Saturday, July 05, 2014

டியர்.லைட்டை ஆப் பண்ண வேனாம்.

1. ஏய் மிஸ்டர்! எதுக்காக பஸ் ல என் பக்கத்துல உக்கார்றீங்க?


மிஸ்! ஆணும் ,பெண்ணும் சமம்னு இப்போ தானே போன் ல யார்ட்டயோ பேசுனீங்க?


=================


2 டாக்டர் ஏதோ கோவத்தில டெய்லி ஒரு ஆளை unfollow பண்ணிடறேன்.என்ன ஆகும்?


உங்க பாலோயர்ஸ் கவுண்ட்ஸ் சீக்கிரம் ஜீரோ ஆகிடும் மேடம்


=================


3   டியர்.டெய்லி சப்போட்டா பழம் 1 கிலோ வாங்கிட்டு வர்றீங்க்ளே,எதுக்கு?
எப்பவும் எனக்கு சப்போர்ட்டா இருக்கனும்னியே.அட்லீஸ்ட் சப்போட்டாவாவது  வாங்கித்தரலாம்னு தான்


===============


4  ஏய் மிஸ்டர்.என் ட்வீட்ஸ் எதையும் ஆர் டி பண்ணாதே. ஓக்கே மிஸ்.அப்போ என் எல்லா ட்வீட்டையும் நீங்க RT செய்யனும்.செய்வீர்களா?


==================


5 டியர்.சாரி.எங்க அம்மா பார்த்த மாப்ளையைத்தான் நான் கட்டிக்குவேன்.லூசா நீ?அவரு உனக்கு அப்பா முறை ஆகுமே?


===================


6  சார்.சினிமாத்துறைல கால் வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். வேணாம் மேடம்.கண்டவன் எல்லாம் கை வைப்பான்=====================


7  சார்.கொலைகாரனா வரும் வில்லன் க்ளைமாக்ஸ் ல ஏன் ஆடியன்சை கொல்றான்? கதை யை வெளில சொல்லிட்டா?


====================


8 சார்.சன்னி லியோன் நடிச்சிருந்தும் படத்துக்கு ஏன் யூ சர்ட்டிபிகேட் குடுத்தீங்க? அவர் பெருசா புதுசா எதும் காட்டலையே?ஒரே ஒரு டான்ஸ் தான்


================


9  தலைவரே! குஷ்பூ கழகத்துல இருந்து விலகிடுச்சே? இதை சுந்தர் சி கிட்டேதான் கேட்கனும்


================


10  மிஸ்! இந்த சீட் காலியாத்தானே இருக்கு? உட்காரலாமா?


சாரி.ஆள் வருது.


 இந்த சீட்?


அதுக்கும் ஆள் வருது. ஓ.2 ஆள் ? ரைட் ரைட்


========================


11  உன் சம்சாரத்துக்கு நாக்கு ல சனி னு சொன்னியே? எதும் பேசாம அமைதியா இருக்காங்களே? இது செகன்ட் சாட்டர் டே.கவர்மென்ட் லீவ்


======================


12  சார்.நீங்க முதல் முறையா கெட்டப் மாத்தறீங்களாமே? ம்.கெட்டப் மாத்தலாம்கற முடிவை மாத்திட்டேன்


===================


13   டியர்.உங்க சம்பளம் சுமாரா எவ்ளவ் இருக்கும்?ம்க்கும்.மொத்த சம்பளமே சுமாராத்தான் இருக்கும்=====================


14  டியர்.லைட்டை ஆப் பண்ண வேனாம்.புக் படிக்கனும்நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்கறது?ஆப் பண்ணுவேன் # பட்சி சிக்கிக்குச்சு


===================


15 மிஸ்! 10 ரூபா பிச்சை போடுங்க


யோவ்.உன் கையும் காலும் நல்லாதானே இருக்கு?உழைச்சு சாப்பிட என்ன கேடு?


வீடுவீடா ஏறி இறங்குவதும் உழைப்புதானுங்


===================


16    டியர்.எதுக்காக பழைய ஜோக்ஸ் புக் 10 தர்றீங்க?புருசன் பொண்டாட்டி ன்னா விட்டுக் (WIT)கொடுத்து வாழனும்னியே?


==========================


17 என் சம்சாரம் கோபமா இருக்கும்போதெல்லாம் கிச்சன் ரூம் போய் சாப்பிடறா.


அப்போ அவங்களை எப்பவும் சந்தோஷமா வெச்சுக்குங்க.சாப்பாட்டுசெலவு மிச்சம்


=======================


18   மிஸ்! ஹிந்தில உங்களுக்கு லவ் லெட்டர் எழுதி இருக்கேன்.டேய் ராஸ்கல் ஹிந்தி கத்துக்க ட்யூஷன் வந்துட்டு எனக்கு காதல் கத்துத்தர்றியா?


======================


19  மிஸ்! கூட்டமா இருக்கற டவுன் பஸ்ல யாரை ஏத்துனாலும் உங்களை மட்டும் ஏத்த மாட்டோம்.


 ஏன்?


உங்க பேரே தமிழ்மொழி.மொழித்திணிப்பு ம்பாங்க


========================


20  டியர்.உங்களுக்கு ஹிந்தி தெரிஞ்சாத்தான் நம்ம கல்யாணம் நடக்கும்னு அப்பா சொல்லிட்டார். மத்த மேட்டர் எல்லாம் நடந்துடுச்சுனு சொன்னியா?=======================


0 comments: