Thursday, November 08, 2012

Stolen (2012) - சினிமா விமர்சனம்

http://www.desktop4ipad.com/wp-content/uploads/2012/09/stolen-locandina-500x500.jpg 

பேங்க்கை கொள்ளை அடிக்கும் கேடி தான் ஹீரோ , அவருக்கு ஒரே ஒரு சம்சாரம், ஒரு பொண்ணு. அதாவது அவரு ஒரு குடும்பப் ”பாங்க்” கான கொள்ளைக்காரர்.ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு நகைக்கடையை கொள்ளை அடிக்கறதா போலீஸ்க்கு போக்கு காட்டிட்டு ஒரு பேங்க்ல தன் கூட்டாளிகளோட சேர்ந்து 50 கோடி ரூபா கொள்ளை அடிக்கறார்.


 அந்த பிராசஸ்ல  கூட்டாளி ஒரு கொலை பண்ண ட்ரை பண்றான். ஹீரோ அதை தடுக்கறாரு.நம்ம  நோக்கம் கொள்ளை  மட்டும்தான், கொலை அல்ல அப்டினு . அந்த வாக்குவாதம், கைகலப்புல கூட்டாளிக்கு கால்ல துப்பாக்கிக்குண்டு பாய்ஞ்சுடுது.கடுப்பான கூட்டாளி ஹீரோவை அம்போன்னு விட்டுட்டு கார்ல எஸ் ஆகிடறான்.  ஹீரோ போலீஸ்ல மாட்டி 8 வருஷம் ஜெயில்ல இருக்கார். 


 ரிலீஸ் ஆனதும் முதல் வேலையா ஃபேமிலியை தேடிப்போறார். நம்ம ஊரா இருந்தா சம்சாரம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் ,. இது ஃபாரீன்.  புருஷன் ஒரு வாரம்  வர்லைன்னாலே நெக்ஸ்ட் பிராகஜ்ட் என்ன?னு  தேடும் லேடீஸ்தான் அதிகம்,. வேற ஒருத்தன் கூட  இருக்கா. அவர் மகள் அவரை ஏத்துக்கலை.. 


கால்ல அடிபட்டு ஒரு காலை இழந்த ஹீரோவோட கூட்டாளி ஹீரோ மகளை கடத்தி 50 கோடி பணத்துல அவன் பங்கை குடுத்தாத்தான் மக -னு மிரட்டறான்.ஹீரோ கைல பணம் இல்லை. இதனால இன்னொரு பேங்க்கை கொள்ளை அடிச்சு தர்றதா வாக்கு. கால அவகாசம்  12 மணி நேரம். ஒரு பக்கம் போலீஸ் துரத்துது, இன்னொரு பக்கம் ஹீரோ வை விதி துரத்துது. என்ன ஆச்சு என்பதே மிச்ச மீதிக்கதை.. http://www.apnatimepass.com/stolen-movie-poster-25.jpg படம் போட்ட 90 நிமிஷத்துக்கு எடுத்துக்கிட்ட திரைக்கதைல இருந்து கொஞ்சமும் விலகாம ஒரே நேர்கோட்டுல  கதை பயணிக்குது..  சில இடங்கள்ல  காது வலிக்காத அளவு லைட் வெயிட்டுல கனகாம்பர பூவை சுத்தினாலும் ரசிக்கும்படியா தான் படம் இருக்கு. 


ட்ரெஷர் ஐ லேண்ட் படம் மூலம் பலரைக்கவர்ந்த  நிக்கோலஸ் கேஜ் தான் ஹீரோ. நடிப்பை காட்ட எல்லாம் டைம் இல்லை. ஒரே சேசிங்க்தான். ஆனாலும் தன் மகளுடனான வாக்கு வாதம், பொம்மை வாங்கித்தர்றது, கேர்ள் ஃபிரண்ட் கூட அளவளாவுவது என ஆங்காங்கே நடிப்பில் முத்திரை பதிக்கறார்.


ஹீரோவோட கேர்ள் ஃபிரண்ட்டா வர்ற ஃபிகர் ஒரே ஒரு  ஸ்லீவ் லெஸ் லோகட் பனியன்  , நமீதா ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு கிளாமரா வருது. 70 மார்க் போடலாம். காசா? பணமா? மார்க்  தானே? ஊரான் வீட்டு நெய்யா? என் பொண்டாட்டி கையா? ஹீரோவுக்கு மகளா வர்ற ஃபிகர் வெண்ணிலா ஐஸ் க்ரீம் மாதிரி  சைல்டிஸ் முகம். ரொம்ப குழந்தைத்தனமான முகமா இருப்பதாலும் , பாய் கட்டிங்க் பண்ணிட்டு பையன் மாதிரி காட்டி இருப்பதாலும் மேற் கொண்டு ரசிக்க முடியலை (  1000 தான் இருந்தாலும் தமிழன் குடும்பப்பாங்கான பொண்ணைத்தான் ரசிப்பான் ) 


வில்லனா வர்ற ஆள் கிட்டே பெரிய கொடூரத்தை எல்லாம் பார்க்க முடியலை . அவன் அளவில் அவன் பண்ணுவது எல்லாமே நியாயமாத்தான் தோணுது. அவர் மாற்றுத்திறனாளியா வர்றதால ஹீரோவுக்கு டஃப் ஃபைட்  குடுப்பார்னு ஆடியன்ஸ் எதிர்பார்க்க முடியாதது பெரிய மைனஸ்.. 


http://www.apnatimepass.com/stolen-movie-poster-6.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்1. வில்லன் கால்ல குண்டு பட்டதும் கோபத்துல ஹீரோவை விட்டுட்டு போறான்  ஓக்கே, பணத்தை கண்டுக்கலையே? அவ்ளவ் கஷ்டப்பட்டு கொள்ளை அடிச்சதுன்னு யோசிக்க மாட்டானா? 


2. கொள்ளை அடிக்கப்பட்ட பணம் 50 கோடி ரூபாய். ஒரே சூட்கேஸ்ல வெச்சு 2 பேரும் சேர்ந்து தூக்க முடியாம தூக்கிட்டு வர்றாங்க.. 2 சூட் கேஸ் எடுத்துட்டு போய் இருந்தா ஆளுக்குப்பாதிப்பணம், தூக்கிட்டு வரவும் ஈசி, யாரோ ஒரு ஆள் போலீஸ்ல மாட்டினாலும் இன்னொரு ஆள் எஸ் ஆகலாம், அப்படி எல்லாம் யோசிக்க மாடாங்களா? 


3. ஹீரோ போலீஸ் கார்ல எஸ் ஆகறார். போலீஸ் ஆஃபீசர்ஸ் நோட் பண்ணி வயர்லெஸ்ல தகவல் தர்றாங்க.. அது ஹீரோவுக்கும் தெரியுது. பின்னும் ஏன் அதே வண்டில போய் தன் லொக்கேஷனை காட்டிக்கொடுக்கறார்? வணடியை ஏன் மாத்தலை? 4. ஹீரோ வில்லன் கொடுத்த ஃபோனை வில்லனை டைவர்ட் பண்ண ஓடும் ரயிலில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் சைலண்ட்  மோடுல  வெச்சுட்டு வர்றார். அதாவது ஹீரோ அந்த ரயில்ல போற மாதிரி போக்கு காட்ட.. அது ஓக்கே. ஆனா அப்படி ஒரு புது ஃபோனை அப்படி பெப்பெரப்பேன்னு விட்டுட்டுப்போனா பாசஞ்சர் யாராவது எடுத்து இறங்கிட்டா லொக்கேஷன் மாறாதா? ஏதாவது பேப்பர்ல சுத்தி குப்பை பெட்டி மாதிரி செட் பண்ணி வைக்க வேணாமா? 


5. வில்லன் தான் செத்துட்டதா போலீசை நம்ப வைக்க  க்ரைம் நாவல்ல வர்ற மாதிரி ஆல்ரெடி செத்துப்போன ஒரு டெட் பாடியை எரிச்சு அதுல தன் கை விரல்களை வெட்டி போட்டுடறான்.டெட் பாடியையும் கண்டம் துண்டமா வெட்டிடறான். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல செத்தது அவன் தான்னு போலீஸ் நம்பிடறாங்க.. அது எப்படி?  ஆல்ரெடி இருக்கும் பாடியோட பிளட் க்ரூப், வில்லனோட கை விரல் பிளட் க்ரூப் எல்லாம் வேற வேற. அதை கண்டு பிடிக்க மாட்டாங்களா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல  வெட்டப்பட்ட கை விரல் ஆயுள், டெடெ பாடியோட செத்துப்போன டைம் இரண்டும் மாறு படுமே? 

http://www.showbizjunkies.com/wp-content/uploads/2012/08/stolen-trailer.jpg6. வில்லன் வாடைகை டாக்ஸில ஹீரோவோட மகளை கடத்தறான்.அந்த வண்டியோட லொக்கேஷன் எந்த ரூட் என்பதை டாக்ஸி ஓனரை கேட்டா தெரிஞ்சுடும்னு வில்லனுக்கு தெரியாதா? அவன் ஏன் வண்டியை மாத்தாம அதே வண்டில லூஸ் மாதிரி சுத்திட்டு இருக்கான்? 


7. க்ளைமாக்ஸ் ல மணி எக்ஸேஞ்ச் பண்றப்ப வில்லனுக்கு ஹீரோவோட மகளை ஒப்படைக்கும் ஐடியாவே இல்லை. அவளை ஹீரோ கண்ல காட்டவும் இல்லை,.தங்கத்தை வாங்கிட்டு கொல்லப்பார்க்கறான். எதுக்கு அவ்வளவு நேரம் மகளை கூடவே வெச்சிருக்கனும்? 8. ஹீரோ பேங்க்ல கொள்ளை அடிச்ச தங்கத்தை வில்லன் கிட்டே ஒப்படிக்கும் முன்பே “ என் மகளை கண் ல காட்டு” அப்டினு டிமாண்ட் பண்னவே இல்லையே? அவ உயிரோடதான் இருப்பான்னு என்ன நிச்சயம்? முதல்ல கன்ஃபர்ம் பண்ணிட்டுத்தானே தங்கத்தை குடுக்கனும்? 


9. ஒரு வெல்டிங்க் பட்டறை வெச்சிருக்கும் புத்திசாலி  தனி மனிதனா ரொம்ப ஈசியா பேங்க்கை கொள்ளை அடிக்க முடியும் என்பது மாதிரி காட்டி இருக்கும் பேங்க் கொள்ளை மகா அபத்தம். 10. பேங்க்கில் வெல்டிங்க் மிஷின் போட்டு உருக்கி தங்கத்தை ஹீரோ கபளீகரம் பண்றான் , ஓக்கே. தங்கத்தோட இருப்பு குறையும்போதே அலாரம் அடிக்காதா? எல்லாம் முடிஞ்ச பின் ஃபயர் சர்வீஸ் வண்டி வருது.. 

http://mimg.sulekha.com/sameera-reddy/stills/1_sameera-reddy-stills01.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. பாட்டை கேட்டுட்டே கொள்ளை அடிக்கப்போறது உன் செண்ட்டிமெண்ட்டா இருக்கலாம், அதுக்காக 6 வருஷமா ஒரே பாட்டா? செம போர். பாட்டை மாத்துப்பா.. 


2. எந்த ஒரு அப்பாவும் தான் தப்பு பண்றதுக்கு முன்னே தன் பொண்ணு கிட்டே ஃபோன் பண்ணி பேசறது சகஜம் தான்


3. இதுக்குத்தான் ஆம்பளைங்களோட சேர்ந்து நான் வேலை செய்யறதில்லை. சுலப்மா செய்ய வேண்டிய வேலையை சிக்கல் ஆக்கி லேட் பண்ணிடுவாங்க.. 4. நாங்க பணக்காரங்க ஆக் இன்னும் 2 நிமிஷம் தான் இருக்கு.. இலக்கை நெருங்கிட்டோம் 


5. உங்க ஒயிஃப் எப்படி இருக்காங்க.. 

 ரொம்ப நல்லா இருப்பா-னு தோணுது

 யு மீன் டைவர்ஸ்டு? 

 யா


6. குளிர்காலம் முடிஞ்சதும் அணில் எப்படி பொந்துக்குள்ளே போய் பதுங்குதோ அப்படி நீ..  ஜெயில் லைஃப் முடிஞ்சதும் இங்கேதான் வருவேன்னு எதிர்பார்த்தேன் 7. அன்பு நேரத்தை , காலத்தை மறக்க வைக்கும் , காலமும், நேரமும் அன்பை மறக்க வைக்கும்8.  விட்டா பார்வையாலயே என்னை சாப்ட்ருவே போல .. 

 எப்போ நாம சேரப்போறோம்? 

 உன் சம்சாரத்துக்கு ஃபோனை போட்டு சொல்லவா? 


 ஆளை விடம்மா. கொஞ்ச நேரம் ஜாலியா பேச விட மாட்டியே? 9. க்ரிமினல் மாஸ்டர்னு அவனை சொல்றதை நாங்க ஒத்துக்க மாட்டோம். அப்படி மூளைக்காரனா இருந்தா ஏன் ஜெயில்ல மாட்டறான்? 8 வருஷம் களி சாப்பிடறான்?10. மூளைல சுட்டா நீ டக்குன்னு செத்துடுவே. வயித்துல சுட்டா அவ்ளவ் சீக்கிரம் சாக மாட்டே. 7 நாள் ஆகும்11. ஆமா, ஜெயில்ல இருக்கும்போதே பேங்க் கொள்ளை பற்றி யோசிச்சியா? 

 ஆமா, வேற வேலை.. அதும் இல்லாம உள்ளே ரொம்ப போர் அடிச்சுது


12. டாடி, ஃபோன் பண்ணி குப்பைக்காரனை வரச்சொல்லவா? 

 எதுக்கு?

 பின்னே, நீங்க சமைச்சா யார் சாப்பிடுவது?

சி.பி கமென்ட் - ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். பெண்களும் பார்க்கும் விதத்தில் தான் படம் இருக்கு. ஜேம்ஸ் பாண்டின் ஸ்கை ஃபால் பார்த்து நொந்து போன ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு இது ஆறுதலான படம்.அதே சமயம் பிரமாதமான படமும் அல்ல.. 


http://www.aceshowbiz.com/images/still/stolen-2012-picture07.jpgடெக்கான் கிரானிக்கல் எதிர்பார்ப்பு ரேங்க் - 6 / 10 டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 / 5


 ஈரோடு ராயலில் படம் பார்த்தேன்.

0 comments: