Saturday, July 05, 2014

சுனந்தா கொலை வழக்கில் மாட்டப்போகும் சசி தரூர் - புதிய சாட்சிகள் , தகவல்கள்

இறப்பதற்கு முன் சுனந்தா புஷ்கர் நள்ளிரவில் தமக்கு போன் செய்து கதறி அழுததாக டெல்லியைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளர் நளினி சிங் தெரிவித்துள்ளார். 


இந்தி செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் நளினி சிங் கூறியதாவது: “ஜனவரி 17-ம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு சுனந்தா தன்னுடைய செல்போனிலிருந்து எனக்கு போன் செய்தார். அப்போது, அவர் கதறி அழுததுடன் மிகவும் பதற்றமாகவும் இருந்தார். அவருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும் இடையே ட்விட்டர் மூலம் நடந்த கருத்து மோதல்தான் இதற்கு காரணம் என்று முதலில் நினைத்தேன். ஆனால், சசிதரூர் தனது பிளாக்பெர்ரி போனில் இருந்த பிபிஎம் மெஸன்ஜரின் குறுந்தகவல்களை அழித்து விட்டார் என சுனந்தா என்னிடம் வருத்தத்துடன் கூறினார். நான் ஒரு பத்திரிகையாளர் என்பதால் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டு படிக்க உதவ வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது சுனந்தாவை நான் சந்தித்தேன். அப்போது, பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும் சசி தரூருக்கும் இடையிலான விவகாரம் பற்றி என்னிடம் விவாதித்தார். தராருடன் சசிதரூர் துபாயில் நடத்திய சந்திப்பு குறித்தும் சுனந்தா மிகவும் கவலை கொண்டி ருந்தார்” என்று நளினி சிங் கூறியுள்ளார். கருத்து கூற சசி தரூர் மறுப்பு 


 
சுனந்தா புஷ்கர் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாற்றம் செய்ய தன்னை சிலர் வற்புறுத்தியதாக டாக்டர் சுதிர் குப்தா கூறிய புகார் தொடர்பாக கருத்து கூற முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மறுத்துவிட்டார். சுனந்தாவின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் சுதிர் குப்தா தலைமையிலானோர் பிரேதப் பரிசோதனை செய்தனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுனந்தாவின் மரணம் இயற்கையானதுதான் என்று தெரிவிக்க வேண்டும் என சிலர் வற்புறுத்தியதாகவும், அதற்குத் தான் உடன்படவில்லை என்றும் டாக்டர் சுதிர் குப்தா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சசி தரூரிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேட்டபோது, “சுதிர் குப்தாவின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. இது தொடர்பாக போலீஸார்தான் விசாரித்து தீர்வு காண வேண்டும்” என்றார். சுனந்தா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீஸார், இந்த விவகாரத்தில் சசி தரூருக்கு தொடர்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதா என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து பாஸி கூறியதாவது: விசாரணை முழுவதுமாக முடிவடைந்த பின்புதான், சசி தரூருக்கு தொடர்பிருக்கிறதா, இல்லையா என்பது பற்றி தெரியவரும். 


டாக்டர் சுதிர் குப்தாவின் குற்றச்சாட்டு தொடர்பாக தேவைப்பட்டால், அவரிடமும், சசி தரூரிடமும் விசாரணை நடத்துவோம். இந்த வழக்கின் விசாரணையை விரைவாக நடத்த முயற்சி எடுத்துள்ளோம். விசாரணையை துரிதமாக நடத்தும்படி சசி தரூர் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதை ஊடகங்களில் வெளியான செய்தி மூலம்தான் அறிந்துகொண்டேன். அப்படி எந்தவொரு கடிதமும் எங்களுக்கு வரவில்லை” என்றார். சுனந்தா இறப்பதற்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் நளினி சிங்குடன்தான் கடைசியாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 • P.ARUL SABAPATHY  from RIYADH
  இந்த மூத்த பெண் பத்திரிக்கையாளர் இவ்வளவு காலம் எங்கே போயிருந்தார்
  12 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
 • Sujatha  from DELHI
  அடுத்தவன் பொண்டாட்டி கதைன்னு ஒருத்தர் சொல்றாரு அனல் அதுவா அவரோட தங்கைக்கு நடந்தால் ஒதுக்குவார. அந்த நை சசிதருற்கு வயசான பிறகு ஒரு கல்யாணம் அந்த லேடி சுனந்தவுக்கு அவள் பயன் காலேசுக்கு போறப்ப ஒரு கல்யாணம். மானம்கெட்ட பொழப்பு. பதவி குடுத்தால் பணம், சுகம், போதை எல்லாம் அவனுங்களுக்கு தேவை பவம் மக்களுக்காக உழைகிரங்க இல்ல. மக்களுக்காக மூட்டை தூகுரங்க.
  12 days ago ·   (2) ·   (0) ·  reply (0)   
 • ro man  from COLOMBO
  காங்கிரஸ் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சுவாரசியமான மறு பக்கம் இருக்கும் போல மிருகங்கள் போல் பால் உறவுக்கும் பணத்துககவும் எதையும் செய்வார்கள்..
  Points
  350
  13 days ago ·   (4) ·   (0) ·  reply (0)   
 • middle class  from CHENNAI
  அடுத்தவன் பொண்டாட்டி கதை இப்போ ரொம்ப முக்கியம் மா???? இந்தியா ல எவ்வளோவோ பெரச்சனை இருக்கு கருப்பு பணம் , ஸ்பெக்ட்ரம் ஊழல் , பெட்ரோல், டீஸல் ,காஸ் , ரயில் கட்டணம் உயர்வு ??? ரோடு வரி கட்டறோம் பின்ன எதுக்கு தொல் கேட் கு வரி குடுக்கணும் என்ன நாடு இது ?????
  13 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
 • krishnan.m  from SALEM
  நண்பரே,டார்வின்,நீங்கள் குரியது உண்மை.நீங்கள் பிறேட்டேஷர்ரின் ஆட்சியில் இல்லை,இருபது இந்தியர்களின் ஆட்சியில்.அவர் உயிருடன் இருக்க வேண்டுமே.தமிழகத்தில் முத்துவேல் தட்சிணா மூர்த்தி யின் அராஜக அரசியலும் குடும்பத்தினர் அடித்த கொள்ளையும்,தெரியாதது அல்ல.ஏன் ஊடகங்கள் நீதி மன்றங்கள் குட வாய் பேசா மௌனி யாக உள்ளனர்.?'உயிர் பயம்'அண்ணாமலை பல்கலை கழகத்தின் 'உதய குமார்,கொள்ளப்பட்டது மல்ல அவரின் தந்தை இறந்தது ஏன் மகனே இல்லை என்று சொன்னாரே?அவரை சொல்ல வைத்தது யார்,என்று எல்லோருக்கும் தெரியும்.மற்றவர்களும் வாரிசுகள் பயம்.நீதி மன்றத்திற்கு தெரியாத?தானே முன்வந்து ஏன் விசாரிக்க வில்லை?உங்கள் வயது என்ன என்று தெரியாது,அதனால்,'கல்கி,குமுதம்'பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கப்பட்டது தெரியுமா?சமீபத்தில் மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்த பொழுது சிலர் உயிரிழந்தது தெரியுமா?டிவி சானல்களில் கையில் ஆயுதங்களுடன் மதுரை மேயர் ஒரு பெண்மை காட்சி அளித்தாரே?இபொழுது ஆட்சி மாறிவிட்டது,என்ன செய்தார்கள்?இதுதான் இந்தியா நண்பரே.
  Points
  600
  13 days ago ·   (3) ·   (0) ·  reply (0)   
 • krishnan.m  from SALEM
  சசி தரூர் பணத்திற்க்காக சுனந்தாவை மணந்து கொண்டார்.நாட்டை பாகி டம் விலை பேச மெஹரை தொடர்பு கொண்டு இருக்கலாம்.பாகில் தான் யார் வேண்டுமானாலும் ஐ,ஸ்.ஸ்.ஐ.க்கு உதவி செய்வார்கள்.ஷிண்டே வழக்கின் தன்மையை முடிமறைக்க ஆரம்பித்தார்.அவர் செய்த தில்லு-முல்லுகளில் இதும் ஒன்று.இது போல் பதிவியில் இருபது 'ஐந்தாம்படை யாக 'இருபது ........?
  Points
  600
  13 days ago ·   (2) ·   (1) ·  reply (0)   
 • kusumban  from CHENNAI
  முட்டையிடும் கொழிக்கல்லோ வலி தெரியும் .இன்றைய நாட்டு நிலவரத்தில் பதவியில் இருக்கும் ஒருவருக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்கள் உண்மையில் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும்.அல்லது குடும்பம் இல்லாதவராகவும் இருக்கலாம் டார்வின் அவர்களுக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை போலும்
  Points
  685
  13 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
 • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from BANGALORE
  சுனந்தாவின் மரணத்தில் ஏதோவொரு சூழ்ச்சி இருக்கிறது. இதற்கு முந்தைய அரசு சுனந்தாவின் மரணத்தில் இருந்த ரகசியத்தை முற்றிலுமாக மறைத்துவிட்டது. ஏனென்றால் சசி தாரூர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆகையால் அவரை காப்பாற்ற அவர்கள் அப்படி உண்மையை மறைத்திருக்கலாம். ஆனால் இப்பொழுது அவர் தப்ப முடியாது. மரியாதையாக அவரே முன்வந்து உண்மையை ஒப்புக்கொண்டு தண்டனையை பெறவேண்டும். உண்மையை மறைக்க முயல்வது அவர் செய்யும் ஒரு பெரிய தப்பு.
  Points
  3330
  13 days ago ·   (2) ·   (0) ·  reply (0)   
 • anbu  from CHETPUT
  இதுவே சி எம் டி எ அதிகாரிகள் மீண்டும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக அமைந்து விடாமல் இருந்தால் சரி
  13 days ago ·   (0) ·   (1) ·  reply (0)   
 • Darwin  from NEW DELHI
  ஆட்சி மாற்றம் வந்தபின் கருத்து தெரிவிப்பவர்களின் கூற்று எந்த அளவு நம்பகத்தன்மை உடையது என்பதையும் ஆராய வேண்டும். ஒரு நிர்வாகத்தை பற்றி அந்த நிர்வாகம் பொறுப்பில் இருக்கும் போதே கருத்துகூறுவதுதான் நேர்மை.
  Points
  2905
  13 days ago ·   (0) ·   (1) ·  reply (0)   
 • shan  from THANJAVUR
  சசி தரூர் காங்கிரஸில் செல்வாக்கு பெற்றிந்ததால் ஆட்சியில் இருக்கும் வரை செய்திகள் இருட்டறை .இப்போதுதான் உண்மைகள் வரதொடன்குகின்றன .உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான்
  Points
  4460
  13 days ago ·   (6) ·   (2) ·  reply (1)   
  Mauroof, Dubai  Up Voted
  • ro man  from COLOMBO
   கட்டாயம் அவன் அவன் செயல்களுக்கு விலை கொடுத்தே ஆக வேண்டும் இலங்கையில் நடந்த கொலைகளுக்கும் இந்த காங்கிரஸ் இழிந்த பிறவிகள் தான் காரணம்


 நன்றி - த தமிழ் இந்து

0 comments: