Friday, July 11, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11 7 .2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1. ராமானுஜன்
Ramanujan in Final Stage
மோகமுள், பாரதி, பெரியார் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானராஜசேகரன் அடுத்து இயக்கி வரும் படம் ராமானுஜன். ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளாந்து, தனது கணித அறிவால் உலகை வென்ற தமிழன் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை கதை. ஜெமினி, சாவித்திரி தம்பதிகளின் மகன் அபிநய் ராமானுஜனாக நடிக்கிறார். பாமா அவரது மனைவியாகவும், சுஹாசினி அவரது தாயாராகவும் நடிக்கிறார்கள். ராமானுஜர் வாழ்ந்த ஈரோடு, கும்பகோணம், சென்னை, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ஆகியவற்றில் படப்பிடிப்பு நடந்தது. லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் படமாக்கப்பட்ட ஒரே படம் ராமானுஜன்தான்.


படத்தை பற்றி இயக்குனர் ஞானராஜ சேரகன் கூறியதாவது: ஆங்கிலேயர் நம்மை அடிமையாக்கி வைத்திருந்தபோது நம்மை முட்டாள்கள் என்றும் அடிமைகள் என்றும் கருதி வந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர்களைவிட அறிவில் சிறந்தவாராக உருவானவர் ராமானுஜன். அவரை அறிவாளியாக ஒத்துக் கொள்ளாத ஆங்கிலேய அரசு அவரை சராசரி மனிதனாக காட்ட பல முயற்சிகளை எடுத்து அவரை துன்புறுத்தியது. ஆனால் அவரையும் அடையாளம் காட்டியது ஜி.எச் ஹார்டி என்ற ஆங்கில பேராசிரியர். அவர்தான் ராமானுஜரின் கணித கண்டுபிடிப்புகளை உலகக்கு காட்டியவர்.

சொந்த குடும்பத்தாலேயே அங்கீகரிக்கப்படாதவர் ராமானுஜன். ஒரு சினிமாவுக்கான சகல விஷயங்களும் அவரது வாழ்க்கையில் இருக்கிறது. அதனால்தான் படம் எடுக்க துணிந்தேன்.
தமிழகத்தில் பிறந்து உலகப் புகழ் அடைந்த கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ராமானுஜன் படம் வரும்  ஜூலை 11ல் திரைக்கு வருகிறது.தேசிய விருது பெற்ற இயக்குனர் ஞானராஜசேகரன் இயக்கத்தில், ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பெயரன் அபினவ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்க இந்தப் படம் வெள்ளித்  திரைக்கு வருகிறது. மலையாள நடிகை பாமா, ராமானுஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுஹாசினி மணிரத்தினம், அப்பாஸ், நிழல்கள் ரவி, சரத்பாபு, தலைவாசல் விஜய் ஆகியோரும் இதில் உடன் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் வினாயகம் இசையில் படம் வெளிவருகிறது. பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.


ஈரோடு ஆனூர் ல் ரிலீஸ்


ராமானுஜன் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/07/blog-post_218.html


2 நளனும் நந்தினியும்  -
ஒருவழியாக திரைக்கு வரும் நளனும் நந்தினியும்
திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரைப் போல வித்தியாசமான படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்கு வந்தவர் வெளிநாடுவாழ் தமிழரான ரவீந்தர் சந்திரசேகரன். சுட்டகதை, நளனும் நந்தினியும் படங்களை முதல்கட்டமாக தயாரித்தார்.
இந்தப் படங்களைப் பார்த்த வேந்தர் மூவிஸ் தாங்களே படத்தை வெளியிடுவதாக கூறியது. வெனிஸில் படத்தின் பாடல்களை வெளியிட்டு நம்பிக்கை அளித்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் வேந்தர் மூவிஸ் இரு படங்களையும் கைகழுவியது. இதனை எதிர்பார்க்காத ரவீந்தர் அவரே சொந்தமாக சுட்டகதை படத்தை வெளியிட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நளனும் நந்தினியும் வரும் 11 -ம் தேதி வெளியாகிறது.
சுட்டகதை படம் சரியான நேரத்தில் தேவையான விளம்பரங்களுடன் வெளியாகியிருந்தால் லாபம் சம்பாதித்து தரும் படமாக இருந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. நளனும் நந்தினியுமே மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. வெங்கட்பிரபுவின் அசிஸ்டெண்ட் வெங்கடேஷ் படத்தை இயக்கியுள்ளார். என்னுடைய அசிஸ்டெண்டிடமிருந்து இப்படியொரு உணர்ச்சிகரமான படத்தை எதிர்பார்க்கவில்லை என வியப்புடன் பாராட்டியுள்ளார் வெங்கட்பிரபு.
மைக்கேல் தங்கதுரை, நந்திதா நடித்திருக்ககும் இந்தப் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவுக்கு முக்கியமானது. நல்ல படம் வெற்றியடைய வேண்டும் என்பதுடன் இப்படம் வெற்றி பெற்றால் லிப்ரா புரொடக்ஷன் மேலும் பல படங்கள் தயாரிப்பதற்கு உந்துதலாகவும் அமையும்.
நளனும் நந்தினியும் தனது தரத்தின் காரணமாகவே வெற்றியடையும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.

ஈரோடு தேவி அபிராமியில்  ரிலீஸ்


நளனும் நந்தினியும் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/07/blog-post_5656.html


பப்பாளி  =‘அரசூர் மூவீஸ்’ பட நிறுவனம் சார்பாக எஸ். அம்பேத்குமார், A .ரஞ்ஜீவ் மேனன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பப்பாளி’.
 இப்படத்தில் ‘சரவணன் மீனாட்சி’ தொலைக்காட்சி தொடர் புகழ் செந்தில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக இஷாராவும் நடித்திருக்கிறார். கௌரவ வேடத்தில் நிரோஷா நடித்துள்ளார். மற்றும் இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். அதாவது மாமியார் வேடத்தில்.
‘பப்பாளி’ படம் பற்றி இயக்குனர் A.கோவிந்தமூர்த்தி கூறியதாவது, ”மாமியார் என்றாலே கொடுமைக்காரி தான் என்று சித்தரிக்கப்பட்டு வரும் சினிமாவில், மாமியாரை நல்லவராக சித்தரித்திருக்கிறோம். இப்படத்தில் நடித்துள்ள சரண்யா இனிமேல் நல்ல அம்மா மட்டுமல்ல, நல்ல மாமியார் என்றும் பாராட்டப்படுவார்.படிப்பின் முக்கியத்துவத்தையும், எடுத்துக் கொள்கிற ஒரு லட்சியத்தை அடைவதற்கு தடையாக இருக்கும் எந்த தடைக் கல்லானாலும் அதை அகற்றி வெற்றிகொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் இதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம்.


இந்த இரண்டு நல்ல கருத்துக்களை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கி இருக்கிறோம். நிச்சயம் இப்படம் ரசிக்கும் படியான நல்ல படமாக இருக்கும்’’ என்றார். இப்படம் இம்மாதம் 11- ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்ய விஜய் எபிநேசர் இசையமைத்திருக்கிறார்.


பப்பாளி - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/07/blog-post_13.html


4

சூரன்

3 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகிறது சூரன்

Sooran releasing after 3 years
கரண், புதுமுகம் ஷிபாலி சர்மா, மணிவண்ணன் நடித்த படம் சூரன். பாலு நாராயணன் இயக்கி இருந்தார். பி.பி.பாலாஜி இசை அமைத்திருந்தார், 
கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் 3 வருடங்களுக்கு முன்பே ரெடியாகிவிட்டது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக தடைபட்டிருந்த இந்தப் படம் வருகிற 11ந் தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்தில் நம்பிக்கையோடு அறிமுகமான ஹீரோயின் ஷிபாலி சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று விட்டார். கரண் நடித்த கந்தா படமும் தயாராகி இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் ரிலீசானது. இரண்டு முகம் படம் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. தற்போது கன்னியும் காளையும் செம காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகளும் முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது.
5   DAWN OF THE PLANET OF THE APES-

மீண்டும் வருகிறது குரங்குப் படை!

Dawn of the planet of the apes movie in Tamil
2011ம் ஆண்டு வெளிவந்த ரைஸ் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ் உலக அளவில் கலக்கிய படம். மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் மனித குரங்குகள், அவனின் கொடுமை தாங்காமல் மனித குலத்தை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவைகளாக மாறிய கதை. 480 மில்லியன் டாலர்களை வாரிகுவித்த படம்

இப்போது வெளிவருகிறது இதன் இரண்டாம் பாகம். டாவ்ன் ஆப்தி பிளானட் ஆப் தி ஏப்ஸ். அதாவது குரங்கு சாம்ராஜ்யத்தின் விடியல். முதல் பாக கதையில் இருந்து 10 வருடங்களுக்கு பிறகு நடப்பது மாதிரியான கதை. முதல் பாகத்தில் குரங்கு படைகளை திரட்டும் சீசர் என்னும் மனிதகுரங்கு. இந்த பாகத்தில குரங்கு படைக்கு தலைவனாகிறது. 2 ஆயிரம் மனித குரங்குகளை கொண்டு தனி சமுதாயத்தை அமைக்கிறது. அவற்றுக்கு எழுதவும், பேசவும் கற்றுக் கொடுக்கிறது. குரங்கு சாம்ராஜ்யம் அமைந்தால் மனித இனம் அழிந்து விடும் என்று கருதும் மனித ராணுவம் அதனை எதிர்த்து போராடுகிற கதை. கிட்டத்தட்ட இது மனிதன், குரங்கு படைகளின் யுத்தக் கதை.

குரங்குகள் அனைத்தும் அனிமேஷன்கள், மனித கேரக்டர்களாக ஆன்டி செர்கிஸ், கேரி ரூசல், கேரி ஓல்டுமேன், மேன் நடித்துள்ளனர். மேட் ரீவ்ஸ் இயக்கி உள்ளார். டுவண்டியன்த் சென்ஞ்சுரி பாக்ஸ் தயாரித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள விட்டா டிஜிட்டல் நிறுவனம் 1200 கிராபிக்ஸ் காட்சிகளை இதற்காக உருவாக்கி உள்ளது. ஜூலை 11ந் தேதி உலக நாடுகளில் ரிலீசாகிறது. இந்தியாவில் ஜூலை 18ந் தேதி ரிலீசாகிறது. குரங்கு படையும், மனிதர்களும் மோதுவதை 3டியிலும், தமிழிலும் பார்க்கலாம்.
ஈரோடு வி எஸ் பி யில்  ரிலீஸ்
நன்றி - தினமலர் , தினமணி , மாலைமலர். மற்றும் அனைத்து சினிமா இணைய தளங்கள்:

0 comments: