Thursday, July 10, 2014

வாட் எ மெடிக்கல் மிராக்கிள்!!

=========================


1 இயற்கை எரிவாயு விலை உயர்வு:அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை# விலை ஏற்ற மிகு அரசு!


======================


2 மாவட்ட செயலாளர்களை களையெடுக்க விஜயகாந்த் அதிரடி திட்டம் # பிரேமலதா விசுவாச பெண்களை நியமிச்சு கட்சி பூரா தமனா வா ஆக்கிடுங்க ரமணா!


=======================

 3 விரைவில் 'அம்மா தேயிலைத் தூள்' # இரட்டை இலை தேயாத இலையா ஆக்க என்்னென்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு!


=======================

 4 தோல்வியை வெற்றியாக மாற்றும் ஒரே இயக்கம் காங்கிரஸ்தான் -ஜி.கே வாசன் # அப்போ டுட்டோரியல் காலேஜ் ஓப்பன் பண்ணா "கை"மேல் பலன் உண்டு?


=====================5 மத்திய அரசு அதிகாரிகள் 10 மணிக்கே பணிக்கு வந்துவிட வேண்டும்- மோடி # பத்தரை க்கு வந்தா பத்தரை மாத்துத்தங்கம்னு யாராவது நினைச்சுக்கப்போறாங்க========================


6 அன்பே! சந்தன மரத்தில் அம்மிக்கல் செஞ்சா எப்டி இருக்குமோ அது போல் அசோகப்பேரரசு போல் பரந்து விரிந்திருக்கிறது உன் முதுகுப்பரப்பு


====================


7 விஸ்வரூபம் 2 எந்த நேரமும் வெளியாகலாம்-கமல்# தியேட்டர்லயா?டிடிஹெச் லயா? சொல்லிட்டா குத்த வெச்சு காத்திருப்போம்


=====================8 தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்கள்.. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! # வாவ்! வாட் எ மெடிக்கல் மிராக்கிள்!!


=====================9 26ம் தேதி முதல் 'உங்களுடன் நான்'.. கட்சியினருடன் பேசுகிறார் விஜயகாந்த்! #உங்"கள்"ளுடன் நான் னு டைட்டில் வைங்க.அமோக வரவேற்பு கிடைக்கும்


=====================10 விஜய்க்கு கொடுத்த ?சூப்பர்ஸ்டார் பட்டத்தை திரும்ப பெற்றது குமுதம் # அப்போ அந்த வாரம் சேல்ஸ் ஆன புக் கை திருப்பி கொடுத்தா காசு ரிட்டர்ன் ?


=====================11 பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்த ஆவின் நிர்வாகம் அரசிற்கு பரிந்துரை# சுத்தம்.மக்களுக்கு தண்ணி காட்றீங்க


===============12 அத்தியாவசிய பொருள்களும் விலையேறும் அபாயம் # பெற்ற நம்பிக்கையை ,நல்ல பேரை மோடி கெடுத்துக்கொள்ளும் உபாயம்


======================


13 நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சில கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது: அருண் ஜெட்லி # மேம்படுத்தவா?,படுத்தி எடுக்கவா?


==================


14  புன்னகை மன்னன்ல ஃபுல்லா ரஹ்மான்தான் கம்போஸ் பண்ணார்” : சுரேஷ் கிருஷ்ணா #சூரியன் படத்துல பவித்ரன் க்குபதிலா ஷங்கர் 75% இயக்கிய மாதிரியா?


==================


15  கட்டிப்பிடிக்கும் நெருக்கமான காட்சியில் வில்லனின் மூச்சுக்காற்று என் மேல் படக்கூடாது-அனன்யா # தம் கட்டி கட்டிக்கனும்?


==================

16  நள்ளிரவு சரக்குப் பார்ட்டியில் தயாரிப்பாளர்களுடன் ஆட்டம் போட்ட அஞ்சலி. # அஞ்சலிக்கு டான்ஸ் வராதுனு இனி ஒரு பயலும் சொல்ல முடியாது=====================


17  மாயமான மலேசிய விமானத்தை தேட பல தலைமுறைகள் ஆகும் _ உயர் அதிகாரி # ரிட்டயர் ஆனாலும் கண்டுபிடிக்க மாட்டேன் கறாரா?


==========================18 கோவையில் இன்று நிர்வாகிகள்– தொண்டர்களுடன் விஜயகாந்த்.# கோவைக்காரர்கள் கோவக்காரரிடம் ஜாக்கிரதை========================


19 தமிழகத்தில் காங்.,க்கு சுதந்திரம் வேண்டும்-ஈவிகேஎஸ்.இளங்கோவன் # அர்ஜூன் நடிச்ச சுதந்திரம் டிவிடி வேணா "கை"வசம் இருக்கு.தர்றோம்்


========================


20   கசப்பு மருந்தை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் -அருண் ஜெட்லி # தேர்தல் ல மோடி ஜெயிச்சதும் லட்டு குடுத்துட்டு இப்போ எல்லாருக்கும் அல்வா?


==========================
 

0 comments: