Sunday, July 27, 2014

ஐஸ்டிக் - மாடர்ன் ஃபிகர்களுக்கான புதிய கண்டு பிடிப்பு

1. லஸ் கார்னர் ல் நகைக்கடை வைத்தால் நெக்லஸ் கார்னர் ஆகி விடும்


==================


2 அன்பே! வளர்மதி! உனக்கு மூளை தினம் தினம் வளர்ந்துட்டே இருக்குமா?


====================


3 பொதுவா பொண்ணுங்க கிட்டே அவங்க செய்யும் தப்பை நாம சுட்டிக்காட்டுனா கண்டுக்கமாட்டாங்க.இன்னொரு பெண் மூலம் சொன்னா கேட்டுக்குவாங்க #தமிழச்சிடா


=====================


4 கம்மல் திருகாணி இவ்ளவ் நீளமாப்போட்டிருக்கும் நீளவேணி! நீ தலையை திருப்பும் திருப்புறசுந்த்ரி ஆகும்போது குத்தாதா?


================5 பஸ்ல ஒரு பிகரு 3 மீட்டர் மஞ்சள் கயிறை மணிக்கட்டில் கட்டி இருக்கு.மாரியம்மன் கோவில் வேண்டுதல் போல.இதை லவ்வினா அவசரத்தாலி ரெடி=======================


6 டவுன் பஸ்ஸில் பூ வைத்த பூவையர் ஏறி விட்டால் மணம் வீசும் மல்லிகைப்பூ பந்தல் ஆகிவிடாதோ !


======================


7 வேட்டி விவகாரம் முற்றுப்புள்ளி வைக்க  பிரதமர் வேட்டி கட்டி  ஒரு நாள் பாராளுமன்றம் போக வேண்டும் . ஹிந்தி கற்பதை விட வேட்டி கட்டுவது எளிது
=======================


8 உப்புமா க்கு இங்க்லீஷ்ல என்ன?னு யாராவது கேட்டா  ஒரு நொடி கூட யோசிக்காம சால்ட்மா -னு சொன்ன கூட்டம்யா நாம எல்லாம் ;-))
=========================9 ஸ்வீட் கேர்ள் -னு எல்லாரும் சொல்லனும்கறதுக்காக டெய்லி லட்டு , ஜிலேபி, மைசூர்பாக்னு ஸ்வீட்டா சாப்பிடுவாள் தமிழச்சி


=========================


10 வாய்மை எனப்படுவது  லிப்ஸ்டிக் எனில் கண் மை எனப்படுவது  ஐஸ்டிக் தானே?
======================


11  1001 எலுமிச்சம்பழ மாலை கோர்த்துட்டு இருக்காங்க ் ஒரு அம்மா.சமயபுரம் மாரியம்மனுக்கு சூட்ட.100 லெமன் சாதம் கழறி ஏழைகளுக்கு தந்திருக்கலாம்


================


12   காமராஜர் பிறந்த தினம்.எளிமையின் இலக்கணம்.முடிந்த வரை எளிமையுடன் வாழ்வோம்.எளியோர்க்கு இயன்ற அளவில் உதவுவோம்  ( 15 7 2014 _)================


13  நாம பசியோட இருக்கும்போது FBல யாராவது இதை சாப்ட்டேன்னு போட்டோ அப்டேட்ஸ் பார்க்கும்போதுஅட்ரஸ் கேட்டு அங்கே போய் அதை பிடுங்கி சாப்பிட்ரனும்


================14  பொண்ணுங்க மனசு அலிபாபா குகை மாதிரி.பாஸ்வோர்டு தெரிஞ்சாதான் உள்ளே போக முடியும். இதுல சோகம் என்னான்னா 40 பேரு தெரிஞ்சு வெச்சுக்கறாங்க


=================


15  இரு கால்களும் இல்லாதவர் ரயிலில் தவழ்ந்து வந்து ரயில் பெட்டியில் சீமாற்றால் கூட்டி பிச்சை கேட்கிறார்.நெஞ்சை நெகிழ வைக்கிறது


================


16  நமக்கு அது இல்லை இது இல்லை என குறை கூறுவதை விட்டு விட்டு நம்மை மிக ஆரோக்யமாக பரிபூரணமாகப்படைத்த இயற்கைக்கு நன்றி நவிலுவோம்


=================


17 குழந்தையாய் நாம் இருக்கும்போதும் ,வளர்ந்த பின் நோயுற்ற பொழுதுகளில் நமக்கு பணி விடை செய்வதிலும் சலித்துக்கொள்ளாதவர்கள் நம் பெற்றோர்


=================


18   கர்ம வீரர் காமராஜர் இறக்கும் முன் கடைசியாகப்பேசியது ( தன் உதவியாளரிடம் ) "வைரவா!விளக்கை அணைத்து விடு!"


==============


19  ரஜினி ரசிகன் கோச்சடையான் எனில் அவன் காதலி ஜடையில் பூ வைத்திருந்தால் பூச்சடையாள்!


==============20   பூக்களை நாரில் இறுக்கிக்கட்டுவது மென் முறை எனவும் ,ஊசியால் காம்பை குத்தி கோர்ப்பது வன்முறை எனவும் தவறாகப்புரிந்து கொள்ளாதீர்!==================


0 comments: