Friday, August 28, 2015

வாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்

1ஏய் மிஸ்டர்! உங்க கிட்டே டிஎம் ல பேச ஒரு விஷயமும் இல்லை.
நீங்க பேச வேணாம்.நான் பேசறதை மட்டும் கேளுங்க


=============

2 சார்.வெட்டிங் டே க்கு லீவ் வேணும்.
யோவ்.வெட்டிங் நைட் கொண்டாடிக்க.போய்யா.நோ லீவ்

=================


3 நான் ஆபீஸ் போற மாதிரி ஒரு ஓவியம் வரையனும் சார்.
தாராளமா வரைஞ்சுக்குங்க மேடம். அதுக்கு ஒரு நாள் லீவ் வேணும்

===============


4 டெய்லி 2 கிமீ ஜாக்கிங் போனா உடம்புக்கு நல்லது.நான் சொன்னபடி நடப்பீங்களா?
டாக்டர்.குழப்பாதீங்க.இப்போ நடக்கனுமா? ஓடனுமா?

=========

5 டாக்டர்,கோமாஸ்டேஜ் போய்ட்டு திரும்பும்போது நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் ஞாபகம் வருமா?
எதுக்கும் என்கிட்டேகார்டும்,பாஸ்வோர்டும்குடுத்துட்டுப்போங்க

==============6 டாக்டர், சின்ன வெங்காயத்தை அரைச்சு தலைல தடவுனா வழுக்கை மறைஞ்சிடுமா?

அதெப்பிடிம்மா மறையும்? விக்வெச்சாத்தான் மறையும்


==================

7  தலைவரே! பாட்ஷா, படையப்பா, சந்திரமுகிக்கு எல்லாம்  மணி மண்டபம் கட்ட்டனுமா? எதுக்கு?

 சிவாஜி க்கு மணி மண்டபம் கட்றாங்க, அதை விட  சூப்பர்  ஹிட்ஸ் ரஜினி படங்களுக்கு கட்னா  என்ன?


=====================
8   செங்கல்லுக்குப்பதிலா பணக்கட்டை அடுக்கி வெச்சு பங்களா கட்டி இருக்கீங்களே , எதுக்கு?

 இதுதான்  தலைவருக்குபிடிச்ச  MONEY மண்டபம்


================

9  நீ ஸ்போர்ட்ஸ்மேனே இல்லை, ஆனா கேல் ரத்னா விருது வேணும்னு கேட்கற, எதுக்கு?

 பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடி இருக்கேன் யுவர் ஆனர்


======================10  தலைவரே! உங்களுக்கு மணி மண்டபம் கட்றாங்களாம்

மணி எதுக்கு எனக்கு மண்டபம் கட்றான்? அவன் எதிர்க்கட்சி ஆள் ஆச்சே?


=====================
11  டேய்.க்ரூப் ஸ்டடி படிக்கறேன்னு சொல்லிட்டு வாட்சப் ல கடலை போட்டுட்டு இருக்கே?
டீச்சர்.இது வாட்சப் க்ரூப் ஸ்டடி

==============

12 டேய்.கடைக்குப்போய் 100 வாட் பல்பு 1 வாங்கிட்டு வா.
போம்மா.அப்புறம் காலம் முழுக்க பல்பு வாங்கிய பகவதி னு கிண்டல் பண்ணுவ

=============

13 ஜட்ஜ் = எதுக்காக செந்தாமரைச்செல்வியை கடத்தினே? கைதி =,செம்மரக்கட்டையைக்கடத்தி செம போர்.அதான் செமக்கட்டை செண்பகத்தோட தங்கையை கடத்துனேன்

============


14 ஏய் மிஸ்டர்.உன் ஹேன்டில் ல 143 னு நெம்பர் இருக்கே எதுக்கு? பொண்ணுங்க எனக்கு மென்சன் போடும்போது ஐ லவ் யூ சொன்னதா நினைச்சிக்குவேன்


===============


15 அந்தக்கால இலக்கியப்புத்தகம் விருந்து புக்சை ஏன் கிப்ட் பார்சல் பண்றே? மொய் விருந்து விழா வில் கிப்ட்டா தரத்தான்


=============

16 டாக்டர்.சாப்பாட்ல ஊறுகாய் சேர்த்துக்கக்கூடாதுனு சொன்னீங்களே? ஆமா.கெடுதல். சரக்கு அடிக்கும்போது சேர்த்துக்கலாமா?

================


17 யாரா இருந்தாலும் புகழ்ந்து தள்ளிடுவேன்.அதனால ஜெயில்ல போட்டுட்டாங்க, ஆ!ஏன்? மலை உச்சில இருந்து புகழ்ந்து "தள்ளிடுவேன்"

==============


18 ஜட்ஜ் = தற்கொலை பண்ணிக்க.1000 வழி இருக்கும்போது செல்போன் டவர் மேல் ஏன் ஏறினே? கைதி =, ஆண்"டவரை"அடைய குறுக்கு வழினு செல்போன் டவரை செலக்டட்

==============

19 மிஸ்! மூக்குத்தி போட்டுக்கிட்டா உங்க முகம் இன்னும் அழகா இருக்கும்.ஏன் வேணாம்கறீங்க? நோஸ்கட் கேர்ள் னு எல்லாரும் நக்கல் அடிப்பாங்களே?

============

20

உங்க தலைமுடி  உதிராம இருக்கனும்னா  ஆண்ட்டி-ஹேர் ஃபால்  ஷாம்பு  போட்டு  குளிங்க.

டாக்டர், நான் ஆம்பளை, கூச்சமா இருக்கு. அங்க்கிள் ஹேர்ஃபால் ஷாம்பு இல்லையா?--


========================

0 comments: