Wednesday, June 01, 2016

இதுதான் என் கடைசி கல்யாணம்

விரோதம் பாராட்டுவதென்பது விரோதிப்பதா? பாராட்டுவதா?


விரோதிப்பதுதான், கலைஞர் டூ ஜெ , ஜெ டூ கலைஞர் எப்படி சினேகமா இருக்காங்க அது போல்-- ============2   புலி, தெறி ரிசல்ட்டில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது வியாழக்கிழமை செண்ட்டிமெண்ட் எல்லாருக்கும் ஒர்க் அவுட் ஆகிடாது
================
இன்று ராமர் பிறந்த தினம், இதுதான் சாக்குன்னு சொந்த சம்சாரம் கூட சண்டை போட்டு மாமியார் வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிடாதீங்க
===================பொண்ணுங்க யாராவது இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னு சொன்னாக்கூட நெட் தமிழன் பாய்ஞ்சு வந்து அருமையாச்சொன்னீங்க, எப்டி உங்களால மட்டும்னு சிலாகிப்பான்
==================
  பசுத்தோல் போர்த்திய புலி கலைஞர்

புலித்தோல் போர்த்திய தெறி வைகோ

===================

பத்தோடு 11,அத்தோடு நீயும் 1 என உன் அன்புக்குரியோர் உன்னை நினைத்தால் நீ தனி ஒருவன் என்று விளக்கிக்கொண்டிராதே.அமைதியாய் ஒதுங்கி விடு


==========
7 ராவணன் ஆண்டாலும் துரியோதனன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என ஒதுங்காதே! நல்லவனை உன் தொகுதியில் தேடு.சுயேச்சையாய் இருந்தாலும் வாக்களி============
8 ஆபீஸில் கம்பெனியில் அரசியலில் புதிதாக சேர்பவர்கள் உடனடியாக தப்பு செய்ய மாட்டார்கள்.மார்க்கட்.ஸ்டடி.செய்ய கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள்
=============9 தெறி வெற்றியை மறைப்பதற்காக அஜித் ரசிகர்கள் ரிட்டர்ன் ஆப் வேதாளம் டேக் போடுகிறார்கள்.நாங்கள் விடமாட்டோம்.ரிட்டர்ன் ஆப் புலி டேக் போடுவோம்
============
10 மதுரை டிஸ்ட்ரிபியூட்டர் Ameer Sultan ‏@DirAmeerSultan = 7 கோடி ரூபாய்க்கு வாங்குனேன். 50% நட்டம் ஆகிடுச்சு


 சார் கவலைப்படாதீங்க. தாணு கபாலி யை காம்பன்சேட் பண்ணி தருவாரு


===============


11

அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள். கோடை காலம் இது. உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக கொளுத்தும் வெயிலில் யாரையும் காக்க வைக்காதீர்.===================


12  உங்கள் கண்ணில் படும் எழுத்து,இலக்கணப்பிழைகளை சம்பந்தப்பட்டவரிடம் சுட்டிக்காட்டுங்கள், அது தமிழுக்கு, தமிழ் ஆசிரியருக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடன்


======================

13  கேரளாவில் ஆல்டைம் ரெகார்டான த்ரிஷ்யம் வசூலை தெறி சர்வசாதாரணமாக கடந்து விடும் என கேரள தியேட்டர் அதிபர்கள் சொல்கிறார்கள்.தமிழனுக்குப்பெருமை

===============


14 வெய்யில் காலத்தில் புத்திசாலித்னமாக வீட்டுக்குள்ளேயே இருந்து நட்சத்திர கிரிக்கெட் மைதானம் செல்வதைத்தவிர்த்த ஆரோக்யத்தமிழர்களுக்கு வாழ்த்து


==============
15 நாட்டில் எல்லோரும் தெறி படம் பார்க்க தியேட்டருக்குப்போய் விட்டதால் எல்லா வீடுகளிலும் திருடர்கள் புகுந்து விட மாட்டார்களா?தமிழக அரசு கவலை==============
16 கிருஷ்ணர் வெண்ணெய் திருடுனார்.நாங்க பால் திருடுனோம்.அப்போ நாங்களும் கடவுளோட அவதாரம்தானே?ன்னு யாரும் கிளம்பலையா?
=============17

விஜய் ரசிகர்களால் தற்போது பாட முடியாத பாடல் - வந்தேண்டா பால் காரன் அடடா


பாடும் பாடல் = வந்துட்டாண்டா பால்காரன் ஓடுடா


==================


18

தோழனோ/தோழியோ பிடிக்கவில்லையென்றால் உடனே விலகிவிடவும் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுவது ஸ்லோ பாய்சன் போல # எ கீ.==================

19

இன்று உலக பாரம்பரிய தினம். நம் முன்னோர்கள், பெற்றோர்கள் நமக்குக்கற்பித்த நம் பாரம்பரியப்பழக்கவழக்கங்களைப்பின்பற்றுவோம்,பயன் பெறுவோம்


==================

20 இதுதான் என் கடைசி கல்யாணம் , இனி எந்தப்பொண்ணையும் நான் கட்டிக்க மாட்டேன்னு மாப்ளை கிட்டே அக்னி சாட்சியா சத்தியம் வாங்கிடனும்


=====================

0 comments: