Friday, July 25, 2014

நீங்க கட்டிக்கப்போகும் பொண்ணு பேரு அங்கயற்கண்ணி என இருந்தா

1. கொல்லிமலை சித்தர் வாக்கு - வே இ ப பிளாப் ஆகும்.சதுரங்க வேட்டை ஹிட் ஆகும் ( எப்பவும் எல்லாரும் எதிர்பார்க்கும் படம் காலை வாரும்.)


=====================


2 நாளைய கணிதத்தை நேற்றே கணித்தவர் ராமானுஜன். நாளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை நேற்றே பெற்றவர் எங்க இளைய தளபதி விஜய் # ஈரோடு கத்தி ரசிகர் மன்றம்


====================


3 ஈரோடு விஜய் ரசிகர் மன்றக்காரங்க வந்து விஜய் பெருமை சொல்ற மாதிரி பேனர் வாசகம் கேட்டாங்க.பூடகமா புகழ்ந்து வ பு அணி ல எழுதிட்டேன்


=======================


4 விறகு அடுப்பில் சமைக்கப்பட்ட கம்மஞ்சோறு ,சட்டி(பானை)தயிர் ,தோட்டத்தில் விளைந்த சின்ன வெங்காயம் = தமிழனின் பாரம்பர்ய ஆரோக்ய உணவு


============================


5 கலைஞர் TV யி ல் செய்தி வாசிக்கும் சம்பங்கி கலர் சேலை சரோஜா.உங்க கழுத்தில் போட்டிருக்கும் 8 பவுன் நெக்லஸ்க்கு போன மாசம் ட்யூ ஏன் கட்டலை?============================


6 ஏய் அமுல்பேபி.உன் புருசனை இது வரை வீட்டுக்காரனாத்தானே பாத்தே? சமையல்காரனா பாக்கலையே ? இப்போ பார்ப்பே! # வே இ ப ரீமிக்ஸ் பஞ்ச்


=====================7 புட்டுக்கிட்ட ட்விட்டர் லவ் ஸ்டோரி 2014 # மிஸ்.ஐ லவ் யூ னு சொன்னீங்க.அதான் நிச்சயம் பண்ண வந்தேன். சாரி சார்.மென்ஷன் மாறிடுச்சு


=======================


8  ஜெர்மனி ஜெயிச்சா = ஜெர்மனியின் செந்தேன் மலரே! அர்ஜென்ட்டினா ஜெயிச்சா = தினக்கு தான் தின் தின்னா தீனா தீனா டீனா.


======================


9 பெண் ட்வீட்டர்கள் தங்கள் பிறந்த நாள் அன்று சொந்த டிபி வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் - கொல்லிமலை சித்தர் வாக்கு


======================


10 குரல் நல்லாருந்தா பிகர் அழகு கம்மியா வும் குரல் சரி இல்லைனா அழகு பிரமாதமா இருக்கும் எனவும் குயில் ,மயில் வெச்சு எடை போடக்கூடாது


==========================11 உலகக்கோப்பை கால் பந்து போட்டி முடிந்து விட்டதால் இனி மோடி அரசு ஏதாவது விலை ஏற்றினா இணைய போராளிகளின் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரும்்


========================12 ரோஜா வின் ராஜா யார் னு டீச்சர் கேட்கும்போது நேரு னு பதில் சொல்லாம ஆர் கே செல்வமணி னு பதில் சொல்ற கூட்டம்யா நாம


======================


13 நீங்க கட்டிக்கப்போகும் பொண்ணு பேரு அங்கயற்கண்ணி என இருந்தா காலம் பூரா நீங்க சந்தோஷமா ஹாய் கன்னி என கூப்பிட்டு மகிழ்ச்சிப்படுத்தலாம்


=======================


14 பெண்களின் வாய் ம்யூட் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் முகம் க்யூட் ஆக இருக்கிறதே! அடடே!


========================


15 புதிய பறவை - எங்கே நிம்மதி - 300 இசைக்கருவிகளுடன் பாகப்பிரிவினை -தாழையாம் பூ முடிச்சு - 3 இசைக்கருவிகளுடன் # MSV சாதனை


====================


16 காதல் என்பது தேர்தல் மாதிரி.தோத்தாலும் தொகுதிக்கு தொண்டு செஞ்சுட்டே இருக்கனும்.அப்போதான் வாய்ப்பு கிடைக்கும்======================17 அவசரப்பட்டு எந்த வேலை செய்தாலும் தோல்வி தான் கிடைக்கும் #,அர்ஜென்ட் டினா


==================

18 கன்னக்கதுப்பில் மங்கு தோன்றினால் CLEAR ALL சோப் போட்டு குளிக்கவும்.இரவில் படுக்கும் முன் SKIN SHINE க்ரீம் (15 கி =110 ரூ) தடவவும்

====================


19  வெற்றி பெற்றவனின் மூளையை விட தோல்வி அடைந்தவன் மூளை மிகக்கூர்மையாக வேலை செய்யும் என்பதால் தோல்வி அடைந்தவனிடம் ஜாக்கிரதையாக இரு


=====================


20 எல்லாம் விதிப்படி நடக்கும் என்ற சித்தாந்தத்தில் ஒரு அரேஞ்டு மேரேஜூம் ,விதியை மதியால் வெல்வேன் என ஒரு லவ் மேரேஜூம் செய்பவன் கில்லாடி அல்ல


========================

0 comments: