Saturday, July 26, 2014

டாக்டர்!தூத்துக்குடி பரோட்டா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா?

1. கண்டக்டர் = ஆம்பளைங்க எல்லாம் பின்னால நகருங்க !

சாரி.முன்னால தான் பிகருங்க.


===================


2 டாடி.காது குத்தும்போது வலிக்குமா? ச்சே ச்சே அதெல்லாம் வலிக்காது. சும்மா காது குத்தாதேப்பா!


==================


3 எங்க வீட்ல குடும்ப உறுப்புனர்கள் மட்டும் 52 பேர். அடேங்கப்பா.சொந்தமா ஒரு பஸ்ஸே வாங்கிக்குங்க.


==================

4 டாக்டர்.நீங்க வெட்னரி டாக்டர் என்பதால் ஒரு டவுட் கேட்கறேன்


. ம் கேளு வாயில்லா ஜீவன் கள் லிப் கிஸ் அடிக்குமா?அதுக்குத்தான் வாயே இல்லையே?


===================


5 தலைவரே! ஏன் இப்பவெல்லாம் ஜாகிங் போறதில்லை? ஓடுகாலி னு யாரும் சொல்லிடக்கூடாதுனுதான்


===================


6 குட்மார்னிங் சார்.டுடே ரிப்போர்ட்.இன்னைக்கு சன் டே!


 சாரி சார்.மறந்துட்டேன்.ஒர்க் பத்தியே நினைச்சுட்டு இருந்தேன் # ஐ நம்பிட்டாரு


==================

7 டொக் டொக்


 யார் சார் நீங்க?என்ன வேணும்?டெய்லி உங்க பொண்ணு காலை 6 க்கே கோலம் போட்டுடும்.இன்னைக்கு 7 ஆகியும் காணோம்?FEVER?


====================


8  ஜட்ஜ் = எல்லா வீட்லயும் பூட்டை உடைக்காம எப்டி திருடுனே?கைதி = முதல் கட்டமா 6 மாசம் பூட்டு கம்பெனி நடத்துனேன்.பூட்டு வாங்குனவங்க வீட்ல மட்டும்  திருடுவேன்


====================


 9 டியர்.என் கிட்டே ஏதாவது தவறு இருந்தா சுட்டி காட்டுங்க.உன் நெத்தி சுட்டி விலகி இருக்கு.வகிடுக்கு நேரா இல்லை #,இடம்"சுட்டி்பொருள் விளக்கு


=======================


10 எங்க கிளப் ல வேட்டி கட்டிட்டு வருபவர்களுக்கே அனுமதி.எப்பூடி? "கிளப் "பிட்டீங்க!,சபாஷ்


======================11  மிஸ்!,எதுக்காக ஸ்கூட்டியை வித்துட்டு ஆக்டிவா வாங்கிட்டீங்க?இன்ட்டர்வ்யூவுல இந்த வேலை கிடைக்கனும்னா ஆபீஸ்ல "ஆக்டிவா"இருக்கனும்னாங்க


======================12 பொண்ணுக்கு மூல நட்சத்திரம்.மாமனார் இல்லாத மாப்ளை தான் வேணும். பொண்ணோட அப்பா கூட மாப்ளைக்கு மாமனார் தான்


=======================


13 உங்க வீட்டுக்காரரை என்ன சொல்லி கூப்பிடுவீங்க?


ஹவுஸ் ஓனரே னு


=======================


14 பெண் பார்க்கும் படலத்தில் =


பொண்ணுக்கு வாய்ஸ் நல்லாருக்குமா?


 ஒரே ஒரு வாய் தான்.எதுக்கு ப்ளூரல் ல வாய்ஸ் னு சொல்றீங்க?


=======================


15 டியர்.என் பேச்சைக்கேட்கலை.3 நாளைக்கு பேச மாட்டேன் அதான் தண்டனை. 300 நாள் கூட பேசாம இரு.ஐ ஜாலி


====================


16 புருசன் கூட 2 வருசமா பேச்சு வார்த்தையே இல்லைங்கறீங்க.அப்புறம் எப்டி 3 மாசமா மாசமா இருக்கீங்க? டாக்டர்.அவரு மவுனராகம் ரசிகர் மன்றத்தலைவர்.


======================


1 7 ஸார்.நீங்க எழுதுன நாவல் ல ஹீரோ ஏன் அடிக்கடி ஒரு பக்கா பொரி கடலை வாங்கறாரு? இது ஒரு பக்கா கதை னு ஜம்பமா சொல்லிக்கலாமே?


========================

18  கப்பல் ல ஒரு டூர் கம்பெனி செலவுல செய்யனுமா? எதுக்கு?டீம் லீடர் ங்க எல்லாம் லீடர்"ஷிப்" குவாலிட்டியை வளர்த்திக்க வேணாமா?


==========================


19 மிஸ்! இன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க்ளா?


எப்டி தெரியும்?


 5 வருசமா பஸ் ல வரேன்.இன்னைக்கு மட்டும் கன்னத்துல புதுசா ஒரு மச்சம் இருக்கே?மை  விட்டு வரைஞ்சுக்கிட்டீங்களா?


=================20 டாக்டர்!தூத்துக்குடி பரோட்டா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா?
 யோவ்! புரோட்டாவே உடம்புக்கு கெடுதல் தான், அதை எந்த ஊரில் போய் சாப்ட்டா என்ன?=========================

0 comments: