Wednesday, July 16, 2014

DAWN OF THE PLANET OF THE APES - சினிமா விமர்சனம்

ஏதோ  ஒரு வைரஸ் தாக்குதலால் உலகில் மனித இனமே மண்ணோடு மண்ணா  போயிடுது . அங்கே இங்கே  கொஞ்சம் நஞ்சம் மிச்சம் மீதி மனுஷங்க  இருக்காங்க . கானகத்தில்  ஏப்ஸ் எனப்படும்  மனித கொரில்லாக்கூட்டம்  இருக்கு .

தப்பிப்பிழைச்ச  மனிதர்கள்  பழைய வாழ்க்கையை வாழ  மின்சாரம்  உற்பத்தி பண்ண   ஒரு அணைக்கட்டுக்கு வர்றாங்க . ஆனா அது  இப்போ ஏப்ஸ் ஓட சொந்த இடம் . 

 இப்போ எப்படி கச்சத்தீவுக்காக   கலைஞர் , ஜெ , இருவரும் மாறி மாறி அறிக்கைப்போர் நடத்தறாங்களோ அப்படி மனித இனத்துக்கும் , ஏப்ஸ்க்கும் போர் நடக்குது. 

 நக்கீரன்   கோபால் எப்படி  ராஜ் குமாரை  மீட்க பேச்சுவார்த்தைக்கு வீரப்பன் காட்டுக்குப்போனாரோ அப்படி ஹீரோ  கொரில்லா  விடம் பேச்சு வார்த்தை நடத்தப்போறார் . 


 இப்போ  கொரில்லாக்கூட்டம் காங்க்  கோஷ்டி\ மாதிரி  2 பிரிவா மாறி அடிச்சுக்குதுங்க .


மனித இனம்  வென்றதா> ஏப்ஸ் ஜெயிச்சுதா ? என்பது  மிச்ச மீதிக்கதை 


 இதை 3 விதமா பார்க்கலாம் 

 ராமநாராயணன்  டைப்    விலங்குகள் படம் 


 குழந்தைகள்  கண்டு  மகிழ  ஒரு ஜாலி படம் 

 ஈழப்போராட்டத்தில்  தமிழர்கள் தங்கள் உரிமைக்கு எப்படிப்போராடுனாங்க்ளோ அப்படி  ஒரு இனம்  தங்கள் இருப்பிட்த்துக்குப்போராடுன மாதிரி 


 எப்படிப்பார்த்தாலும்  படம்   நல்லா தான்  இருக்கு . 


  கிரஃபிக்ஸ் காட்சிகள் கலக்கல்
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1    குரங்கு சாரி கொரில்லாக்களின்  முக பாவனைகளை தத்ரூபமாக படம்  பிடித்தது 


2  மனித  நேயத்தை  தூண்டும்  உணர்ச்சி  மிக்க காட்சி அமைப்புகள் 

3   பிரமாதமான இயற்கைவளம்  மிக்க கானகப்பகுதிகளில் படப்பிடிப்பு , ஒளிப்பதிவு அபாரம் .இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 . என்ன தான்   ஏப்ஸ்  புத்திசாலி என்றாலும் எந்த  முன் அனுபவ்மும் இல்லாமல்  மிஷின் கன் எல்லாம் உபயோகிப்பது  ஓவர் 

2  ஏப்ஸ் -ன்  தலைவன்   குங்குமம்  வெச்சிருக்காரு . ஏன் சந்தனம்  , விபூதி எல்லாம் வைக்கலை ? ஆஞ்சநேயர்  கோவிச்சுக்குவாரா? மனம் கவர்ந்த வசனங்கள்

1. மனிதன் விலங்கிடமிருந்து கோபத்தையும் ,வெறுப்பையும் மட்டுமே கத்துக்கிட்டான்.வேற எதையும் கத்துக்கலை # D O T P O A


மனித இனத்தில் மட்டும் அல்ல.எல்லா இனங்களிலும் அந்தந்த கால கட்டத்தில் துரோகிகள் உருவாகிட்டு தான் இருக்காங்க.# DOTPOTAபடம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


1.  கொரில்லாக்குரங்கு நெத்தி ல குங்குமம் வெச்சிருக்கு.என்ன கொடுமை சார் இது? நல்ல வேளை ஜிமிக்கி போடலை # DAWN OF THE PLANET OF THE APES


2  இப்பத்தான்யா ஹீரோ கொரில்லா ஓப்பனிங் சீனே முடிஞ்சிருக்கு.அடுத்து ஹீரோயின் கொரில்லா குளிக்கும் போல :படம் எப்படி இருக்கு?


3 80 கொரில்லாக்கள் 40 குதிரை ல டபுள்ஸ் வந்து மனிதர்களை எச்சரிக்குது! எங்க ஏரியாப்பக்கம் இனி வந்தா நடக்கறதே வேற #,பாட்ஷாடயலாக் ஆச்சே!


4  டாடி.குரங்குக எல்லாம் எப்போப்பா சண்டை போடும்? 


பொசுக் பொசுக் னு சண்டை போட அது என்ன மேரேஜ் ஆன பொண்ணா? பொறும்மா5 இயற்கை ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம்.ஒளிப்பதிவு ,லொக்கேஷன் செலக்சன் பிரமாதம் # D O T P O T A


6 கொரில்லாக்கள் 2 க்ரூப்பா பிரிஞ்சு காங் கோஷ்டி மாதிரி அடிச்சுக்குதுங்க.


7  ஒரு கொரில்லா சரக்கு அடிக்குது.மனிதன் கிட்டே இருந்து பாட்டிலைப்பிடுங்கி.அடுத்து "வேணாம்.மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு"பாடுமோ?
சி பி கமெண்ட் -DAWN OF THE PLANET OF THE APES = குழந்தைகளுக்கான 2 மணி நேரப்படம்.முன் பாதி சுமார் பின் பாதி டமார் .ரேட்டிங் = 2.5/5எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 

குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =    /  5
  


புதுக்கோட்டை RKP A/C DTS குட் குவாலிட்டி.பால்கனி 80 ரூபா 1
Embedded image permalink
  

0 comments: