Wednesday, July 02, 2014

தேங்காய் எண்ணெய் புழக்கத்தில் இல்லாத ஊர்!!

1. கல்பனா ஹவுஸ் பேய்ப்படமா இருந்தாலும் செகன்ட் ஷோ போய்ட்டு வீட்டுக்கு வந்தா பொண்டாட்டி கிட்டே எங்கே போய்ட்டு வந்தோம்னு சொல்லிட முடியாது


==================


2  கிராமத்து கணவர் VS நகரத்து மனைவி-நாளைய நீயா நானா..#ரைட்டு.களை கட்டும்டைம் லைன் .நம்ம சங்கத்து ஆளுங்க ஒண்ணு கூடி கும்மி அடிச்சிடுவோம்


=====================


3 புதுசு புதுசா டிபி மாத்தறவங்க டிபி ல தான் என்ன பண்ணிட்டிருக்கீங்க என்பதை விளக்கிட்டாத்தேவலை.ஒரே குழப்பமா இருக்கு.


=================


4  மீனராசி ,ரேவதி நட்சத்திர அன்பர்களே! இன்று புதிய தொழில் தொடங்குவீர்கள்.புது பிகரிடம் கடலை போடுவீர்கள்.அதை பிகர் விரும்பும்.நட்பு அரும்பும்


=====================


5 அன்பே மேரி ! நீ ஒரு மொள்ள மாரி! நீ ஏன் என்னுடன் பேசுவதில்லை முன்ன மாதிரி?

====================



6  லேடி- ஏய்.என்னோட கழுத்துல ஏன் பாக்கறே? பாட்டிலோட கழுத்துல சரியான விலை எழுதி இருக்கு # கோக்குமாக்கு advt of கொக்கோகோலா




=====================


7 கார் ல ஒரு குழு கல்யாணமண்டபத்துக்கு வழி கேட்டாங்க.பசிக்குது நானும் வரட்டா கூட ன்னேன்.மிரண்டுட்டாங்க



=====================


8 அன்பே! எது சாப்பிட்டாலும் வாயைத்துடைக்காத நீ நான் முத்தம் இட்டால் மட்டும் துடை துடைனு உதட்டை துடைச்சுக்கறியே அது ஏன்?


======================


9 சாமுத்ரிகா லக்ஷணம் எனும் புத்தகம் எழுதும் காலத்தில் த்ரிஷா பிறந்திருந்தால் சாமு"த்ரிஷா " லட்சணம்?



========================


10 அன்பே! உன் ஊரில் தேங்காய் எண்ணெய் புழக்கத்தில் இல்லையா? எப்போதும் தலைவிரி கோலமாகவே இருக்கிறாயே ?



=====================


 11  ஒரு சிக் கென பிகரே சிக்கன் 65 சாப்பிடுதே அடடே



===================


12 ஒரு பொருளை வாங்க எப்படி எல்லாம் நச்சரிக்க வேண்டும் என்பதை சம்சாரத்திடம் இருந்து கற்றுக்கொள்ள்ளலாம் # இம்சை இல்லத்து அரசி



==================


13 குளிக்க போகட்டுமா? னு காதலி கேட்டா அதுக்கு உள்ளர்த்தம் உள்ளே நீ யும் வா னு அர்த்தமாம்.


=====================



14 பெற்றோரின் மனம் வருந்தும்படி நம்மையும் அறியாமல் ஒரு சொல் கூறிவிட்டால் அந்த நாள் நம் மனசாட்சிக்கு நரக நாள்



=======================


15 பஸ் ,ரயில் பயணங்களில் நாம் முன்னோக்கிப்பயணிக்கையில் நம் நினைவுகள் பின்னோக்கி அழைத்துச்செல்லும்


====================


16 குழந்தைகள் கடை வீதியில் மிட்டாய்,பொம்மை ,பலூன் விரும்பிக்கேட்கையில் யாரும் பேரம் பேசிக்கொண்டிருப்ப்தில்லை கடைக்காரரிடம்



=====================



17 என்னை மட்டும் விட்டுட்டுப்போய்ட்டா உன்னை சாவடிச்சுடுவேண்டா னு பஸ் ல ஒரு டெரர் face பிகர் யாரையோ மிரட்டிட்டு இருக்கு.யார் பாவம்னு தெரில.


====================



18 மழைத்துளி பட்டதும் பூமி வாசம் வீசுவது போல் பூச்சரத்தை கூந்தலில் சூடியதும் ஒரு பெண்ணின் அழகு டக் என்று கூடி விடுகிறது



=====================



19 பழைய சொந்தங்கள் (நம்மை விட.வசதியானவர்கள் )எதிர்பாராத சந்திப்பில் பேசலாமா?வேணாமா? என அவர்கள் யோசித்தால் நாம் கடந்து விடுவது நல்லது



======================



20 குழந்தையுடன் கொஞ்சுகையில் தாய்மையின் பூரிப்பு முகத்தில் ஜொலிப்பதால் பல அழகு பிகர்களை முழு மனதுடன் சைட் அடிக்க முடிவதில்லை


=======================




0 comments: