்போகும்போதே ு ஸ்கூல் ஹோம் ஒர்க் நீயே செஞ்சியா?னு கேட்டுக்குங்க.அந்த ஹோம் ஒர்க்கே செய்யாதது இந்த ஹோம் ஒர்க்கா செய்யும்?


===========


17 கலாமுக்கு கோவில் கட்டுவது சரியா அல்லது மசூதி கட்டுவது சரியா?"
முதல்ல உங்க வாயைக்கட்டனும்.அடுத்து அவருக்கு மணிமண்டபம் கட்டனும், பின் ஸ்கூல் , காலேஜ் கட்டனும்

===============

18 உலகிலேயே அதிக மதிப்புத்தரவேண்டியது நம் பெற்றோருக்கே!உயர்வு நவிற்சி அணி யில் சிக்கி இன்னொருவரைப்புகழ நம் பெற்றோரைக்குறைத்து மதிப்பிடாதீர்!


===========


19 பூப்போட்ட சட்டை டிசைன் அழகாகப்பொருந்துவது தமிழ் நாட்டில் இரண்டே பேருக்குத்தான், அதில் ஒருவர் ராமராஜன்;-)

==============


20 B.Sc Fashion TechFinal year காலேஜ்ல  படிச்ட்டிருக்கும் பொண்ணு கிட்டே  உங்களை ஹவுஸ் ஒயிஃப்னு நினைச்ட்டிருந்தேன்னு அடிச்சு விடுவான் நெட்தமிழன்


======================
0 comments: