Sunday, July 20, 2014

காலை எழுந்தவுடன் படிப்பு வாசக பனியன்

1.ஹிந்தி ல சூடியாங் = வளையல்.அந்த வார்த்தையில் இருந்து உருவானதே சூரிதார் ,சுடிதார்.வளையல் போன்ற தோற்றம் தரும் உடை # சன்


===============


2 மீனராசி அன்பர்களே! ஆபீசில் டேமேஜர் பாராட்டு கிடைக்கும்.வாகன யோகம் உண்டு.வழியில் சாவியுடன் பைக் இருந்தால் கிளப்பிட்டு போய்டாதீங்க.


=================


3 ஆண் ,பெண் இரு பாலருக்கும் நெற்றியில் இடும் விபூதி ,குங்குமம் அழகு சேர்க்கும் மங்கள ப்பொருட்கள்


====================


4 தனது முதல் காதல் இணையுடன் உள்ளங்கை கோர்த்து நடந்து செல்லும் பயணமே அனைவர் வாழ்விலும் நிகழ்ந்த சிறந்த பயணம்


=================


5 மனைவி யிடம் அன்பு கொண்டவர்கள் மனைவியின் செல்போன் கால் க்கு வைக்கும் ரிங்க் டோன் பெரும்பாலும் " மாமோய்.நீங்க எங்கே இருக்கீங்க?


====================


6 கொடைக்கானலில் குணா குகை ,கேரளா வில் புன்னகை மன்னன் அருவி என சுற்றுலாத்தலங்களில் கூட தன் படப்பெயரை பதிவு செய்த ஒரே தமிழர் கமல் தான்


====================


7 ஏர்செல் ஆபீஸ் ல போஸ்ட் பெயிட் பில் கட்ட மதியம் 1 30 டூ 2 30 லன்ச் டைம் ல போனா பேப்பர் படிச்ட்டு ,சைட் அடிச்ட்டு வரலாம் #3 இன் 1


====================


8 ஒரு மணி நேரமா காத்திருந்தும் நான் போக வேண்டிய ஊருக்கான பஸ் வர்ல.கோபத்துல அடுத்து வந்த ஏதோ ஒரு பஸ்ல ஏறிட்டேன் .எப்பூடி நம்ம சாமார்த்தியம்


======================


9 லேகா வாஷிங் டன் = லேகா துவைச்சு முடிச்சுட்டாங்க # சபாஷ் துபாஷ்


====================10  எல்லாப்படைப்பாளிகளும் ஆரம்ப கட்டத்தில் எங்கோ, யாராலோ எள்ளி நகையாடப்பட்டவர்களாகவே  இருப்பார்கள்
==============11 உடன் இருக்கும்போதே ,உயிருடன் இருக்கும்போதே நம் பெற்றோருக்கு உரிய மரியாதை ,கவனிப்பு ,அக்கறை செலுத்துவோம்.அது நம் கடமையும் கூட


=======================12 அப்பாவிடம் உள்ள நற்குணங்களின் வார்ப்பாக மகன் உருவாகிறான்.அம்மாவிடம் உள்ள குண நலன் களின் பிரதிபலிப்பாக மகள் வளர்வாள்


====================


13 வாரம் ஒரு வேளை ,மாதம் ஒரு முழு நாள் உண்ணா நோன்பு இருப்பது உடல் நலனுக்கு ,மன நலனுக்கு நல்லது


======================14 மனிதனின் ஆன்மீக நம்பிக்கையை நம்பி பல தொழில்கள் ,வியாபாரங்கள் நடக்கின்றன


=====================


15  சினிமா ஷூட்டிங் 3 மாசம் நடந்தாலே நம்மாளுங்க கரெக்ட் பண்ணிடுவாங்க. சீரியல் வருசக்கணக்கா நடக்கும்போது  எல்லாம் நடக்கும்


====================16 நாளை காலை அஞ்சான் டீசர் சக்சஸ்  மீட் . நாளை மறு நாள் மாலை கத்தி டீசர் சக்சஸ் மீட்  # உலகிலேயே முதல் முறையாக


========================


17 பிரேசில் தோற்று ஜெர்மனி ஜெயித்ததில் MONEY விளையாடி இருக்குமோ?மேட்ச் பிக்சிங் நடந்திருக்குமோ னு யாரும் இன்னும் சந்தேகம் கிளப்பலையா?


======================18  சொந்த மண்ணில் தோற்பது தோல்வியிலும் பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. # விளையாட்டில் ,வாழ்க்கையில்


=====================


19 காலையில் டீ போட பால் பூத் வரும் டி சர்ட் அணிந்த பிகர்கள் அடடே! அடடா! என டா போட வைக்கிறார்கள் # காலை எழுந்தவுடன் படிப்பு வாசக பனியன்


====================


20 உழவர் சந்தையில் தேங்காய் வாங்கும்போது அதை கையில் எடுத்து தட்டிப்பார்த்தே வரத்தேங்காயா? இளநியா?னு ஜாதகத்தையே கணிப்பவன் தமிழன்


========================

0 comments: