Wednesday, July 02, 2014

சில்மிஷம் செய்யும் சில்பான்சிகள் ஜாக்கிரதை.

1. சூர்யாவுக்கு, காலம் நல்ல பதிலை சொல்லும்! - கெளதம்மேனன் # சார்.நீங்க இன்னும் அவருக்கு கதை சொல்லலை.ஜோசியம்தான் சொல்றீங்க


==================


2 காதலர் மீது ப்ரீத்தி ஜிந்தா ் பாலியல் புகார் # ஏம்மா மியான் மர் பீச் க்கு கூட்டிட்டுப்போய் மிக்சர் சாப்டுட்டு இருப்பார்னு நினைச்சீங்க்ளா?


============


3 விரதம் கொலஸ்ட்ராலை குறைக்கும்-அமெரிக்க ஆய்வு # இந்தியாவில் பெரும்பாலான ஏழைகள் தினமும் ஒரு வேளை விரதம் தான்


======================


4 ரஷ்ய விஞ்ஞானிகளின் தவறால் 40 ஆண்டுகளாக எரியும் சுரங்கம் # கூடங்குளம் உலை கூட ரஷ்யர்களால் வடிவமைக்கப்பட்டவைதான்.ஜாக்கிரதை"


===============


5 ராஜா கெட்டப்பில் நடிக்கிறார் விஜய்! # நல்ல வேளை.இளையராஜா கெட்டப்போ னு பயந்துட்டேன்


=================

6 கூலிங் கிளாஸ் அணியாத மணமகனை தேடும் அனுஷ்கா - செய்தி # என்னத்தைப்பெருசா கழட்டுனே?னு யாரும் கேட்க முடியாதபடி கூலிங் கிளாசை கழட்டிடுவோம்


======================


7  ஒரு வழிப்பாதையாகவே போய் விடுமோ என்பதால் கட்சியை விட்டு விலகுகிறேன் - குஷ்பூ #50 வருசத்துக்கு மேல கட்சில உழைச்ச அன்பழகனுக்கே கிடைக்கலை.


================


8 திடீர் ராஜினாமா ஏன்? குஷ்பு விளக்கம் # பெரிய பதவி கிடைக்கும்னு எதிர்பார்த்தாரு.பப்பு வேகலை.கூடாரத்தை காலி பண்ணிட்டாரு


================


9  லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு# லட்சக்கணக்கில் வேடிக்கை பாக்க கிளம்பி இருப்பாங்களே?===================


10  நான் CM ஆக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பினால் - தமிழருவி மணியன் # அம்மாவா?அய்யாவா?னு டாஸ் போட்டுப்பார்த்து ஓட்டுப்போடுவான் தமிழன்


===============


11  பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில்ிகளில் கண்காணிப்பு கேமராக்கள் || சில்மிஷம் செய்யும் சில்பான்சிகள் ஜாக்கிரதை.லைவ் ஷோ மாடல் ஆகிடாதீங்க


=================


12  ரூ.500க்கு பெங்களூரு கொச்சி இடையே விமான சேவை: ஏர்ஆசியா அறிமுகம் || அம்மா விமானம் அதுக்குள்ளே வந்துடுச்சா?


============


13  கலைஞர் என் தந்தை மாதிரி வேறு கட்சிக்கு போகும் ஐடியா இல்லை-குஷ்பு"#ஸ்டாலின் அழகிரி க்கு தங்கச்சி முறை? கட்சி ல சொத்துல பங்கு கேட்பாரோ?


====================


14  உன் சமையலறையில்.. கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றி..பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சி! # சார் , பேச்சை மாத்தாதீங்க, தமிழ் ல என்ன ஆச்சு?> 


==================


15 தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை # சூரியன் -னா அம்மாவுக்கு ஆகாதே? 


===============


16  திமுகவில் இருந்து விலகிய குஷ்பு பாஜகவில் இணைகிறார்- செய்தி # பசிச்ச வயிறுக்கு சோறு போடுவதும், ஜெயிச்ச குதிரை மேல சவாரி போவதும் சகஜம்தானே?


==================


17  ஹைதராபாத்தில் ரூ.1-க்கு சிற்றுண்டி: விரைவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டம் # வாழை இலைக்கே 2 ரூபா ஆகுமே?


===================


18 முண்டாசுபட்டி 4 நாளில் 4 கோடி வசூல்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு # முண்டாசுப்பட்டி பாகம் 2 எடுக்க  பூஜை போட்டிருப்பாங்களே?==================


19  50,000 ரூபா சம்பளம் வாங்கிய ஸ்ரீதிவ்யா!  50 லட்சம் கேட்கிறார் -செய்தி #  ஊதா கலரு  ரிப்பன்.யார் அந்த ஏமாந்த சுப்பன்?


=============


20  புகை பிடிக்கும் பட விளம்பரத்துடன் தனுஷ்…வேலை இல்லா பட்டதாரி யில் மீண்டும் சர்ச்சை # தனுஷ் , முகேஷ்  பெயர் பொருத்தம் எப்படி?


=======================================

0 comments: