Thursday, August 20, 2015

சிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன் தாரா , ஹ்ன்சிகா மகிழ்ச்சி

1

தர்மபுரியில் சினிமா பாட்டுக்கு போதையில் குத்து டான்ஸ் ஆடிய எஸ்ஐ # நல்ல வேளை லேடி கான்ஸ்டபிளை ஜோடி ஆக்கலை


=============


2 மேகி மீதான தடை நீக்கம் -மும்பை நீதிமன்றம் #வீட்டுக்கு வீடு வாசப்படி.ஊருக்கு ஊரு ஒரு குமாரசாமி .


==============

3 15 மாத ஆட்சியில் ஒரு காசு கூட ஊழல் நடக்கவில்லை சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பேச்சு...# எல்லாம் நோட்டுக்கணக்கில்?

================


4 பேட்ஸ்மேன்கள் மீது கேப்டன் கோலி சாடல்; ‘பொறுப்புடன் ஆட தவறிவிட்டனர்’..#விஜய் ,பிரபுதேவா ,ஆனந்த்பாபு படம் எல்லாம் போட்டுக்காட்டுங்க


===============


5 உலக வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார் #அபி ஷேக் ஹேன்ட் வர்மா ஜி


==============


6 சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பஞ்சாப் மந்திரி -விசாரணைு# சிரசாசன யோகா விழிப்புணர்வு கொடியேற்றம்னு சமாளிப்பாரோ?


==============


7 புலி படத்தின் பட்ஜெட் 113கோடி விஜய் சம்பளம் 26கோடி # இதுல் நட்ட ஈடு தர 20கோடி போய்ட்டாக்கூட 6கோடி லாபம்


=============

8 2016 தேர்தலில் காங்கிரசின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும்- குஷ்பு # ஓஹோ.50% பேருக்கு டெபாசிட் கிடைச்சிடுமா?

===================

9 ஐந்தரைகோடி வாக்காளர்களையும் சந்தித்து அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரியுங்கள் - ஜெ.உத்தரவு! # டாஸ்மாக் லாபம் தான் எனக்கு தெரிஞ்சு சாதனை.


==============


10

: நான் டிவிட்டரில் இல்லை. ஸ்ரீகாந்த் விளக்கம். அது போலி ஐடி#நல்ல வேளைஇப்பவாவது சொன்னீங்க.எத்தனை ஆன்ட்டிங்க டி எம் ல ஏமாந்தாங்களோ?


===========

11 கர்நாடக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் தமிழக மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர் -குஷ்பூ்
# ஏன் கர்நாடகால யாரும் டிவி சீரியல் பார்ப்பது இல்லையா?


=================


12 5.62 கோடி வாக்காளர்களை சந்திக்க ஜெயலலிதா புதிய திட்டம்# குட்.தேர்தல் நெருங்குனா உடல் நிலை சரி ஆகிடுது.கோர்ட் கேஸ்னா பீவர் வந்துடுது


============


13 மது விலக்கு போராட்டத்தில் பிணமாக நடித்தவர் (தி மு க ) மரணம். # அப்டியே அந்த கேரக்டராவே மாறிட்டார் போல


=============

14 6 வருடத்தில் இல்லாத வறட்சி இந்தியாவில் உருவாகும்!
# ஆல் பிகர்சும் மோடி போல் வோர்ல்ட் டூர் கிளம்பிட்டாங்களா?

==================


15 படுத்துக்கொண்டே 110 இடத்தில் ஜெயிப்போம் - மருத்துவர் ஐயா #உக்காந்துட்டே 190 .நின்னுட்டே 234?என்ன சார் கலர் கலரா ரீல் விடறீங்க?

=============

16 நடிகர் சங்கத்தில் கலைஞர் பெயர் இல்லாததை கண்டிக்கிறேன் -விஷால் # இவரு கலைஞரை கலாய்க்கறாரா?பாராட்றாரா?னு கலைஞருக்கே குழப்பம் வந்துடும்

=============


17 சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி கிடையாது… உணர்த்திய வைகோ # மம்மி ரிட்டர்ன்சா? தனித்து நின்னு டெபாசிட் லாசா?

=============

18 இந்து மதத்தை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை - திருமாவளவன்# இருக்கும் கொஞ்ச நஞ்ச வாக்கு வங்கியும் போச்சா?
==============

19 சிம்புவுக்கு தக்க நேரத்தில் உதவி செய்த சந்தானத்தின் நட்பு ..# மன்மதன் பட அறிமுகத்துக்கு நன்றிகடன்.வெல்டன் சந் தானம்

=================

20 என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு .. கொள்கை.காதலிகளை மட்டும் இவர் தீர்மானிப்பாரு.கல்யாணத்தை கடவுள் தீர்மானிப்பாரு

===================

0 comments: