Friday, August 21, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/8/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1 திகார் 2 ஜிகினா 3 அலுச்சாட்டியம் 4 வீரபாண்டிய கட்டபொம்மன் ( டிடிஎஸ் பிரிண்ட்) 5 KICK 2 ( TELUGU)
fantastic 4 # 21.8.2015

Madurai theatres list thikaar

1 திகார்
காட்சன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் “திகார்” படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் அலெக்ஸாண்டர் என்ற பிரபலமான தாதா வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நடிக்கிறார்.
மற்றும் இளம் கதாநாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார்.
அகன்ஷாபூரி, கிருதிபாபட் ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் காதல்தண்டபாணி, பாண்டிரவி, எம்.எஸ்.பாஸ்கர்,மனோஜ், கே.ஜெயன்,ரியாஸ்கான்,தேவன்,கிரேன் மனோகர், சிசர்மனோகர், கொட்டாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு   –  சேகர் .வி.ஜோசப்
இசை  –   ஆர்.கே.சபீர்
பாடல்கள்    –  பேரரசு , கலை   –   வல்சன் 
எடிட்டிங்  –  வி.ஜெய்சங்கர் ,ஸ்டன்ட்    –  தீபொறி நித்யா
நடனம்   –   RDX
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பேரரசு
தயாரிப்பு   –   காட்சன் பிலிம்ஸ்
படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்ட போது…..
பாண்டிச்சேரியில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்கு மூன்று அதிரடி சண்டை காட்சிகள் , ஒரு பாடல் காட்சி மற்றும் படத்தில் இடம்பெறும் இருபது காட்சிகள் படமாக்கப்பட்டது.
பார்த்திபன் – மும்பை வில்லன் ஜியாத் உடன் மோதும் அதிபயங்கர சண்டை காட்சிகளும் அங்கே படமானது.  பார்த்திபன் – பிரியங்கா டூயட் காட்சி ஒன்றும் அங்கே படமாக்கப் பட்டது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இதற்கு முன்பு பார்த்திபன் ஏற்றிராத வித்தியாசமான வேடம் இந்த  அலெக்ஸாண்டர் வேடம்.  நகரத்தையே தன் கைகுள் வைத்து ஆட்டிப்படைக்கும் தாதா வேடம் பார்த்திபனுக்கு என்றார் பேரரசு
Fb cheating real story
2 ஜிகினா

ராகுல் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கேடிகே தயாரிக்கும் புதிய படம் ‘ஜிகினா’.
இப்படத்தில் விஜய் வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சானியா தாரா நடிக்கிறார். மேலும் சிங்கம் புலி, ‘கும்கி’ அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களோடு தற்போது தொலைக்காட்சியில் பிரபலகமாகி வளர்ந்து வரும் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்க, புது இசையமைப்பாளர் ஜோன் இசையமைக்கிறார். இதற்கு முன்பு நந்தா பெரியசாமி “ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி” போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஜுலை 28ம் தேதியன்று ஆரம்பமானது. இயக்குனர் லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பை தொடக்கி வைத்தார்.
படத்தின் பெயரைப் போலவே மிகவும் உற்சாகத்துடன் , பிரகாசத்துடன் துவங்கிய ‘ஜிகினா ‘ படத்தின் ஒவ்வொரு காட்சியும்  படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும்,”’ என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.
தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் நாங்கள் திரை உலககிற்கு வர காரணம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான்.எங்களுடைய முதல் பட பூஜைக்கு லிங்குசாமி அவர்களே வந்ததோடு, காமிராவை துவக்கி வைத்து இருப்பது, என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று பெருமையுடன் கூறினார் தயாரிப்பாளர் கே டி கே. இந்த வருடம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
A c centre film

3 அலுச்சாட்டியம்

எந்நேரமும் குடியும், கும்மாளமுமாக அலுச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நாயகன் திருந்தி வாழ்ந்தாரா? அவரது அலுச்சாட்டியம் மேலும் தொடர்ந்தா? என்பதை சொல்லும் படமாக உருவாகி வருகிறது ‘அலுச்சாட்டியம்’. 

இப்படத்தில் ரகு என்ற புதுமுகம் கதாநாயகான நடிக்கிறார். கதாநாயகியாக ரம்யா நரசிம்மன் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும், மீசை ராஜேந்திரநாத், தவசி, போண்டாமணி, பெஞ்சமின், கிங்காங், கோவை செந்தில் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.

படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பிரேம்குமார். நித்யன் கார்த்திக் இசையமைத்துள்ளார். வி.டி.ராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். நிசா பிக்சர்ஸ் சார்பில் விஜயகுமார் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இவரே படத்திற்கு கதையும், வசனமும் எழுதியிருக்கிறார். 

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வருகிறது. பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
Sivaji's the best
4 வீரபாண்டிய கட்டபொம்மன் ( டிடிஎஸ் பிரிண்ட்)


Kick2
5 KICK 2 ( TELUGU)


நன்றி-தினமணி,மாலைமலர்,ஆல்சினி வெப்சைட்

0 comments: