Saturday, August 15, 2015

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ்சிப்பு?

'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக் கூடாது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வணிக வரித்துறை செயலாளருக்கு அந்த அமைப்பு மனு அனுப்பியுள்ளது.
அந்த மனுவில், "எங்கள் இயக்கம் லஞ்ச-ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்புக்காக செயல்பட்டு வருகிறது.
வருகிற 14-ம் தேதி வெளியாகவுள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மதுப்பழக்கத்தை மேலும் தூண்டுவதாக உள்ளது என்பதை அறிந்து இம்மனுவை அனுப்புகிறோம்.
V.S.O.P. என்பது ஒரு மதுபான வகையின் பெயர் என்று தெரிந்திருந்தும் இப்படத்தின் சுருக்கப்பெயர் V.S.O.P. என்று வருவதற்கு ஏதுவாக 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது இப்படம் மதுபான உற்பத்தியாளர்களின் நிதியுதவியாலும், தூண்டுதலாலும் எடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
படத்திலுள்ள பாடல் வரிகளில், "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.. ஊரிலுள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க" என்று வருகிறது.
நட்பு-மகிழ்ச்சி-படிப்பு இவை அனைத்தையும் குடிப்பழக்கத்தோடு தொடர்புபடுத்தும் விதமான காட்சிகள் இப்படத்தில் நிறைய உள்ளன.
பீர் குடித்துவிட்டு கதாநாயகர்கள் இருவர் மகிழ்ந்திரு என்று சொல்லும் காட்சி, தமிழக இளைஞர்களை மகிழ்ச்சியை நோக்கியல்ல மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
இதுபோன்ற படங்களுக்கு யு சான்றிதழ் அளித்ததே தவறானது. எனவே இளைஞர்கள், மாணவர்களைச் சீரழிக்கும் இதுபோன்ற படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
இப்படத்துக்கு ஏற்கெனவே வரிவிலக்கு அளித்திருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோருகிறோம்.
உங்கள் முடிவு வருங்காலத்தில் திரைப்படம் எடுப்பவர்கள் மதுப்பழக்கத்தை ஊக்குவிக்குமாறு காட்சிகள் வைப்பதற்கு தயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
மதுக்காட்சிகள் வைத்தால் வரிவிலக்கு கிடைக்காது என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றால், கண்டிப்பாக மதுக்காட்சிகளை தவிர்த்துவிடுவார்கள்.
மேலும், எங்கள் கோரிக்கை என்பது இந்தக் குறிப்பிட்ட படத்துக்கு எதிரானது மட்டுமல்ல.
தமிழகத்தில் மதுவிலக்குப் போராட்டம் பற்றி எரியும் பிரச்சினையாக உள்ள சூழ்நிலையால் நீங்கள் நல்ல முடிவு எடுப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பதால் அரசுக்கு பலநூறு கோடிகள் வரி இழப்பு ஏற்படுகிறது, 1997-ல் ரூ.109 கோடியாக இருந்த கேளிக்கை வரி வருவாய் 10 ஆண்டுகள் கழித்து 2007-ல் ரூ.16 கோடியாக குறைந்துள்ளது என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கும் கூறியுள்ளது.நன்றி- த  இந்து


 • மதுக்கடைகளை மூட சொல்லி தந்தை (ஸ்டாலின்) போராட்டம். VSOP மதுவை விளம்பர படுத்தி படம் மகன் (உதயநிதி) வெளியீடு. நல்ல காமடி போங்கள்.
  Points
  3010
  a day ago
   (0) ·  (0)
   
  • RAJAN Kittappa  
   சுதந்திரத்திற்கு முன்னதாக இருந்த சினிமா மற்றும் நாடக நடிகர்கள் சுதந்திர கனவை வெள்ளையரின் போலிசு, தணிக்கை துறையை ஏமாற்றி தந்திரமாக வெளிப்படுத்தியவர்கள்.அவர்களுக்கு சமூக பொறுப்பு இருந்தது.கலைவாணர் நகைச்சுவையில் நல்ல தம்பியாக இளைய தலை முறையை உருவாக்க விரும்பியவர்.அதன் பின்னர் எம்ஜிஆர் சிவாஜி தலைமுறை கூட தேச பக்தி நன்னெறிகள் என அவரவர் வழியில் ஏதோ தீதற்ற முறையிலேயே நடித்து வந்தனர்.அதற்கு பின்னர் தான் சிகரெட்டில் மானரிசம், நெகடிவ் ஹீரோ என்கிற தத்துவமெல்லாம் வந்து இன்றைக்கு பாரிலேயே முக்கால் வாசி படமெடுப்பது, மது வகையின் பெயரிலேயே மெனக்கெட்டு தலைப்பு வைப்பது என்பதில் வந்து நிற்கிறது.இதற்கெல்லாம் வரிவிலக்கு என்பது மக்கள் பணத்தை வீணடிப்பது தான்.சட்ட பஞ்சாயத்து இயக்க வேண்டுகோள் மிக சரியானது.
   Points
   5030
   a day ago
    (0) ·  (1)
    
   Anandan Down Voted
   • AAshwin  
    மிகவும் சந்தோஷமான விஷயம், யாருமே இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கருது சொல்லவில்லை. அதுவே ஒரு ஆரோக்கியமான விஷயம்.
    Points
    235
    2 days ago
     (0) ·  (0)
     
    • AAshwin  
     மிகவும் சரியான கோரிக்கை. டாஸ்மாகில் குடித்துவிட்டு பாட்டு வந்தால் அந்த படத்திற்கு கண்டிப்பாக வரி போட வேண்டும். இன்று வெளி வரும் 8/10 படங்களில் இந்த மாதிரி பாடல்கள் தான் உள்ளன. அந்த பாடல்களை தான் விளம்பரகளுக்கு பயன் படுத்துகிறார்கள். கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். படம் எடுபவர்களுக்கு சமூக பொறுப்பு மிகவும் அவசியம்.
     Points
     235
     2 days ago
      (0) ·  (0)
      
     • UUma  
      மதுவுக்கு எதிரான போராட்டங்கள் நடக்கும் இக் காலத்தில் இத்தகைய படங்களை தடை செய்ய வேண்டும். .கண்டிப்பாக வரிவிலக்கு தடை செய்யப்பட வேண்டும். மேலும் குடிக்கும் காட்சி மற்றும் பார் காட்சிகள் வந்தால் அதற்கு வரிவிலக்கு இல்லை என அறிவிக்க வேண்டும்
      2 days ago
       (0) ·  (0)
       
      • KK.SUDHAKAR  
       நியாயமான கோரிக்கை...
       Points
       495
       2 days ago
        (1) ·  (0)
        
       Ramkumar Up Voted
       • RRRV Raman  
        மிகவும் சரி தமிழ் படங்கள் லில் மது குடிக்கும் காட்சிகள் தவிர்க்கப்படவேண்டும் .

       0 comments: