Thursday, July 31, 2014

பெரும்பாலான ஆண்களுக்குப்பிடிக்காத ஹீரோக்கள்

1. அம்மா/அப்பா போன் செய்யும்போதுஅம்மாதானே அப்புறம் பேசிக்கலாம்னு போனை கட் பண்ணிடாதீங்க.அது முக்கியமான அழைப்பாக இருக்கக்கூடும்================ 2  கட்டுக்கோப்பான குடும்பத்துப்பையன் என்பதால் ராத்திரி 10 க்கு மேல் வீட்டை விட்டு வெளில அனுப்ப மாட்டாங்க என்னை.காத்து கறுப்பு அடிச்சுடுமாம்==============


3  அம்மா தாயே! நீங்க யூஸ் பண்ணி டிஆக்டிவேட் செஞ்ச பழைய ஐடி இருந்தா குடுங்கம்மா.டிஎம் படிச்சுப்பாத்து பொழுதை ஓட்டிக்குவேன் #2025 பெக்கர்


================


4 அன்பே! மோனலிசா! டயட் இருக்கேன் ,வாக்கிங் போறேன் னு பில்டப் குடுத்துட்டு எதுக்கு டெய்லி சாப்பிடறே சமோசா?


===================

5 சமூக வலைத்தளங்களிலும் சரி ,தினசரி வாழ்க்கையிலும் சரி ஒருவரைப்பிடிக்கவில்லை எனில் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.அவரை ஒதுக்கி வைங்க.================


6  இன்று ஹாலிவுட் நடிகர் வின் டீசல் பிறந்த நாளாம்.எந்த பெட்ரோல் பங்க் லயாவது டீசல் இலவசமா விநியோகித்தால் தகவல் சொல்லுங்க.நப்பிக்கலாம்  ( 19 7 14 )================

7 2035 ட்விட்டர் தம்பதி பைட் டியர்.நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை. பிடிக்கலைன்னா என்னை அன்follow பண்ணிக்கோ


===============


8 செல்வம் கொழிக்கும் செப்புத்தகட்டை ஏன் விக்கறீங்க?நீங்களே வெச்சிருந்து்பெருக்கிக்கலாமேனு கேட்காம அதை வாங்கி ஏமாறுவான் ஆன்மீகத்தமிழன்==================


9 இயக்குநர் விஜய் இன்னும் 5 வருடம் கழித்து டைரியில் எழுதப்போகும் வாசகம் = பழகப்பழக அமலா பாலும் புளிக்கும்

==============


10 அஜித் ரசிகரா இருந்தாலும் அவர் வீட்டு ரேஷன் கார்டில் குடும்பத்"தலைவா"னு தான் இருக்கும்.இது தான் வாழ்க்கை===============


11 விஜய் ரசிகர் வீட்டு ரேஷன் கார்டில் அவர் பேரு குடும்பத்"தலை"வர் னு தான் வரும்.இதுவும் வாழ்க்கை தான்


===============


12 சாப்பிட்ட பின் இலையை எடுக்கவும்னு போர்டு வெச்சாதான் எடுப்பேன்னு ஒருவர் பைட்டிங் வித் சர்வர்.நான் அவர் இலையையும் எடுத்து போட்டுட்டேன்


================


13 என்ன செஞ்சா பிரச்சனை தீரும் னு பார்க்காம ஏதோ ஒரு பிரச்சனை பண்ணனும்கறதுக்காகவே பிரச்னை செய்வான் தமிழன்


===============

14 தீபாவளி க்கு துப்பாக்கி வந்தது.மேட்சுக்கு மேட்ச் கத்தி ஆயுத பூஜை க்குத்தானே வரனும் ? - தெளிவா இருக்கும் தெப்பக்குளத்த குழப்புவோர் சங்கம்

================15 அவரவர் சாப்பிட்ட தட்டை அவரவரே சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குழந்தையிலிருந்தே பழக்கப்படுத்தி விடுதல் நல்லது


==================


16  மகா ஜனங்களே! பார்க்க மகா லட்சுமி மாதிரி இருக்கும்  பொண்ணுங்க தான்   காளியாத்தா கணக்கா  சிக்கன், மட்டன் செம வெட்டு வெட்டுதுங்க===================

17 கல்யாணமான அடுத்த 10 வது மாசமே ஒரு குழந்தையைப்பெத்துக்கும் நாம் எல்லோருமே படைப்பாளிகள் தான்யா ;-))=================


18    3 படமும் ஒரே நாள் ல பார்த்து விமர்சனம் மட்டும் ஏன் டெய்லி 1 ? நாம வெட்டியா இருக்கோம்னு ஊருக்குள்ள ஒரு பயலுக்கும் தெரிஞ்சுடக்கூடாதில்ல? 


==================19 பெரும்பாலான) ஆண்களுக்குப்பிடிக்காத ஹீரோக்கள் 1 சிம்பு 2 பிரபுதேவா 3 அனிரூத் 4 ஆர்யா5 தனுஷ்


=============
20  வாக்கிங் வந்துட்டிருக்கேன்.இருட்ல ,முக்குல ஒரு ஆளு என் கையைப்பிடிச்சு இழுத்துட்டான்.வெறுக் னு பயந்துட்டேன்.ஆட்டோ வேணுமாங்க்றான்.அடேய்!


======================

0 comments: