Sunday, July 20, 2014

இருக்கு ஆனா இல்லை - சினிமா விமர்சனம்

 

 ஹீரோ  நண்பர்களோட சேர்ந்து  சுத்தும் ஒரு வேலை கிடைக்காத மாணவர். கொஞ்சம்  தாழ்வு மனப்பான்மை உள்ளவர் . ஒரு டைம் சாலை விபத்துல   மாட்டிக்கறார்  அவர்  கூடவே  ஒரு பொண்ணும் மாட்டிக்குது . இவர் ஆள்: எஸ்கேப். ஆனா பொண்ணு ஆள் அவுட் . சத்தம்  இல்லாம  ரூமுக்கு வந்தா அப்பவே இன்சிடெண்ட் காபி மாதிரி இன்சிடெண்ட் பேய் ஆகி அந்த பொண்ணு  இவர்  ரூம்லயே  இருக்கு . கரண்ட்  வேற  இல்லை . இவர் பயந்து  போய் வெளில பார்க்ல வந்து  படுத்துக்கறார்.


 விடிஞ்ச்தும்  நண்பன் வந்து பார்க்கும்போது அவர் கண்ணுக்கு பேய் தெரியலை . எப்படி அதிமுக அமைச்சர்ங்க  வாய் கூசாம  கரண்ட் கட்டா>? தமிழ் நாட்டிலா?  இல்லையே? னு சொல்ற மாதிரி  நண்பர்  ஹீரோ  கிட்டே “ எங்கடா? பெய் ? -னு கேட்கறார் . 

ஹீரோ , அந்த  பேய் , நண்பர் ,  அவங்க  வீடு  அதை வெச்சு காமெடி  , பயம் -னு 3 ரீல்  போகுது . 

அந்தப்பேய்க்கு தான்  யார் என்பதே மறந்துடுச்சாம் . கண்டு பிடிக்க ஹீரொ கிட்டே  உதவி கேட்குது .  ஹீரோவும்  , நண்பரும் சேர்ந்து   உதவறாங்க . 


 இந்தப்பழக்கத்துல  ஹீரோவுக்கு அந்த பேய் மேல   லவ் வருது . பேயோட அம்மா, ட்வின் சிஸ்டர்  2 பேரையும் கண்டு  பிடிக்கறார் . பேயோட   சிஸ்டர் ஹாஸ்பிடல் ல   கோமா ல படுத்திருக்கு . அந்தப்பொண்ணை அந்த  ஹாஸ்பிடல்  டாக்டரே  கொலை பண்ண  திட்டம்  போடறார் . எதனால? அப்புறம் என்ன ஆச்சு ? எப்படி  தடுத்தாங்க ? இதை எல்லாம்  வெண்  திரையில் காண்கஹீரோவா  விவாந்த். ஓப்பனிங்க் ல புலம்பல் புனிதனாக  மொக்கை போட்டாலும்  போகப்போக  நல்லா நடிச்சிருக்கார்  ,. குறிப்பா அவர் மாடர்ன் ஆன பின்  பாடி லேங்குவேஜில் நல்ல வைரைட்டி .  குட் 


 நாயகிகளா 2 பேர் . மணிஷா ஸ்ரீ . ஆஃபீஸ் கொலீக்கா  ரவா  லட்டு மாதிரி  வந்து போறார் . அதிக காட்சிகள் இவருக்கு  இல்லை . ஆனா  வரும்போதெல்லாம்   ஏதாவது ரொமாண்டிக் பார்வையோடயே வர்றர் . கிளாமர் டிரஸ்  குட் 


ஈடன் என்ற  வித்தியாசமான பேர் உள்ள  இன்னொரு ஹீரோயின்  தான்  அழகிய மோகினிப்பேயா  வர்றார் . படம்  பூரா இவருக்கு  ஒரே டிரஸ் . ( ஒரே டிரஸ்னா  வீ்ணா  கற்பனை பண்ணாதிங்க , டீசண்ட்டான  சுடிதார் தான் ) படத்தில்  அதிக காட்சிகள்  வருவது  இவர்  தான் . கோமா ஸ்டேஜில்  இருக்கும் சிஸ்டரா இன்னொரு  ரோல்  வேற . அதில் அதிக நடிப்பு வாய்பில்லை . ஆனா  பேயாக அழகாக வந்து போவதில் ஃபர்ஸ்ட்  கிளாசில் பாஸ் 


ஒய் ஜி மகேந்திரன் , வில்லனா  வரும்  டாக்டர்  இருவருக்கும்  அதிகம்  வேலை இல்லை 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 பேய்ப்படம்னாலே ரத்தம் , பயம் , திகில் காட்சிகள் என்ற மரபை உடைத்த யாமிருக்க பயமே  பட பாணியில்   குடும்பத்துடன் பார்க்கும் விதமாக கண்ணியமாக படம்  தந்தது 


2 வாய்ப்புகள்  இருந்தும்  , ரவா லட்டு , கேசரி  மாதிரி  2 இளம்  ஹீரோயின்கள்  இருந்தும் கிளாமர் காட்சிகள் வைக்காமல்  மிக கண்ணியமாக காட்டியது , சாரி  , எதையும்  காட்டாமல்  விட்டது 


3   குடைக்குள் மழை படத்தில் ஆர் பார்த்திபன் மாதிரி  ஹீரோவும்  ஏதோ  மனக்குறைபாடு  உள்ளவரோ என எண்ணும்  விதமாக காட்சிகள் அமைத்து   புத்திசாலித்தனமாக   ட்விஸ்ட்  வெச்சது 


4  ஒரு க்ரைம்  த்ரில்லர் படத்தில்   ஒரு காட்சியில்  கூட அகோரமான  உருவமோ , முகமோ , ரத்தம் , எதுவும் காட்டாமல்  பயம் , திகில் , சிரிப்பு என  ஃபீலிங்க்சை  வர வைத்ததுஇயக்குநரிடம் சில கேள்விகள் 1.   ஹீரோ   பல  காட்சிகளீல்  அவர்  வீட்டில்  இருக்கும்போது  சுவரில் “ நோ மணி , நோ  ஜாப் , நோ  கேர்ள்  ஃபிரண்ட் அப்டினு  சுவர் ல எழுதி  வெச்சிருக்கார் . ஆனா  வேலையே  இல்லாதவர்  சொப்பன சுந்தரி தங்கி  இருக்கும் பங்களா மாதிரி ஒரு ஆடம்பர அபார்ட்மெண்ட்டில்  குடி  இருப்பது எப்படி ? வாடகையே 30,000 வரும் போல 

2   மேல் மருவத்தூருக்கு மாலை போட்டிருப்பதாக  ஹீரோவிடம்  ஒரு லேடி சொல்லுது . ஆனா அது சிவப்பு சேலை கட்ட்லை , மாலையும் சாதா  பாசி சந்தன மாலை தான்  . ஏன்? 


3  டாக்டர்  ஒய் ஜி மகேந்திரன்  ஏன்  படம்  பூரா  தலையை  விரிச்சுப்போட்டுட்டு சாமி  வந்த மாமி மாதிரி  இருக்காரு ? ஒரு டாக்டர்  கேரக்டர் அப்டித்தான்  இண்டீசண்ட்டா  இருபாங்களா? 


4 ஹீரோ  ரொம்ப  ரிஸ்க்  எடுத்து  டாக்டர் இடத்துக்குப்போய் அந்த  ரகசிய ஃபைலை எடுக்கார்.. நாயகி தான் பேய் ஆச்சே? அவர் யார் கண்ணுக்கும்  தெரிய மாட்டாரே . அவர்  போய்  இருக்கலாமெ>? 


5   முன்  பின்  தெரியாத யாரோ  ஒரு ஆள் ( ஹீரொ ) கிட்டே காட்சி அளித்து பேசும் பேய் தன் சொந்த அம்மா  கிட்டே ஏன் பம்முது ? அம்மாவுக்கும்  காட்சி அளிக்கலாமே? 


6 பேய் வாழ்க்கைல ஏகப்பட்ட  சோகம் . சகோதரி மரணப்படுக்கையில் ,. அப்டி இருக்கும்போது ஏன் ஹீரோ  கிட்டே நண்பன் கிட்டே  மொக்கை காமெடி  போட்டுக்கிட்டு இருக்கு ? 


7 வில்லனா  வரும்  டாக்டர் எப்பவோ அந்த பொண்ணை  முடிச்சிருக்கலாம் . எதுக்கு க்ளைமாக்ஸ் வரை காத்திருக்கனும் ? 


8   க்ளைமாக்ஸ் ல பேய்  என்ன செஞ்சுதோ அதை  இடைவேளை அப்பவே  செஞ்சிருக்கலாமே? எதுக்கு  இழுக்குது டைமை /
மனம் கவர்ந்த வசனங்கள்


1.  நீ சொல்லப்போற கதை ல பேய் இருக்கா? இல்லையா? இருக்கு.ஆனா இல்ல # இஆஇ2 எல்லாரோட வாழ்க்கைலயும் நல்லது கெட்டது மாறி மாறி நடக்கும்.ஆனா சிலரோட வாழ்க்கைல மட்டும் கெட்டது மட்டுமே நடக்கும் # இஆஇ


3 நான் பேசற இங்க்லீஷ் உனக்கு ஏன் புரியல? தப்பா இங்க்லீஷ் பேசுனா யாருக்குமே புரியாது # இஆஇ


4 அதிகமா படிச்சவன் கிட்டயும் ,அதிகமா குடிச்சவன் கிட்டேயும் நான் பேசறதில்ல

. பார் ல வேலை செய்யறவன் எல்லாம் பஞ்ச் டயலாக் பேசறான் # இஆஇ 5 அதிர்ஷ்டம் கற சாவி எல்லார் வாழ்க்கைலயும் ஒரு தடவை அவங்க கைக்கு வந்தே தீரும் # இஆஇ


மோகினிப்பேய் = உன் கிட்டே மாட்டிக்கிட்டு எப்டித்தான் குப்பை கொட்டப்போறேனோ? ஹீரோ = என்ன? நான் பேச வேண்டிய டயலாக் எல்லாம் இவ பேசறா # இஆஇ


7   குடிகார புருசன்.லோல் பட்டு செத்திருக்கு


 என்னது? லோன் வாங்கி செத்திருக்கா? # இஆஇ இந்த உலகம் நம்மைப்பத்தி என்ன சொல்லுதுனு கவலையே படக்கூடாது.நாம ஜெயிச்சா லக் குனு சொல்லும்.தோத்தா மக்கு னு சொல்லும் # இஆஇ


9 மத்தவங்க FEELINGSசை புரிஞ்சுக்காத யாரும் வாழ்க்கைல முன்னேறவே முடியாது #இஆஇ


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


குடைக்குள் மழை படத்தில் சீரிய்சா சொன்ன கதையை இதுல திகில் காமெடி கலந்து சொல்வாங்க போல # இருக்கு ஆனா இல்லஎன்னய்யா இது? மோகினிப்பேய் மேட்சுக்கு மேட்ச் போட்டு லோ கட் சுடிதார் எல்லாம் போட்டிருக்கு?#இஆஇ

சி பி கமெண்ட்  -
இருக்கு ஆனா இல்லை - புதுமையாண கோஸ்ட் பேக் ட்ராப் திரைக்கதையில் ஏ சென்ட்டர் க்கான க்ரைம் த்ரில்லர் -,விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 2.75/5எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 42

குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =   2.75  /  5 

 

டிஸ்கி -

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/07/blog-post_18.html

  


சதுரங்க வேட்டை -சினிமா விமர்சனம் 


http://www.adrasaka.com/2014/07/blog-post_8601.htmlA


AElizabeth Masterson, a dedicated doctor in San Francisco, had almost no time for anything. When her sister with two kids set her up on a date, she gets into a tragic car crash and gets in a coma. Meanwhile, a landscape architect named David Abbott moves into San Francisco and coincidentally, into Elizabeth's apartment for rent. While at the apartment, Elizabeth's spirit haunts him. She doesn't remember who she is, who her family is, and what she did - All that she remembered was her apartment and where everything was. To settle the arguments, David agrees to figure out who Elizabeth really is. When they get close to figuring out who she is, they eventually find love with one another and as they finally know who she really is, they learn that fate really has put them both together. 

0 comments: