Thursday, August 06, 2015

இளைய தளபதி டி ஆர் இயக்கத்தில் ஹீரோவா தோன்றினால்

கோலம் போட வராதுன்னு சொல்லும் நெட் தமிழச்சி கிட்டே குழந்தை போடும் சாதா  கோடு கூட அழகுதான் அப்டினு நெட் தமிழன் அடிச்சு விட்டுட்டு இருக்கார்

==============

கூகுள்ல தேடி எடுத்த ஏதோ ஒரு பேபி ஃபோட்டோ டிபியா வெச்ச பொண்ணு கிட்டே ”மேடம், இது உங்க சின்ன வயசுல எடுத்த ஃபோட்டோவா?”னு தெரியாதமாதிரி கேட்பான் நெட் தமிழன்

=================


3  இன்று ஆடிப்பெருக்கு!
அன்பே! இன்றாவது வீட்டை விளக்குமாற்றால் நீ பெருக்கு!


==============

இன்று ஆஃபீசுக்கு வந்த அனைவரையும் ரிசப்ஷனிஸ்ட் வாசலில் உக்கார்ந்துக்கிட்டே வரவேற்றது. நன்றி


==================

ஆடிப்பெருக்கு விழாவுக்கு  எங்கே போறீங்க?னு கேஷுவலா விசாரிப்பது போல்  பொண்ணுங்களோட லொக்கேஷன் தெரிஞ்சுக்குவான்  நெட் தமிழன்


================

3 கோட்டிங் பவுடர் அடிச்ச பின்னும் திருப்தி வராமல் அழகுல கொஞ்சம் கம்மியா இருக்கேன் போல , ப்ச் , அழக ஏத்தறேன்ன்னு ஃபேர் &லவ்லி பூசுவான்தமிழன் 


=================

7  இன்று ஒரு வெட்டித்தகவல் - சித்ரம் ட்வீட்சுக்கு நேத்து  நைட் ஒரு கனவு வந்துச்சாம்

==================


8  பஸ்சில் ஏறும்போது கண்டக்டர் வாசலில் நின்று வரவேற்காமல் பின்னால போய் ஏறுன்னுட்டாரு


============


9 நெட் தமிழன் ஏதோ பிக்னிக் போகக்கூப்பிடுவது போல் நீ இல்லாம தனியா சாகமாட்டேன்னு கேர்ள் பிரண்டை சூசைய்டுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கிறான்


=============


10 இளைய தளபதி டி ஆர் இயக்கத்தில் ஹீரோவா தோன்றினால் பட டைட்டில்
எளிமை உனது பெருமை

=============


11அரசியல் தலைவர் திடீர்னு யாருக்காவது உதவினா தேர்தல் வருதுனும் சினிமா ஹீரோ உதவினா அவர் படம் ரிலீஸ் ஆகப்போகுதுனும்ு அர்த்தம் # சிம்ப்ளிசிட்டி


============

12 அன்பே! யாரைப் பார்த்தாலும் உன்னைப் போல் தோன்றுகிறது.!! அதனால் எந்த பிகரைப்பார்த்தாலும் நீ னு நினைச்சு பச்சக்னு ஒரு கிஸ் குடுத்துடறேன்


============

13 ஒரு கட்சியின் தலைவர்  எப்படி உணர்ச்சி வசப்படக்கூடாது என்பதை வை கோ வின் போராட்ட கோஷங்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம்  அலப்பறை


================

14  கண்மணிக்கு ஏன் ரிப்ளே பன்லை?
யாயாயாயாயாயா (6யா=ஆர்யா) - என் டைரில ஏகப்பட்ட பெண்மணி க்யூ வில்.யார்யா அந்த கண்மணி?


==================

15 திடீர்ப்புரட்சி வீரர்  ஆன  வை கோ இதே  அதிமுக உடன் கூட்டணியில்  இருந்தபோது  ஏன் மதுவிலக்கு  பற்றி  மூச்சே  விடவில்லை?=================


16  மதுவிலக்கு  பற்றி  நிஜமான  அக்கறை உள்ள  உண்மையான தலைவர் டாக்டர் ராம்தாஸ்.
அதை அரசியல்  ஆதாயம் ஆக்கத்துடிக்கும் போலிகள்
கலைஞர் , வை கோ’


===============


17  ராம்தாஸ் தமிழ் நாட்டின் சி எம் ஆக  தகுதி அற்றவர் என பல ட்வீட்டில்  சொல்லி இருக்கேன். அவரது + பாயிண்ட்  மதுவிலக்கு, புகை எதிர்ப்பு


================


18   நாட்டுல மதுவிலக்கு போராட்டம், கலவரம்னு எத்தனை  பிரச்னைஓடுது, ஒரு நெட் தமிழர் “ஏம்மா என்னை டீ குடிக்க கூப்பிடலை?னு  வருத்தப்படறார்


===============

19  குழந்தை ஸ்கூல்க்குப்போகும்போது, புருஷன் ஆஃபீஸ் போகும்போது  , நான்  ஷாப்பிங் போகும்போது வராதேன்னு மழைக்கே கண்டிஷன் போடுவார் நெட் தமிழச்சி

===============


20 தூக்கம் வந்தா கண்ணைமூடித்தூங்காம FB  வந்து தூக்கம் தூக்கமா வர்து ஹே ராம் ஹே லட்சுமணன் -னு ஸ்டேட்டஸ் போடுவார் மாடர்ன் நெட்  ஃபாரீன் தமிழச்சி


==============

0 comments: