Monday, July 21, 2014

பெண்மணி அவ ஜெர்மனி

1. அத்தான்! கண்ணியமா நடந்துக்கறதா வாக்குத்தந்தா என் தோழிகளை இண்ட்ரோ பண்றேன்நீ அறிமுகப்படுத்தும்போது கண்ணியமா நடந்துக்கறேன்


========================


2  சார்,படத்துல 3 ஹீரோயின் இருந்தும் சரியா யாரையும் காட்டலையே?


கமல் -ocலயே பாக்க நினைச்சா எப்டி? தியேட்டர் வாங்க.காட்டு காட்டுனு காட்டுவாப்டி


====================


3 சார்.டீசர் னா 40 நொடி தானே ஓடனும்?உங்க பட டீசர் 125 நொடி ஓடுதே?சராசரிப்படத்தை விட 3 மடங்கு ஸ்பெஷல் னு அர்த்தம் # அஞ்சான் ப்ரமோ=====================

 கல்யாண மண்டபத்தில்

4 சார்.எனக்கு தாம்பூலப்பை தர்ல


ஒன்லி பார் VIP.வந்தவங்களுக்கெல்லாம் தர அது என்ன விஜய் டிவி அவார்ட்சா?=====================5  மாப்ளை பிரஸ் ரிப்போர்ட்டர்னீங்க? வேலைக்கேபோகாம கிடக்காரு?
எல்லா பத்திரிக்கையையும் குறை சொல்லி ரிப்போர்ட் பண்ணிட்டேஇருப்பார்


========================6 உங்க கம்பெனில சேர்ந்தா கை நிறைய சம்பளம்னீங்க.வெறும் 4000 ரூபா தர்றீங்க? எல்லாம் எட்டணா காசு.மொத்தம் 8000 காசு.கை நிறைய இருக்கா?


=====================7  இன்ஸ்பெக்டர்.போதை தடுப்பு சட்டத்தின் கீழ் எதுக்காக விஜய் ரசிகர்களை கைது பண்றீங்க? கத்தி டீசர் பார்த்து விஜய் க்கு அடிக்ட் ஆகிட்டோம்னாங்க


======================8 ஹீரோயினுக்கு 120 கிலோ வெயிட் .அவரு 160 கிலோ வெய்ட்டான புருசனைதூக்கி எறிஞ்சு பேசிடறாரு.ஓஹோ.வெயிட்டான கதை போல தெரிது


======================9 டாக்டர்.என் கணவர் கண்ணை மூடி மூடி டபக் டபக்னு திறக்கறாரு.இது என்ன மேனியா?உத்தம வில்லன்  டீசர் மேனியா.படம் ரிலீஸ் ஆனா சரி ஆகிடும்

==================10 ஜட்ஜ் =நீ திருடுனது உண்மையா? கைதி =நடந்தது நடந்துடுச்சு.சமரசமா போய்க்கலாம்.திருடுனதை திருப்பிக்கொடுத்துடறேன் # ஜெ ராக்ஸ்


=====================11 நர்ஸ்! நீங்க FB ல யோ ,ட்விட்டர்லயோ அக்கவுன்ட் வெச்சிருக்கீங்களா?


யா.ஒய்?


சிஸ்டர் னு கூப்பிடச்சொல்றீங்களே?


==================


12  யோவ்.என்னய்யா இப்டி மொக்கை ட்வீட்ஸா போடறே?மேடம்.புத்திசாலித்தனமா எழுதத்தெரிஞ்சா சினி பீல்டுக்கு போய் இருப்பேனே?ஏன் ட்விட்டர் வாரேன்?


======================


13  டாக்டர்.நீங்க சொன்னபடி தனிமைல இருக்கும்போது ஒழுக்கத்தை பேணி காத்துட்டேன்.


வெரிகுட். யாராவது பிகர் வந்தாதான் மனசு தடுமாறுது


=======================


14 மிஸ்! 500 ரூபா நோட்டை வெச்சுட்டு ரயில் டிக்கெட் க்யூ ல நிக்கறீங்க்ளே! சேஞ்ச் தருவாங்க்ளா?


யோவ்.250 ரூபா டிக்கெட் 2 # பல்பு


====================15 ஏய் மிஸ்டர்!2 வரி வாசகத்தை பனியன் ல படிக்க 10 நிமிஷமா ?சாரி.மிஸ்! நான் இங்க்லீஷ்ல(யும்) வீக்.எழுத்துக்கூட்டிப்படிக்க லேட் ஆகும்


====================16 டேமேஜர் = ரயில்ல போய்ட்டிருக்கேன்னே.பின்னணி ல எந்த சத்தமும் வர்லயே? நிக்காம போக நான் என்ன புல்லட் ரயில் லயா போறேன்? பேசஞ்சர் தானே?


======================17 7 கோல் போடும் வரை என்ன பண்ணிட்டு இருந்தீங்க? எத்தனை கோல் போட்டாங்கனு எண்ணிக்கொண்டு இருந்தோம் சார்


======================


18 விசு வின் பெண்மணி அவள் கண்மணி இப்போ ரீ மேக் ஆனா  என்ன டைட்டில் வைப்பாக்க?


பெண்மணி அவ ஜெர்மனி


====================


19 டாக்டர்.எனக்கு படிக்கவே தெரியாது.என்னைப்போய் டெய்லி "நாவல்"பழம் சாப்பிடச்சொல்றீங்க்ளே?======================20 டியர்.உன் உள்ளங்கை பவுடர் அடிக்கும் பf மாதிரி மெத் னு இருக்கு. டேய் லூசு.நீ இவ்ளோவ் நேரம் அமுக்கிட்டு இருந்ததே என் கையில் இருந்த பf தான்


======================

0 comments: