Saturday, July 12, 2014

பொண்ணு ,பதவி ,விருது ,சூப்பர் ஸ்டார் பட்டம்

1. பஸ்ல போகும்போது நொறுக்ஸ் சாப்பிட்டா சங்கோஜமாவும் ,ரயில் ல போகும்போது சாப்பிடறதை பெருமையாவும் நினைச்சுக்குவான் மிடில் கிளாஸ் தமிழன்


=======================


2 தலைவா இயக்குநர் ,அமலா பால் ன் கணவர் விஜய் இயக்கிய சைவம் படம் வசூல் ரீதியில் அட்டர் பிளாப் ஆனது # கோடம்பாக்கம் நியூஸ்


==================


3 ரயில் ல எதிர் சீட் லேடி அந்த பக்கமா திரும்பி சாப்பிடுது.கண்ணு பட்ருமாம்.முதுகு தென் பட்டா தேவலையா?


====================4 விஜய் = எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு.தெரிஞ்சுக்கிட்டவன் ஜெயிப்பான்.அஜித் = நியாயமான வெற்றி தான் நிஜம்.புரிஞ்சுக்கிட்டவன் நிலைப்பான்


========================


5  10 நாள் நடக்கும் புத்தக விழாவில் தினமும் 10 பக்கம் வீதம் 100 பக்க நாவலை ஓசியிலே படிச்சுடுவான் தமிழன்


=======================6 அன்பே! நீ டூ விடும்போது 2 விரல்களே சேரும்போது நாம் சேரக்கூடாதா? அடடே


====================7 பொண்ணுங்க கிட்டேப்பேசும்போது பேச்சு வாக்குல சொல்ற மாதிரி என் கிட்டே கார் இருக்கு , பங்களா இருக்கு -னு அடிச்சு விடுவான் தமிழன்=======================8 ஆஃபீசுக்கு லேட்டா போகும்போது மட்டும் ஆஃபீசுக்கு பின் பக்கமா ஏதாவது ரகசிய கதவு இருந்தா தேவலைனு தோணும்


======================9 கடி “காரம் ” என்பது மிளகாய் ஆனால் கடி இனிப்பு உன் செவ்வாய் ஆகாதா? # ரீ மிக்ஸ் உல்டா கவிதை======================10  காதலி எஸ் எம் எஸ் சில் "அப்புறம்?" என வம்பிழுத்தால் சைவக்காதலன் " அப்பளம்" என்பான்.அசைவக்காதலன் "அந்தப்புரம்"என்பான்


=======================11  பொண்ணு ,பதவி ,விருது ,சூப்பர் ஸ்டார் பட்டம் இந்த நாலும் தேடி வந்தா பெருமை.காசு கொடுத்து வர வெச்சா சிறுமை


=======================


12  கூந்தல் ல இருக்கும் சிக் கைக்கூட பிரிச்சு விடாம " ஹவ் ஈஸ் மை ஹேர் ஸ்டைல்?னு FB ல ஸ்டேட்டஸ் போடுவார்மாடர்ன் தமிழச்சி


=============================

13 சீனியர் தோழியை அக்கா னு கூப்பிட்டா தோழியின் கணவர் மாமா முறை ஆகிடுமே னு முன் ஜாக்கிரதையா அண்ணி னு கூப்பிடுவார் புத்திசாலி தமிழச்சி


======================


14 கட்டுமானப்பணி தொடங்கும்போதே தற்காலிக இடிதாங்கும் கருவி பொருத்தப்பட்டால் விபத்தை தடுக்கலாம் # சென்னை போரூர். 11 மாடிக்கட்டிடம்


====================15 நியூஸ் பேப்பர் இடையே வைத்துத்தரப்படும் பிட் நோட்டீஸ் ஒன் சைடா இருக்கும்.ஏதாவது எழுத பயன்படும்.இப்ப எல்லாம் டபுள் சைடு பிரிண்ட்டா வருது


=======================16 பெண்ணின் இடையில் இருக்கும் வளைவு குழந்தை வாகாக அமரவும் ,தண்ணீர்க்குடம் வைக்க தோதாதகவும்,காதலன் கை வைக்கும் ஸ்டேண்ட் ஆகவும்பயன்படுகிறது


=====================17 விறகு அடுப்பில் சமைக்கும் ஆரோக்யமான மக்கள் வாழும் இடம் குக் கிராமம் என அழைக்கப்படுகிறது கிராமம்======================18 என்னை கை விட்ர மாட்டியே? எனும் பயக்கேள்வி இப்போதெல்லாம் ஆண்களுக்குரியதாய் மாறி விட்டது


====================

19 வாக்களிப்பது ஜனநாயகக்கடமை. வாக் போவது ஆரோக்யன் உரிமை=======================


20 பொரி கடலை சாப்பிடுங்க னு யாராவது பொரி பாக்கெட்டை நீட்டினா நிலக்கடலையை மட்டும் தேடி எடுப்பான் தமிழன்


========================

0 comments: