Saturday, July 12, 2014

ராமானுஜன் - சினிமா விமர்சனம்

ட்ரெண்ட் செட்டர் இயக்குநர்களான ஒரு மணிரத்னமோ , ஒரு ஷங்கரோ , ஒரு பாலாவோ   சொல்லாத  வாழ்வியல் சம்பவங்களை , சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் உள்ள தமிழ் சினிமாவின்  மிக முக்கியமான, மரியாதைக்குரிய  இயக்குநர் ஐ ஏ எஸ் ஆஃபீசர் ஞானராஜ சேகரன். தி ஜானகி ராமன் எழுதிய  மெகா ஹிட் நாவலான மோக  முள் ளை  வாசிக்கும்போது என்ன பரவச  உணர்வு நமக்கு வந்ததோ அதே அளவு பரவச அனுபவத்தை செல்லுலாய்டில் பதித்த சாதனையாளர் .மோகமுள் , பாரதி , பெரியார் என இவர் கொடுத்த ஹாட்ரிக் ஹிட் படைப்புகளுக்குப்பின்  நீண்ட இடைவெளிக்குப்பின் வெளிவந்த படம் தான் கணித மேதை  ராமானுஜன் . நாளைய கணிதத்தை நேற்றே தந்தவன் என்ற  பொருத்தமான கேப்ஷனோடு வெளி வந்திருக்கும் இந்தப்படைப்பின் தரம் பற்றி  பார்ப்போம்


அஞ்சாங்கிளாஸ் படிக்கும்போதே காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு மேத்ஸ்  ட்யூஷன் எடுக்கும் அளவு அபாரமான கணிதத்திறமை உள்ளவர் ராமானுஜன் .மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த அவர்    எல்லா சப்ஜெட்லயும்  ஃபெயில் ஆனாலும் மேத்ஸ்ல மட்டும் 100 வாங்கறார். காலேஜ் ல அவரால  டிகிரி வாங்க  முடியல .   ஏன்னா அவர் 24 மணி நேரமும் கணிதம் பற்றியே சிந்திப்பதால் .

 அவரோட அப்பாவுக்கு  இது  பிடிக்கலை . டிகிரி  முடிக்கனும்னு கண்டிப்பா சொல்றார். கோவிச்ட்டு  ராமானுஜன்  வீட்டை  விட்டு வெளீல போறார் . பின் திரும்பி வந்துடறார் . வாழ்க்கை ஜீவனத்துக்காக  கலெக்டர் ஆஃபீசில் சாதா  குமாஸ்தாவா  ஜாயின் பண்றார்.

 எப்போ பாரு மேத்சே நினைவாக  இருக்கும் அவர் மனதை  டைவர்ட் பண்ண மேரேஜ் பண்ணி வைக்கறாங்க .

ஆஃபீசில் வேலை நேரத்தில் ,   ஃப்ரீ ஃப்டைமில்   எப்போ பாரு அவர் கணித ஆராய்ச்சியில்  இருக்கார் . இதை , இவர் அறிவை உயர் அதிகாரி அடையாளம் கண்டு   ஃபாரீன்  அனுப்பறார்.

அங்கே  போய் அவர் திறமையை  உலகம் அறியச்செய்கிறார்கள் . இவர் பக்கா  சைவம் என்பதால் அங்கே  குப்பைகொட்ட மிகவும்  சிரம்ப்படறார்.

 டி பி எனும்  கொடிய நோயால்;  அவர்  33 வது வயதிலேயே  இற    ந்துடறார்.

இது தான் ராமானுஜன் எனும் சரித்திர நாயகன் பற்றிய  பதிவு.

பாடல்கள் அந்தக்கால இசையுடன்  மிகத்தேவையான இடங்களீல் மட்டும் வருது

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. பெரியார் , பாரதி போன்ற படங்களில்   ஜனங்கள் ரசிக்க பல சம்பவங்கள் இருந்தன. ஆனால் ராமானுஜன் வாழ்க்கையில் கணித அறிவு என்பதே  பிரதான அம்சம், அதை வைத்தே  ரெண்டே  முக்கால் மணி நேரம்  மிக சுவராஸ்யமாக  கொண்டு    சென்றது

2  ஒளிப்பதிவு கண்களை உறுத்தாமல் அதே சமயம்  மிக மேம்பட்ட தரத்துடன்  இருப்பது , திரைக்கதை , இயக்கம் , எடிட்டிங்க் என டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாம் அருமை
3 ராமானுஜன் , மனைவி இந்த இரு கேரக்டர்கள் தேர்வு  அபிநய் , பாமா இருவர் நடிப்பும் அபாரம் .தாழ்வு மனப்பான்மையை  பிரதிபலிக்கும் பாடி லேங்குவேஜ் அற்புதமாக வெளிப்படுத்தி  இருக்கார் நாயகன் அபிநய். பால் குடி மாறாத பாவையாக  பாமா  மிக அற்புதமான நடிப்பு . நிழல்கள் ரவி , சுஹாசினி  இருவரும் பெற்றோராக  அனுபவம் மிக்க நடிப்புஇயக்குநரிடம் சில கேள்விகள்


1   ராமானுஜன்  அல்பாயுசில் இறந்துடுவார்னு ஜாதகத்திலேயே  இருப்பதாகவும் , அது பலிக்கப்போவதன் அறிகுறி தான் அவர்  நோய்வாய்ப்பட்டதும் என ஒரு வசனம் வருது. அந்தக்காலத்தில்  திருமணம் செய்யும்  முன் ஜாதகப்பொருத்தம் பார்ப்பது  மிக முக்கியமான சடங்கு . அப்போது எப்படி அல்பாயுசு  ஜாதகக்காரனுக்கு  பொண்ணு  குடுத்தாங்க ?


2  ராமானுஜன் எழுதுன தனிப்பட்ட கடிதங்களை அவர் அம்மா ராமானுஜன் மனைவிக்குத்தெரியாம  பீரோவில் மறைச்சு வைக்கறார். பூட்டாம அப்டியே விட்டிருக்கார். கிழிச்சுப்போட்டிருக்கலாம். அல்லது மருமக  கண்ணில் படாமல் மறைத்து வெச்சிருக்கலாம். அவரே எங்கப்பன்  குதிருக்குள் இல்லை என்பது போல்  பீரோவில் ஏதோ எடுக்க மருமகளை அனுப்புவது எப்படி?

3   லண்டன் சென்ற பின் ராமானுஜன் தன் மனைவியை கடிதம்  மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை . தன் அம்மாவின் சதி என்பதை அவர் உணரவில்லை . சரி . ஆனா தன் நண்பர்களிடம் கடிதம்  மூலம் ஏன் விசாரிக்கவில்லை ?


4 ஜாதகத்தில் இன்ன தேதி , இன்ன டைமில் ராமானுஜத்திற்கு மரணம் சம்பவிக்கும் என தோஷம்  இருந்தால் அதைத்தடுக்க அம்மா ஏன் எந்த  முயற்சியும் செய்யவில்லை ? இயற்கைப்பேரழிவு , விபத்து  இது போல் மரணம் எனில்  தடுக்க  முடியாது . டி பி  மூலம் மரணம் என்பது  முன் கூட்டியே தெரிந்திருந்தால்  அம்மா ஏன் மகனிடம் எச்சரிக்கவில்லை?


5 மிக ஏழையான  பிராமணக்குடும்பத்தில்  பிறந்தவரான ராமானுஜத்தின்  குழந்தைப்பருவம், சிறுவன்   கேரக்டரில் வரும் பையன்  மிக தேஜஸ் ஆகவும் , பணக்காரக்களை உள்ள  முகமாகவும் தெரிவு செய்தது ஏனோ?>


6 லண்டன்  செல்லும் வாய்ப்பு ராமானுஜத்திற்கு வரும்போது அவர் ஏன்  தன்   மனைவியை தன்னுடன் அழைத்துச்செல்லவில்லை? அதுக்கு  ஒரு சால்ஜாப் வசனம் வருது . அழகி . அங்கே  போனால்  ஆபத்து என . இவர் ஒன்றும் அகதியா போகலையே? அரசாங்கத்தின்  கவுரமான அழைப்பில்  தானே  போறார் . உரிய பாதுகாப்பு  இருக்குமே?  வீர சைவமான இவர் அங்கே  போய் சாப்பாட்டுக்கு   ஆத்து க்காரி கைப்பக்குவ சமையல் தான்  உகந்தது என  முன் கூட்டியே கணித்திருக்க மாட்டாரா?


7   மிக ஏழைக்குடும்பமான  ராமானுஜத்தின் அம்மா   மேனா  மினுக்கி போல் மிக அதீத ஒப்பனையுடன்  இருப்பது எப்படி ? செயின் , நெக்லஸ் என கலக்கறாரே?

8  ராமானுஜன் எந்த புகழும் அடையும்  முன் அவருக்கு மேரேஜ் ஆகுது . பொண்ணு மிகப்பெரிய பணக்கார இடம்னு வசனம் வருது . வேலை வெட்டிக்குப்போகாத ., டிகிரி  முடிக்காத , வறுமைக்குடும்பத்துக்கு எந்த அடிப்படைல பொண்ணு குடுத்தாங்க ?

8 மாமியார்  கொடுமை  தெரிந்த  பின் தன் அப்பா வீட்டுக்குப்போகும்   மிசஸ் ராமானுஜன்   தன் அப்பாவின் செல்வாக்கைப்பயன்படுத்தி  லண்டன் போக ஏன்  முயற்சிக்கலை ?

9  ராமானுஜன்  ஒரு சீனில்  தற்கொலை செஞ்சுக்க  ரயில் தண்டவாளம்  முன் படுத்திருக்கார் . குகைக்கு வெளியே  ரயில் வரும்போது 10 அடி தூரத்தில் தான் ரயில் எஞ்சி  டிரைவரே அவரைப்பார்க்கார் . உடனே ரயிலை நிறுத்துவது  எப்படி ?

10  தற்கொலைக்கு முயல்வது  லண்டனில் சட்டப்படி  கடுமையான  குற்றம் .  6 மாதம்  முதல் 2 வருடங்கள் வரை தண்டனை உண்டு . அந்த  முக்கியமான வழக்கில் சிக்கிய  ராமானுஜத்தை  போலீஸ் ஸ்டேஷனில்  வக்கீல்  உதவி  இல்லாமல் அசால்ட்டா கூட்டிட்டு வருவது எப்படி ?

11   டிபி என்பது அந்த கால கட்டத்தில்  குணப்படுத்த முடியாத  நோய் என வசனம் வருது . அரசு உதவியுடன் ஃபாரீனிலேயே உயர் சிகிச்சை அளிக்காமல்  இந்தியா அழைத்து வருவது ஏன் ?

12  காதல்  கொண்டேன் படத்தில்   தனுஷ் காலேஜ் கிளாசில்    தான் ஒரு ஜீனியஸ் என்பதை  நிரூபிக்கும் காட்சியில்  பிஜிஎம் அள்ளும் . எழுந்து கை தட்ட வைக்கும் காட்சி . அதைப்போல் 10 மடங்கு    ஜீவன்  உள்ள காட்சியில்    ராமானுஜன் கணிதத்தில் கலக்கும்போது  பிஜிஎம் பின்னிப்பெடல் எடுத்திருக்க வேண்டாமா? மனம் கவர்ந்த வசனங்கள்

1 எந்த எண்ணையும் அதே எண்ணால் வகுத்தால் விடை 1.உதா = 3/3 =1 ,1000/1000 =1

 சார் .0/0 = ?,,# ராமானுஜன் த கிரேட்

2  தேகாப்பியாசம் ( எக்சசைஸ்) பண்ணலாம் வா. நான் தினம் அப்யாசம் பண்றேன்.தேகத்தோடு அல்ல.நெம்பர்சோட # ரா

3 ஏதோ ஒரு சப்ஜெக்ட் ல ஜீனியசா இருந்து மத்ததுல ஜீரோவா இருப்பதை விட எல்லாத்துலயும் சராசரியா இருந்தா தான் ஸ்காலர்ஷிப் தருவோம் # ரா4  எந்த தேசத்தில் செய்த பாவமும் காசி போனா தொலைஞ்சிடும்.காசில செஞ்ச பாவம் கும்பகோணம் போனா தொலைஞ்சிடும் # ரா

5 உன்னை மதிக்கத்தெரியாதவர் முன் நீ கை கட்டி சேவகம் செய்திட வேண்டாம் # ரா

6 என் மூளையில் பதிந்த கணக்குத்திறமை என் பட்டினியைப்போக்கும்னு தோணலை.பசிலயே செத்திடுவேனோனு பயமா இருக்கு # ராமானுஜன்

7  இந்த வெள்ளைக்காரங்க எல்லாம் ரொம்ப பார்மாலிட்டிஸ் பாக்கறவா.அவாளா கேட்காம நாம எதை அனுப்பினாலும் அதை மதிக்க மாட்டா # ரா8 இவர் மிக ஏழையா இருக்கார். பொதுவா பசி இருக்கும் இடத்துல் மூளை வேலை செய்யாது.இவர் விதிவிலக்காவும் விதியை புரட்டிப்போடுபவராவும் # ரா

9  தப்பு செய்யறது தப்பு னு சொல்லும் அதே மதம் தான் செஞ்ச தப்புக்கு பரிகாரத்துக்கும் வழி சொல்லுது # ரா

10 நீ குழந்த! எந்தப்பொண்ணும் கழுத்துல தாலி ஏறி ஒரு ராத்திரி தாண்டிட்டா விபரம் தெரிஞ்ச பொண்ணு தான் # ராமானுஜன்

  11 நீங்க ஏன் ஸ்டெப் பை ஸ்டெப் பா போகாம பைனல் விடையை மட்டும் சொல்றீங்க? அந்த டைம் ல இன்னும் பல புது பார்முலா கண்டுபிடிக்கலாமே? # ரா

12 ராமானுஜன் மாதிரி ஜீனியஸ்.இடம் வினோதமான பழக்கம் இருப்பது புதிர் இல்லை
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S1 ஒவ்வொரு தமிழனும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய ராமானுஜன் சரித்திரப்பதிவுப்படத்துக்கு கூட்டமே இல்லை. # ஈரோடு ஆனூர்2  ராமானுஜத்தின் அம்மா கேரக்டருக்கு சுஹாசினி மணிரத்னம் பாந்தமான தேர்வு.ஆர்ட் டைரக்டர் அதகளப்படுத்துகிுறார்

3
சிறு வயதில் ராமானுஜர் பயந்த சுபாவம் உள்ளவராக இயல்பாக இருந்திருக்குறார்

4  மிக ஏழைப்பட்ட குடும்பம் னு ஒரு இடத்தில் வசனம் வருது.ஆனா சுஹாசினி நெக்லஸ் போட்டிருக்கார்.ஒப்பனை மிக அதீதம். சறுக்கல்

5  பெரிய பெரிய சாதனையாளர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை கவனிக்க நேரம் இல்லாமல் அல்லது நேரம் பற்றாமல் இருந்திருக்கிறார்கள்

6 இவரோட அதிரடி மேத்தமேடிக்கல் தியரங்களைப்பார்க்கும்போது இவர் இரண்டாம் ஐசக் நியூட்டனோ னு தோணுது # ரா

7  88 நிமிடங்கள் கடந்த உணர்வே இல்லாமல் பிரமாதமான சம்பவக்கோர்வைகள் # ராமானுஜன்.இடைவேளை

8 ராமானுஜன் லண்டன் போகும் முன் ஈரோடு அருகே உள்ள நாமக்கல் கோட்டை கோவிலில் அருள் வாக்கு கேட்டுட்டு போகும் அளவு இறை பக்தி உள்ளவரா இருந்தார்

9 பிறவி நடிகன் கமல் ந்டித்து ,இசை மூலஸ்தானம் இளையராஜா இசை அமைத்திருந்தால் ராமானுஜன் பட மார்க்கெட்டிங் பிரமாதமாக போய் இருக்கும்


சி பி கமெண்ட் -
ராமானுஜன் = பரிபூரணமான பவுர்ணமி நிலா , ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய சரித்திர சம்பவம் ,விகடன் மார்க் =50 ,ரேட்டிங் =4/5

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 50
குமுதம் ரேட்டிங்க் =நன்று

 ரேட்டிங் =  4  /  5

a\\\


diski - பப்பாளி - சினிமா விமர்சனம் -  http://www.adrasaka.com/2014/07/blog-post_13.html

diski
நளனும் நந்தினியும் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/07/blog-post_5656.html

0 comments: