Thursday, July 31, 2014

தொட்டால் தொடரும்

1. ஸ்கூல் ல கோ எட் படிச்சப்போ பொண்ணுங்க அமர்ந்து சென்ற பெஞ்ச்சில் அவங்க லஞ்ச்க்குப்போன பின் உட்கார்ந்து பார்க்க அடிதடி நடக்கும்


================


2 அன்பே! நீ உன் இதழால் என் இதழைத் தொட்டால் தொடரும் நம் காதல் நொடிகள்.


==================

3
நான் புறா இல்லடா கழுகு - அஞ்சான் சூர்யா பஞ்ச் # நான் கழுகு இல்லைடா நக்கீரன் - கத்தி விஜய் பஞ்ச் # கற்பனை


==================


4 எம்மல் செய்வது= அது ஒரு பிரத்யேக வார்த்தை. நடிப்பு, மாய்மாலம், பிகு ,சுணங்கிக்கொள்தல் ,மூடுமந்திரமாய் சிரித்தல்


====================5 ஒரு தோல்வி பல சந்தர்ப்பவாதிகளை ,துரோகிகளை ,சுயநலமிகளை நமக்கு அடையாளம் காட்டும் எனில் தோல்வியும் நமக்கு தேவையே !#,குஷ்பூ ,திருமா,அழகிரி


=====================


6 பன்ருட்டி-் பலாப்பழத்தில் அடர் மஞ்சள் ,சிறிய சுளை செம இனிப்பு.வெளிர் மஞ்சள் ,பெரிய சுளை இனிப்பு சுவை குறைவு.ஆனா கொட்டை வேகவைத்து செம ருசி


================== 7 எல்லோரிடமும் இயல்பாய்ப்பேசும் உன் இயல்பு என்னிடம் பேசாத பொழுதுகளில் துருத்திக்கொண்டிருக்கும்


====================


8 நிராகரிப்பால் என்னை அவமானப்படுத்தி யதாய் உள்ளுக்குள் நீ கொக்கரிக்கும்போது அவமானத்தை அமைதியாய் ஏற்றுக்கொள்வதும் அன்பின் ஒரு பகுதி என்பேன்


====================9 பெண் குழந்தையை அழைக்கும் அப்பாவின் குரலில் கண்டிப்பு இருக்காது.


==================


10 குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தையைக்கொஞ்சி மகிழமுடிவதில்லை என்பதால் குழந்தைகள் 5 வயதுக்கு மேல் அப்படியே இருந்தால் அமிர்தம்.====================


11 பெரும்பாலான குழந்தைகள் தன் கண் எதிரே தன் அம்மா வயிற்றில் ஒரு குழந்தை சுமப்பதை விரும்புவதில்லை


=====================


12 நடுத்தரவர்க்க குடும்ப தம்பதியரிடையே தோன்றும் சிறு சிறு பிணக்குகளுக்கு குழந்தையே சமாதானத்தூதுவர்


======================


13 வாழ்வதற்கான வாழ்வாதார செல்வம் ஈட்ட வாழும் மழலைச்செல்வத்தைப்பிரிந்து கடல் கடந்துவாழ்பவர் உண்மையில் தியாகிகளே!


========================


14 மகிழ்ச்சிகரமான ,பெருமிதம் தரக்கூடிய தோல்வி என்பது மழலையுடனான விளையாட்டில் விட்டுக்கொடுத்து வேண்டும் என்றே நாம் தோற்பதே!


====================


15 ஒரு லட்சம் ட்வீட்ஸ் க்கு வாழ்த்து சொல்பவர்கள் ஆளுக்கு ஒரு பழம் வாங்கித்தரவும்.அப்போ நான் பழம் பெறும் ட்வீட்டர் னு போட்டுக்குவேன்


=====================


16 பஸ் ,ரயில் பயணங்களில் தூங்கும் கண்ணாடி போட்ட பிகர்களே! தூங்கும்போது எதுக்கு கண்ணாடி? கனவு வந்தா தெளிவா தெரியும்.கழட்டிட்டு தூங்கவும்


====================


17 ஈரோடு பிகர்களே! மழை வருவதால் ஜாக்கிரதை.மேக்கப் கலைந்தால் சொந்த புருசனுக்கே உங்களை அடையாளம் தெரியாமல் போகலாம்
=====================

 18 கல்யாணமான நடிகைங்க ஏதாவது  விழாவுக்கு வந்தா அவங்க கழுத்துல தாலி இருக்கா?னு ஒரு கிளான்ஸ் பார்ப்பான் தமிழன்


===================


1 9 ராத்திரி  முழுக்க ஜன்னலை திறந்து வெச்சு குளிர் காற்றை அனுபவிச்ட்டு காலைல  சூர்யக்கதிர்கள் வந்து எழுப்பாம இருக்க ஜன்னலை மூடிடுவான் தமிழன்
======================


20 அஞ்சான்  டீசர் எப்படி  இருக்குனு கேட்டா? அதைப்பத்தி கமெண்ட் பண்ணாம அஞ்சான் ஃபிளாப் தான் ஆகும்னு ஜோசியம் சொல்றாங்க. அய்யோ ராமா!


==========================0 comments: