Saturday, July 05, 2014

காதலி கோபமா இருந்தா , சொந்த சம்சாரம் கோபமா இருந்தா what to do ?

1. அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாதுனு அதிகமா படிக்காத பொண்ணுங்க மேரேஜ் ஆனதும் புருசன் காசுல என்னென்னமோ படிக்க ஆசைப்படுறாங்க


====================


2  காலை எழுந்ததும் வயிறு பசித்தால் அது பரிபூரண ஜீரண சக்தி ஆரோக்யம் என்பதை உணர்ந்து வெறும் வயிற்றில் இராமல் ஏதாவது அடுக்குவான் தமிழன்


=======================


3 ஜூஸ் கடைல லெமன் ஜுஸ் ஆர்டர் பண்ணா இளக்காரமாப்பாக்கறான்.அவனுக்காக பாதாம்கீர் எக்ஸ்ட்ரா குடிக்க வேண்டி இருக்கு


=====================


4 அன்பே! என் எல்லா படைப்புகளும் நீ கவனிக்காமல் விட்டவையே! எப்போ பாரு பர்பியையே சாப்பிட்டுட்டிருந்தா் கவிதை படிக்க நேரம் எப்டி இருக்கும்?


==================


5  குமுதம் - விஜய் இரு தரப்புக்கும் ஏதோ லடாய் இருந்துச்சாம் .அதுக்கு சமாதானக்கொடிதான் சூப்பர் ஸ்டார் வாக்கெடுப்பில் விஜய்க்கு சாதகமாம்.


=================


6  விஜய் படத்துக்கான குமுதம் சினிமா விமர்சனம் ஒன்ஸ்மோர் க்கு முன் ,பின் படித்தால் வித்யாசம் புரியும்.


=================


7 காதலி கோபமா இருந்தா call மேல CALL் போடு.சொந்த சம்சாரம் கோபமா இருந்தா நைட் 11 மணிக்கு கால் மேல கால் போடு இன் சமாதானக்கொடி


================


8  எந்தப்பொருளை சீராகக்கேட்டாலும் எருமை போல் அசைந்து கொடுக்காத மான மிகு மாமனாரே! எருமையையே சீராகக்கேட்டால் என்ன செய்வீர்?


====================


9  வாய் வார்த்தை யாக சண்டை போட்டால் முற்றுகிறது என்பதால் சைகையில் சண்டை போட்டேன்.சைகை புரியவில்லை என தனி சண்டை போட்டாள் # பொண்டாட்டிடா


==========================


10  பஸ் டிரைவர் ஹார்ன் அடிக்கும்போது பஸ்ல உள்ள பூரா பயலுகளும் காதை பொத்திக்கறாங்க.ரோட்ல ஒரு பயலும் மதிச்சு வழி விடல====================


11 இந்த பொண்டாட்டிங்க கிட்டே எனக்கு பிடிக்காத அம்சமே டிபன் சப்்பாத்தி ,பூரி கேட்டா மாவை பிசைஞ்சா ,உருட்டித்தந்தா னு கண்டிஷன் போடுவதே


==================


12  அன்பே! நீ லேட் பிக்கப் லேகாவா?,நேத்து சொன்ன ஜோக்குக்கு இன்னைக்கு சிரிக்கறியே!நாளைக்கு ரிலீஸ் ஆகுது வடைகறியே!


===================


13 வேலை இல்லா பட்டதாரி செம ஹிட் ஆகிடுமாம்.கிரி ,போக்கிரி னு ரி ல முடிஞ்ச டைட்டில் படம் எல்லாம் ஹிட்டாம் # எத்தனை குஷ்பூ ரிசைன் பன்னாலும்்


===================


14 டெய்லி வீட்லயே ட்ரெட் மில் லுல வாக்கிங் போறேன் னு பந்தாவா மெஷினரிஸ் வாங்கி வெச்சுட்டு அதில் துணி காயப்போடுவான் ஹை க்ளாஸ் தமிழன்=====================


15   9 30 மணிக்கே பேங்க் வந்துட்டு அரை மணி நேரம் கடலை போட்டுட்டு 10 மணிக்கு சிஸ்டம் ஆன் பண்ணி கஸ்டமர்சை கடுப்பேற்றுவான் பேங்க் ஸ்டாf தமிழன்


===================


16  10 மணிக்கு தான் பேங்க் திறக்குது.அப்பவே டீ வருது.வீட்ல இருந்து வரும்போதே குடிச்ட்டு வரமாட்டீங்க்ளாய்யா? டீ டைம் 11 டூ 11 30 தானே? # IOB=====================


17 செய்னி செய்னி ADல் வரும் பச்சைக்கலர் பிகர் போட்டு வரும் அரை குறை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் 65 செமீ ஜாக் பிட்டில் தைத்தது# அறிவோம் பெண்மீகம்


=====================


18  பழ வகையை நேரடியா 10 ரூபா கொடுத்து வாங்க யோசிச்சுட்டு பழச்சாறில் கெமிக்கல் கலந்து பாட்டில் ல வித்தா 50 ரூபாய்க்கு வாங்கிக்குவான் தமிழன்===================


19  புது மொழியைக்கத்துக்க சோம்பேறித்தனப்பட்டு தமிழ் என் மூச்சு ,தமிழ் என் பேச்சு என உதார் விடுவான் தமிழன்


===================


20   வட "இந்தி"ய மொழியை வேரோடு வெறுத்து விட்டு வட இந்திய உணவான பூரி ,புரோட்டோ வை மட்டும் வளைச்சு வளைச்சு அடிப்பான் தமிழன்==========================

0 comments: