Sunday, July 13, 2014

OC ரோசி ரசிகர் மன்றம்

1. ஈரோடு டூ திருச்சி ரயில் ல் பயணிக்கும் பெண் திருச்சியில் இருக்கும் தோழியிடம் அரை மணி நேரமா பேசிட்டு இருக்கு.நேரில் போய் பேசிக்லாமே?


============


2 FB ல ஒரு பொண்ணு Good. Morning. To all ஆள் னு போட்டிருக்கு;-)))


==============


3 ஓடும் ரயிலில் டவர் கிடைக்கலைனு ஒரு அதி புத்திசாலி படிக்கட்டுக்குப்போய் பேசறான்.அடிக்கற காத்துக்கு கொஞ்ச நஞ் ச பேச்சும் கேட்காதுடா


===============

4 நான் சின்னப்பையனா இருக்கும்போது ரயில் way ல ( தண்டவாலத்தில் ) ஏன் ஸ்பீடு பிரேக்கர் வைக்கலைனு எங்கப்பா கிட்டே கேட்டேனாம்================


5 இந்தப்பொண்ணுங்க மட்டும் நுனி விரல்களில் நளினமா சாப்பிடும் வித்தையை எப்படிதான் கத்துக்கறாங்களோ?


===============6 நல்ல வேளை.வாரமலர் ல் நட்புடன் அந்த்ரங்கம் பகுதில முகவரி போடறதில்ல.போட்டா அவனவன் பஸ்.ஏறி வீட்டு வாசல் ல நிப்பான்


=================


7 பேய்ப்படம் செகன்ட் ஷோ பார்த்த பின் சுடுகாட்டின் வழியே நடக்க பயமாய் இருப்பதைப்போல் சென்னை விபத்துக்குப்பின் அடுக்குமாடி பாத்தாலே பயம்வருது


================8 அப்பர் பர்த்தில் ஏழை.லோயர் பர்த்தில் பணக்காரன் # ரயில் வினோதங்கள்


===============


9 காதலியின் சிரிக்கும் உதட்டில் முத்தம் தந்தால் அது "ஈ"சானி மூலை யில் இடப்பட்ட அதிர்ஷ்ட முத்தம் ஆகிடாதோ?


===================

10 உங்க சம்பளம் எவ்ளவ்?னு ஒரு ஆண் கேட்டா 50%,அதிக்மாகவும் ஒரு பெண் கேட்டா 100% அதிகமாகவும் சேர்த்து சொல்பவன் தான் தமிழன்


===================11  உங்க சம்சாரம் உங்க முழு சம்பளத்தையும் ஸ்வாகா பண்ணும் ஸ்வேதா ன்னா உங்க இன்சென்ட்டிவ்,கிம்பளம் பத்தி மூச்சு விட்றாதீங்க


=========12 தோப்புக்கரணம் 4 வகைப்படும் 1 மாந்தோப்புக்கரணம் 2 தென்னந்தோப்புக்கரணம் 3 புளியந்தோப்புக்கரணம் 4 வாழைத்தோப்புக்கரணம்


=================


13 பொண்டாட்டி கூட சண்டை போடும்போது கோபத்தில் ph தூக்கிப்போட்டு உடைக்கும் கோபக்காரர்களே.எனக்கு தகவல் சொன்னா நானே நேரில் வந்து வாங்கிக்குவேன்


================

14 பிளட் பிரசரை ஏத்தும் னு தெரிஞ்சும் ,மட்டமான எண்ணெய் ல சுட்ட பஜ்ஜியை அல்சரை வர வைக்கும் கார சட்னி ல் தொட்டு சாப்பிடுவான் தமிழன்


=================15 என்னதான் உடலின் தடிமனான சருமம் பாதமா இருந்தாலும் அதுல கிச்சு கிச்சு மூட்டலாம். மெல்லிய சருமமர்் இமை ஆனாலும் கிச்சு கிச்சு மூட்ட முடியாது


====================


16 கிறுக்கு க்குப்பேர் போன இடம் கீழ்ப்பாக்கம். முறுக்குக்குப்பேர் போன இடம் மணப்பாறை

=================


17 சினிமா வில் தெத்துப்பல் அழகிகள் 1 புது வசந்தம் சித்தாரா 2 சுப்ரமணியபுரம் ஸ்வாதி 3 மஞ்சு வாரியர் 4 பாவனா


=================


18  தனக்கு ஒரு காரியம் ஆகனும்னா தான் தான் இறங்கி வரனும். கார் ல உக்காந்த வாக்குல ரோட்டோரமிருப்பவனைக்கூப்பிட்டு அட்ரஸ் விசாரிப்பான் தமிழன்


==================


19 FBல சமையல் குறிப்பை ஏதோ புக் படிச்சு அடிச்சு விடும் பெண்களே டெய்லி ஒரு வீட்டுக்கு வரேன்.சமைச்சுப்போடுங்க பார்ப்போம் ரோசி ரசிகர் மன்றம்==============

20  பக்கா வா இருக்கே என்பதன் மரூஉ மொழிதான் பக்கி.எனவே காதலி/தோழி உனை பக்கி என அழைத்தால் பதட்டம்வேண்டாம்


=================


=====================

0 comments: