Friday, November 09, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 9.11.2012 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை


http://imageshack.us/a/img842/1351/stolen2012frontcover696.jpg
1. STOLEN - தி எக்ஸ்பென்டபிள்-2' படத்தை இயக்கி, ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய, சைமன் வெஸ்டின் அடுத்த படைப்பு ஸ்டோலன். இது, ஒரு அதிரடி ஆக்ஷ்ன் த்ரில்லர். வங்கியில் கொள்ளையடித்ததால், "கம்பி' எண்ணி விட்டு திரும்பும், நிக்கோலஸ் கேஜ், தன்னுடைய மகள் காணாமல் போன, தகவல் அறிந்து அதிர்ச்சி அடைகிறார். தன்னுடைய மாஜி நண்பனே, பணத்துக்காக, மகளை கடத்தி வைத்திருப்பது தெரிந்ததும், மகளை மீட்பதற்காக களம் இறங்குகிறார். நண்பரால் கடத்தப்பட்ட மகளை, நிக்கோலஸ் மீட்கிறாரா என்பதை, பரபரப்பாகவும், திருப்பங்களுடனும் விளக்குகிறது, இந்த படம். அமெரிக்காவில் ஏற்கனவே வெளியாகி விட்ட இந்த படம், இந்தியாவில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. நிக்கோலஸ் கேஜ், டானி ஹஸ்டன், மாலின் அஜெர்மன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.நேற்று  8 11 2012 ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போ ராயல் தியேட்டர்ல ஓடிட்டு இருக்கு


 இந்தப்படத்தின் விமர்சனம் படிக்க 

 Stolen (2012) - சினிமா விமர்சனம் - http://www.adrasaka.com/2012/11/stolen-2012.html


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Sep/30/Ajantha_Movie_Press_Meet_Stills/profile_Ajantha_Movie_Press_Meet_Stillsd9214fac9792b161e0572117d49d7302.jpg


2. அஜந்தா -அஜந்தா படம் பார்க்க டிக்கெட் பத்து ரூபாய்: தயாரிப்பாளர் தாராளம்!


Producer offer Just Rs.10 ticket for Ajantha movieராஜ்பாரவிசங்கர் என்பவர் மருந்து மொத்தவியாபாரி. அவருக்கும் சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு அஜந்தா என்ற படத்தை தயாரித்தார். அதை திருமாவளவன் என்பவர் இயக்கினார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாரானது. இளையராஜா இசை அமைத்திருந்தார். 
இந்தப் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் என்ற தமிழக அரசின் விருதையும் பெற்றார். ஆனால் இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கருக்கும், இயக்குனர் திருமாவளவனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் ராஜ்பா ரவிசங்கர் இயக்குனரை நீக்கிவிட்டு தானே இயக்குனர் என்று விளம்பரம் செய்தார். இதனை எதிர்த்து திருமாவளவன் இயக்குனர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்க்திலும் முறையிட்டார். இரு சங்கமும் பஞ்சாயத்து பேசி இயக்குனர் என்று திருமாவளவன் பெயரைத்தான் போட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

இந்தக் கோபத்தில் தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கரும் படத்தை வெளியிடாமல் கிடப்பில் போட்டார். பின்னர் தெலுங்கில் வெளியிட்டார். அங்கு படம் பெருசாக போகவில்லை. இப்போது தமிழில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இயக்குனர் என்று தனது பெயரையும் திருமாவளவன் என்ற பெயரை திருமால் என்று சுருக்கி போட்டும் படத்தை வெளியிடுகிறார். 
படம் பார்க்க வருகிறவர்கள் படத்தின் பேப்பர் விளம்பரத்தை கொண்டு வந்தால் அவர்களுக்கு டிக்கெட் விலை 20 ரூபாய் என்றும், சனி ஞாயிற்று கிழமையில் டிக்கெட்டின் விலை வெறும் பத்து ரூபாய் என்றும் அறிவித்திருக்கிறார். அஜந்தாவின் தமிழ் பதிப்பில்  ரமணா நடித்துள்ளார். மற்ற மொழிகளில் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்துள்ளனர். வந்தனா குப்தா என்ற மும்மை மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார், சுமார் 5 கோடியில் தயாரன இந்தப் படம் இப்போது வெளிவருகிறது.

படத்தின் கதை இதுதான். ஒரு மேடைப்பாடகனுக்கு சினிமாவில் பாடகராக வேண்டும் என்று ஆசை. ஒரு கோவிலில் பாடும்போது அங்கு ஒரு பாடகியை சந்திக்கிறார். அவள் பேரழகி, நன்றாக பாடுவள் ஆனால் பார்வைதிறன் அற்றவள். அவளுக்கு பார்வை திரும்புவதற்காக இவன் பாடி பாடி சம்பாதிக்கிறான். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLektAyyLa0PcOrUjnSVKBJWoDq5CC44Ap5LFotSnEQYcKFTeTE-34FH-YexqcSQhO8oQ2cRc_y-dj4S20HD9yKhwtkFLoRSerFk2cJ1OC-Ev4hhSkRGwBKvlEveFHNUmSt3LaFbXim15o/s1600/Ajantha+Movie+Latest+Hot+Stills+(1).jpg
சினிமாவில் பெரிய பாடகனாகிறான். அவளது கண் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்லும்போது விமான விபத்தில் இறந்து விடுகிறான். பார்வை திரும்பும் இவள் அவனை பார்க்க விரும்புகிறாள். இப்படி 80களில் எல்லோரும் துவைத்து காயப்போட்ட கதைதான் இது. இதன் இயக்குனர் திருமாவளவன் அதன்பிறகு வெண்மணி என்ற படத்தை எடுத்து அதன் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டத்தை கொடுத்தவர். இந்த தயாரிப்பளர் பத்து ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் படத்தை வெளியிடுகிறர்.
கார்த்திக் நடிச்ச நிலவே முகம் காட்டு கிட்டத்தட்ட இதே கதை தான்


எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க சாமி...ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்


3.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh11JiG3Ub4prR8PkP0SGgyQt_ZXQBnvp0IW2PTN9WCxCzX4paPPe7UiH7auDYy5xnkWrtZVc3HW2U30l_7bSShDdkY8ypYF-8DVMs4oTDpsvmyLCGb4jQfHT2TkseOaiVZuxsfGd6l4iI/s1600/freetelugucomedyclips.blogspot.com-pawan-kalyan-Cameraman-Ganga-Tho-Rambabu.jpg 

3. camera man ganga tho rambabu -பவன் கல்யாண் , தமனா , பிரகாஷ் ராஜ் நடிச்ச தெலுங்கு படம். அக்டோபர் 18 வியாழக்கிழமையே ரிலீஸ் ஆகிடுச்சுஆனா ஈரோட்டில் நேற்று ரிலீஸ் . அங்கேயும் ஜெ போல கூட்டுத்தொகை 9 வந்தா ராசின்னு நினைக்கற ஆட்கள் இருப்பாங்க போல .1600 திரை அரங்குகளில் ரிலீஸ் . ரிலீஸ்க்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்ட படம் .காமெடிக்கு பிரம்மானந்தம் இருக்காரு. கோட்டா சீனிவாசராவ் வில்லன் போல... .கோவையில் ப்ரூக் ஃபீல்டில், கே ஜி ஆர்ட்சில் ரிலீஸ்

Cameraman Gangatho Rambabu - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/11/cameraman-gangatho-rambabu.html

 


2 comments:

'பரிவை' சே.குமார் said...

படங்கள் வரட்டும்.... வெல்வது எது என்று பார்க்கலாம் சி.பி. அண்ணா.

Unknown said...

விசய் தம்பி படம் என்ன ஆச்சு?