Monday, July 07, 2014

மாலத்தீவில் ஹனிமூன்

1. மலேசியாவில் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகரை அறைந்த கேப்டன்... # அர்விந்த் கேஜ்ரிவால் போற பக்கம் எல்லாம் வாங்கறாரு .இவர் கொடுக்கறாரு


================


2 வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெலுங்கு ரீமேக்கில் சன்னி லியோன்..# ஊதா கலர் க்கு பதிலா நீல நிற ரிப்பன் குடுத்துடுங்க மேட்சிங்கா இருக்கும்"


===============3 இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும்தான் இந்தி கட்டாயம்,மற்ற மாநிலங்களுக்கு அல்ல - மத்திய அரசு.# தமிழ் பேசிம் மாநிலம்னா தமிழ் கட்டாயமா?்


===============


4 ஆடம்பர பொருள்கள் மீதான வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் # அத்யாவசியப்பொருள்கள் மேல் கை வைக்காம இருந்தா சரி


===============


5 என் திறமை அஜீத்துக்கு தெரியும்... அதனால்தான் மீண்டும் இணைந்துள்ளோம்!- த்ரிஷா #,உலகம் பூரா எல்லாருக்கும் தெரியுமே மேடம்


================


6  மாலத்தீவில் அமலாபால்–டைரக்டர் விஜய் தேனிலவு .# பேமசான டூரிஸ்ட் ஸ்பாட்டா மாலத்தீவு மாறிடும் இனி.இங்கேதான் கொண்டாடுனாருனு


=================


7  உத்தம வில்லன் படத்தில் இருந்து திடீரென விலகிய ஆண்ட்ரியா. கவுதமி அதிர்ச்சி # நியாயமா கமல் தானே அதிர்ச்சி அடையனும்.இவர் ஏன் ஜெர்க் ஆகனும்?


===============


8 அப்ரூவராக மாறிய சக்சேனா; சன்டிவியை இழுத்து மூட சி.பி.ஐ. நடவடிக்கை..! # இந்த வாரம் இழுத்து மூடும் வாரம் னு ஜெயா டி வி ல மூடுபனி(ணி)உண்டா


===============


9 மாலத்தீவில் ஹனிமூன்; கட்டில் முதல் கடற்கரை வரை படங்கள் வெளியிட்ட அமலாபால் # ஏதோ ஆதாரம் சேகரிச்சு வைக்கற மாதிரி தோணுது

===================


10  உலகதரத்திலான ரயில் சேவைக்கு கட்டண உயர்வை ஏற்க வேண்டும்-அருண்ஜெட்லி #உலகப்படம்னு ஆடியன்ஸ் சொல்லனும்.புரொடியூசர் சொல்லக்கூடாது


===============


11  கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை# கொடுமை கொடுமைனு கோயிலுக்குப்போனா அங்க ஒரு கொடுமை சிங்க்சக்னு ஆடுச்சாம்


===================


12  சமையல் காஸ் விலையை மாதந்தோறும் மாற்ற முடிவு  #  அதில் என்ன கஞ்சத்தனம் ? சினிமா தியேட்டர் மாதிரி டெய்லி 4 டைம் மாத்துங்க 


=================


13 திமுகவுக்கு இனி வளர்ச்சி கிடையாது: மு.க.அழகிரி # ஆல மரம் பற்றி சருகுகள் கவலைப்படக்கூடாதுன்னு தலைவர் சொல்வார் பாருங்க 


================


14 தி.மு.க.வில் இருந்து எங்களை மட்டும் நீக்குவதா?: கே.பி.ராமலிங்கம் ஆவேசம்# தனக்கு ஒரு கண் போனா பக்கத்துவீட்டுக்காரனுக்கும் போகனும்


==============


15 ரெயில் கட்டண உயர்வு காங்.  எடுத்த முடிவு: பொன். ராதா# இப்படி ஏத்திட்டே இருந்தாங்காட்டிதானுங்க்ணா அந்த கட்சிக்கு ஏற்பட்டது பரிதாப முடிவு


===================


16 கம்யூ. கட்சிகளுடன் விடுதலை சிறுத்தை கூட்டணி-திருமாவளவன் # விருந்து சாப்ட்டுட்டு எல்லாரும் போன பின் வெத்தலை பாக்கு வாங்கப்போய் என்ன பயன்?===================


17 அமெரிக்காவில் போதை சாக்லேட் விற்றவருக்கு 99 ஆண்டு ஜெயில்.# நூறாண்டு காலம் வாழ்க! ஜெயில் களி தினம் தின்று வளர்க!


===============


18  சிங்கப்பூரில் விஜயகாந்துக்கு கண் ஆபரேஷன் -செய்தி # கோபப்பட்டா  முன்னே மாதிரி கண் சிவக்க மாட்டேங்குதாம், சரி பண்ணிட்டு வந்து முறைப்பார்


=================


19   மின்சாரமில்லாமல் ஓடும் வாஷிங்மெஷின்: கண்டுபிடிப்பு -செய்தி # அய்யய்யோ , கரண்ட் கட் ஆனா அது வீட்டை விட்டு ஓடிடுமா?


=================


20  தூங்கும் வேங்கையை இடறுகிறது மத்திய அரசு- வைகோ காட்டம் # எந்திரிச்சா மட்டும் வேங்கை மேல வந்து பாயவா போகுது?வாக்கிங் தான் போகும்


======================

0 comments: