Sunday, July 13, 2014

நடிகைகளை பிக்கப் பண்றதுல no 1 HERO யார்யா?

1.  புதிய வீட்டுக்கு செல்கிறார் கபில் சிபல்- மாத வாடகை ரூ.16 லட்சம் # கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசா போச்சு? நாட்டு மக்கள் காசு, நல்லா இருடே


=======================


2 ஜெ. வழக்கு: 84 பிறழ் சாட்சிகளை மீண்டும் விசாரித்தது சட்டப்படி தவறு- ஜெ வக்கீல் வாதம் # பேசாம அம்மா கோர்ட் உருவாக்கிடவும்


=====================


3 100 மணி நேர தேனிலவு காலம் கூட என் அரசுக்கு இல்லை': பிரதமர் நரேந்திர மோடி # ஹனிமூன் டைம்லயே இவ்வளவு கெடுபிடின்னா அதுக்குப்பின்?========================


4 பணமே இல்லாமல் ஓராண்டு முழுவதும் தனது வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் ஜெர்மனி  இளம்பெண்# உலகம் பூரா எல்லா லேடீசும் அப்டித்தான்,பசங்க செலவு


=======================


5  நான் தான் அடுத்த முதல்வர் _ கேப்டன் # இந்த டயலாக் டாக்டர் ராம் தாஸ் க்கு சொந்தமாச்சே? நீங்க எதுக்கு காபி அடிக்கறீங்க?


========================


6 சூப்பர் ஸ்டார் பட்டத்தை காசு கொடுத்து வாங்கினாரா விஜய்? கிளம்பும் சர்ச்சை # கிறித்துவர் ஏரியான்னா சர்ச் ் ,விஜய் னா சர்ச்சை வருவதும் சகஜம்


=====================7 பள்ளிக்கு செல்லாததை கேட்ட வேலைக்கார பெண்ணுக்கு கத்திக்குத்து 14 வயது சிறுவன் கைது# கத்தி ன்னாலே ஆபத்துதான்.


======================


8 தமிழகத்தில் இந்தி வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும்: இல.கணேசன் # பிஜேபி ஆட்சின்னா வெடி நிச்சய்ம் னு சொல்றீங்களா?


======================


9  தெருவில் நடந்து போனபோது கே.பாலசந்தர் என்னை அழைத்து சினிமா வாய்ப்பு கொடுத்தார்'' கமல் # நடையா நடக்கத்தேவை இல்லை, சும்மா நடந்தா போதும் போல


======================


10 ஆண்களை அதிகளவில் பணியில் அமர்த்தும் பேஸ்புக் நிறுவனம் # ரிசப்ஷனிஸ்ட் மட்டும் பொண்ணா இருக்குமே?


======================11 ஆர்யா என்னை மட்டுமல்ல எல்லா நடிகைகளையும் நல்லா பார்த்துக்குவார்:- நயன்தாரா # எப்டியோ சண்டை போடாம ஒத்துமையா இருந்தா சரி


=======================


12 என்னை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்த குமுதத்திற்கு நன்றி _ விஜய் # உண்மையை உலகுக்கு உணர்த்திய தினமணி க்கு நன்றி


=====================


13 கை, காலை உடைப்பேன்.. .தமிழருவி மணியனுக்கு தேமுதிக எம்.எல்.ஏ மிரட்டல்..# தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி!


=====================


14 அம்மாவுக்கு ஆப்பு வைக்க யாராவது வருவாங்க: - விஜயகாந்த்! # நீங்க சலாம் மட்டும் வைப்பீங்களா?


=====================15 கை, காலை உடைப்பேன்.. .தமிழருவி மணியனுக்கு தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி கொலை மிரட்டல் # ஆளை தீர்த்த சாரதி னு பேர் எடுக்க ஆசையா?


======================16 ஒரு திருமண தகவல் மையம் போர்டில் =,உங்கள் ரகசியங்கள் கக்கப்படும் # அடேய்.அது காக்கப்படும் டா.்


======================
17 ரயில்வேயை முன்னேற்ற லாலுவிடம் ஆலோசனை பெற வேண்டும் - கி.வீரமணி. #,அவர் வாழ்க்கையே ஜெயில் ,களி னு பின்னேற்றப்பாதையில் போய்க்கிட்டு இருக்கு=============================
 18 நடிகைகளை பிக்கப் பண்றதுல ‘கால்டாக்ஸி’யை விட வேகமான ஆளு.ஆடியோ பங்ஷனில் பறந்த ஆர்யாவின் மானம்#ஆர்யாவை ரொமான்சில் மிஞ்சுவது யார்யா?======================

19  மற்றவர்களிடம் ஆர்யா எப்படியோ என்று எனக்கு தெரியாது. ஆனால், ஆர்யா என்னிடம் வழிந்தது கிடையாது-த்ரிஷா # பெருமையா? வருத்தமா?


================================

20  தொடக்கத்திலேயே மோடி அரசிடமிருந்து அதிசயத்தை எதிர்பார்க்காதீர்கள்-கோவா முதல்வர் # சினிமா அரசியல் ரெண்டிலும் ஓப்பனிங் கலக்கலா இருக்கனும்ணா=====================

0 comments: