Saturday, July 26, 2014

பூமி கிரகத்தில் உள்ள மிக ஷை டைப் ஹீரோ யாரு? - சமந்தா அதிரடி

1. செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு.# ஆன்ட்ராய்டு போன் இலவசமா தரும் கட்சிக்கே என் ஓட்டு என எதிர்பார்ப்பான்


===================


2 நெஞ்சுவலியால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி # 7 தேமுதிக எம் எல் ஏ அதிமுக வுக்கு தாவப்போறதா வந்த செய்தியாலா?


==================3  விஷால் ன் புதிய பட டைட்டில் = ஆம்பளை # இந்தப்படம் ஹிட் ஆகும்னு நான் நம்பலை


===================


4 சாமியாராக மாறினார் மாஜி ஐஏஎஸ் அதிகாரி ஐ.ஆர்.பெருமாள்! (கர்நாடகம் ) # சிறப்பு விருந்தினர் ஜிஞ்சிதா வா?


===================


5 சிகரெட் வரி 72 சதவீதம் உயர்வு!!! # முகேஷ் களுக்கு திண்டாட்டம்.முகேஷ் களின் பெற்றோருக்கு கொண்டாட்டம்


=================


6 வரி குறைப்பால் காலணிகள் விலை குறையும் # டீசல் பெட்ரோல் கேஸ் விலை உயர்வால் அனைவரும் நடராஜா சர்வீஸ் க்கு மாற உதவியமைக்கு நன்றி சர்க்கார்


==================


7 சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணமில்லை -ஜெட்லி # ஆட்சிக்கு வந்ததும் கறுப்புப்பண பட்டியலை வெளியிடுவோம்னு ஒரு மானஸ்தர் சொன்னாரே


==================


8  பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பட்ஜெட்:் ஜெ # வை கோ வுக்கு அழைப்பா?,"மறுமலர்ச்சி" திமுக.னு மக்கள் நினைப்பாங்களே?


======================


9  ராஜஸ்தானில் MLA க்கள சட்டசபைக்கு லேட்டா வந்தா 500 ரூபா அபராதம் -செய்தி # FINE.லேட்டா வந்த 15 MLAக்களும் ஆன் த ஸ்பாட் லயே FINE கட்னது FINE


================ 


10 இளைய தளபதி விஜய் பூமி கிரகத்தில் உள்ள மிக ஷை டைப் ஹீரோ - சமந்தா # அட கிரகமே! அவர் வெட்கப்படும் அளவு என்ன சொன்னீங்க?======================


11  ஓடுகாலி என்பது கெட்ட வார்த்தை அல்ல -சபாநாயகர் # அதே சமயத்தில் அது நல்ல வார்த்தையும் அல்ல.சொன்னவர் கட்டிக்காத்த இமேஜ் காலி


========================


12 சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் இல்லை-ஜெட்லி # அதுக்குள்ளே சுண்ணாம்பு தடவி வெள்ளை ஆக்கிட்டாங்களா?


=======================


13 டீசரை விட 100 மடங்கு பிரமாதமா ட்ரெய்லர்்.ட்ரெய்லரை விட 1000 மடங்கு படம் இருக்கும் -அஞ்சான் எடிட்டர் # உங்க சம்பளம் பேசுனதை விட 2 மடங்கு


====================


14 அஞ்சான் படத்த ரொம்ப எதிர்பார்த்து பேராசையோடு வராதீங்க.ஆசையோட வாங்க - லிங்குசாமி # அஜித் ன் ஆசை DVD எடுத்துட்டு வந்துடப்போறாங்க


======================


15 விரைவில் ட்விட்டர் ,FACEBOOK வருவேன் - சூர்யா # நாளை மறுநாள் சூப்பர் ஸ்டார் சூர்யா வாங்க வாங்க.வெல்கம்


========================


16 இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு# ராமன் ஆண்டாலும் ,ராவணன் ஆண்டாலும் இலங்கைக்கு ஒரு பிரச்னை இல்லை


======================


17  சுரத்தில்லாமல் பேசுவதா: ஸ்டாலினை கண்டித்த கருணாநிதி # டாடி ஒரு டவுட்டு.நம்ம கட்சியே சுரத் இல்லாம தானே இருக்கு?
==============================


18  அலுவலகம் உள்பட அனைத்து இடங்களுக்கும் வேட்டி அணிந்து செல்ல வேண்டும்: கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் உ.சகாயம் # ஆமா, பேண்ட்டை விட வேட்டி சகாயம்


==========================


19 பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க புதிய சட்டம்: அரசுக்கு கோரிக்கை  # முதல்ல அடுக்கு மாடிக்கட்டிடத்தை எல்லாம் செக் பண்ணுங்க 


=====================20 சென்னை -கல்லூரி மாணவர்களுடன் கால்பந்து விளையாடிய நடிகர் ஆர்யா #  ஆர்யா ஆண்களுடன் விளையாடுவது இதுவே முதல் முறை!==============================

0 comments: