Sunday, July 27, 2014

"வைரமுத்துவுடன் வேலை செய்ய் யோசித்தார் மணிரத்னம்.." - கே.பாலசந்தர்

1.வருமான வரித்துறையுடன்  ஜெ திடீர் சமரச மர்மம் என்ன?- கருணாநிதி  # தலைவா! 2 ஜி,ல கலைஞர் டி வி 200 கோடி மேட்டர்ல நாம என்ன செஞ்சோம்?


====================

2 என்னைவிட என் படங்கள் பெரிதாக இருக்க வேண்டும்: சூர்யா  # நல்ல வேளை , இந்த ஸ்டேட்மெண்ட்டை நமீதா சொல்லலை!


======================3 தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு அறவே இல்லை;-் ஜெ #நல்ல வேளை.இதுக்கு அம்மா மின்சாரம் னு பேர் வைக்கலை.ஷாக் நியூஸ் ஆகி இருக்கும்


=================


4 கச்சத்தீவை திரும்ப பெறக்கோரி வழக்கு: கருணாநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு # அவர் என்னமோ அடமானம் வெச்ச மாதிரிபேசறாங்க்ளே?


===============

5  ரிலையன்சுக்கு மேலும் ரூ.3,475 கோடி அபராதம் பாராளுமன்றத்தில் தகவல் # சங்கமே அபராதத்துல தான் ஓடிட்டிருக்கு


================


6  முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர் . # நல்லா விசாரிங்க.பெரிய பண முதலை யா இருக்கும்


==============7 மேல் சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம் # சிகிச்சை சரியா செய்யலைன்னா டாக்டர் தலை மேலயே 1 போடுவாரோ?


==============8  720 மணிநேர சினிமாவிற்கு 72 நிமிட டீசர்: 2020ல் படம் ரிலீஸ் # படத்தோட டைட்டில் ரயிலா?,ரொம்ப நீளமா இருக்கும் போல


===============


 9  மாறிமாறி கூட்டணி வைத்ததால் பா.ம.க. தோல்வி அடைந்தது: ராமதாஸ்..# மாறி மாறி கூட்டணி வெச்சதே மொள்ளமாரி ,கேப்மாரி கூடத்தானே ?


================

10 உலகின் மிக உயரமான துருக்கி டீன்ஏஜ் பெண் 7 அடி # கைக்கும் எட்டலை வாய்க்கும் எட்டலை வெத்தலை பாக்கு பத்தலை சொந்த ஊரு குளித்தலை


=================


11  விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் 299 காலியிடங்கள் # இன்னும் ஒருத்தனை காலி பண்ணிட்டா ரவுண்டா.300 காலி இடம் ஆகிடும்


===============


12  திருமண உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்படுகிறது: அமைச்சர் வளர்மதி. # மேடம்.அப்டியே திருமண உதவி பொண்ணும் பாத்துக்குடுத்துட்டா தேவலை


================


13 குலசேகரம்- இளம்பெண் குளித்ததை எட்டிபார்த்த எஸ் ஐ கைது # சத்தம் இல்லாம பார்த்திருக்கலாம்.இது என்ன சோப்?னு கேட்டு மாட்டிக்கிட்டாராம்


=============


14  23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் அமலா # அமலா போனார் அமலாபால் வந்தார் ்.இப்போ அமலாபால் போனார்.அமலா வந்தார் டும் டும்டும்


================


15 உதயநிதி ஸ்டாலினுக்கும்- நயன்தாராவுக்கும் காதல். -வார இதழ் # நிதி இருக்கும் இடம் நடிகைகள் காதல் (!!),உதயம் ஆகும் இடம்===================


16  ஆண்டிப்பட்டி-கள்ளக்காதல் ஜோடி தற்க்கொலை முயற்சி ; காதலி சாவு # காதலன் பிளான் பண்ணி விஷத்தை வாய்லயே.வெச்சிருந்து கொப்புளிச்சிருப்பான்.\=================


17   நூன் ஷோவில் பிக் அப் ... மேட்னியில் பேக் அப்.. இதுதான் இன்றைய காதல் -T R  # தன் பையன் பண்றதைப்பார்த்துட்டு தரணி பூரா இப்டி-னு பரணி?
=================
18 "வைரமுத்துவுடன் வேலை செய்ய் யோசித்தார் மணிரத்னம்.." - கே.பாலசந்தர் # அவருக்கு தமிழ் மணிமுத்தாறு ஆறு மாதிரி கொட்டும்.இவருக்கு சுருக் தமிழ்


===============


19 பாமக ஆரம்பித்து 25 ஆண்டுகளாகியும் ஆட்சி அமைக்காதது வருத்தமளிக்கிறது - ராமதாஸ்
# நல்ல வேளை அமைக்கலை.மகிழ்ச்சி அளிக்கிறது!


===============


20 தி.மு.க.வை வெறுத்தவர் அல்ல காமராஜர்: கருணாநிதி .# தியேட்டர் நல்லாருக்கு தான்.ஆனா ஓடிட்டிருக்கும் படம் தான் சரி இல்லை


===================

0 comments: