Friday, July 04, 2014

புதுக்காதலியின் கன்னத்தில் அவள் கேட்காமலேயே முத்தம் இட்ட

1. அன்பே! நேற்றைய இட்லியை உதிர்த்து உப்புமா ஆக்கினாய்! இன்றைய மீந்து போன உப்புமாவை நாளை என் செய் வாய்?


===============


2 அன்பே! உன் வீடே பெப்பெரப்பே னு திறந்து கிடக்கு.உன் ட்விட்டர் அக்கவுன்ட் மட்டும் பாதுகாப்பா பூட்டி இருக்கே அது ஏன்?


===============


3 அன்பே! உங்கம்மா எனக்கு அத்தை மாதிரி.ஆனா வேறு யாரையும் கட்டிக்கும் எண்ணம் இல்லை.உன்னையும் கட்டிக்க மாட்டேன்.பிம்பிளிக்கி பிளாப்பி


==================4 வட கறி னு ஒரு படம் வருது .நான் வேற சுத்த சைவம்.அந்தப்படம் பாக்கலாமா?னு தெரியலையே?


====================


5  சர்வர் பில் கொண்டு வந்தா அவருக்கு டிப்ஸ் வைக்கனுமேனு அவசர அவசரமா அவர் வர்றக்குள்ளே கேஷ் கவுன்ட்டர் ல பில் கட்டிடுவான் தமிழன்


===================


6 அன்பே! நீ எந்த டி பி வைத்தாலும் அழகாக இருக்கிறது , ஆனா உன் சொந்த டி பி வைச்சா மட்டும் சுமாராதான் இருக்கு, அது ஏன் ?
========================
7 இங்க்லீஷ் ட்வீட்ஸ் புரியலைன்னா அப்பாலிக்கா அகராதில பாத்துக்கலாம்னு இப்போதைக்கு பேவரைட் பண்ணி வெச்சுக்குவான் தமிழன்


==================


8  எந்த அரசு வந்தாலும் நடுத்தர மக்களின் தலையில் கை வைப்பது ஏனோ?#ரயில் கட்டண உயர்வு==================


9 சம்பவாமி யுகே யுகே = எந்த சாமியா இருந்தாலும் U K போகத்தான் ஆசைப்படுது


====================


10 தொலை தூரப்பேருந்துகள் பயணிக்கும் நேரத்தை விட ஒவ்வொரு ஊர் பேருந்து நிலையத்தில் நிற்கும் மொத்த நேரம் அதிகம்


===================


11  உயிருனும் மேலான உடன் பிறப்புகளே! குஷ்பூ விலகல் பற்றி தலைவர் இன்னும் எந்தக்கருத்தும் சொல்லவில்லை.நீங்களா எதும் அடிச்சி விடாதீங்க.======================12 பெண்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்வது பிறர் காணத்தானே? என்று கேட்பது தவறு.ஒரு ஓவியத்தின் கடமை அழகாதல்!====================


13 வேகமாக வாகனத்தில் பறப்பவர்கள் சாலை விபத்தை நேரில் கண்டால் வேகம் மட்டுப்படுவது முதல் ஒரு மணி நேரம் மட்டுமே!


===================


14  அன்பே! லோலிட் டா! உன்னை எல்லோரும் டா போட்டுத்தானே பேச முடியும்.வாங்கி வந்த பெயர் வரம் அப்படி!


==============15 சேவை செய்யவே திமுகவில் சேர்ந்தேன் - குஷ்பூ # நீங்க பாட்டுக்கு செய்யவேண்டியதுதானே? இப்போ விலகுவதற்கு என்ன தேவை?=====================


16 தன் தேவை ,எதிர்பார்ப்பு ஈடேறவில்லை எனில் யாராகினும்் உதாசீனப்படுத்த பெண்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு குஷ்பூ ஒரு மோசமான முன் உதாரணம்


===================17   விஜய் = தமிழ் நாட்டின் நெ 1 வார இதழ் குமுதமே நான் தான் அடுத்த ரஜினினு சொல்லிடுச்சு.அஜித் = அப்டியா? போயஸ் தோட்டத்துல இருந்து call வரும்=====================


18  புதுக்காதலியின் கன்்னத்தில் அவள் கேட்காமலேயே முத்தம் இட்டோர் பெரியோர் ,இடாதோர் காதல் கலையில் வறியோர்====================


19  ஏதோ ஒரு மலைக்குச்சென்றால் நீ மலையாளி! எந்த ஒரு மழையில் நனைந்தாலும் நீ மழையாளி!=====================


20   கஞ்சன் வீட்டுக்கல்யாண விருந்துல வெற்றிலை ல தான் பரிமாறுவாங்களாம்=======================

0 comments: